Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:41:14 AM
வெள்ளி | 17 ஆகஸ்ட் 2018 | துல்ஹஜ் 6, 1438 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:2715:4218:3919:51
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:10Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்11:25
மறைவு18:33மறைவு23:34
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5805:2305:48
உச்சி
12:21
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:5519:2019:45
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
Namemackie noohuthambi
Placekayalpatnam
Approved Comments629
Rejected Comments25
கருத்துக்கள்
எண்ணிக்கை
629
பக்க எண்
1/63
பக்கம் செல்ல
செய்தி: திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து காயல்பட்டினத்தில் அமைதிப் பேரணி & இரங்கல் கூட்டம்! பெருந்திரளானோர் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...நகைச்சுவை முதல்வர்
posted by mackie noohuthambi (kayalpatnam) [12 August 2018]
IP: 106.*.*.* India | Comment Reference Number: 46250

கலைஞர் கருணாநிதி அவர்களின் பல்வேறு நலத்திட்ட பணிகளை பற்றி பேசுவதற்கு நாட்கள் பல வேண்டும் அவர் சட்டமன்றத்தையும் நிருபர்கள் சந்திப்பையும் நகைச்சுவையுடன் அணுகிய செய்திகளை பார்க்கும்போது ஒரு பிஸியான முதலமைச்சர் எப்படி இவ்வாறு நகைச்சுவைகளுடன் தனது ஆளுமையை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார் என்று ஆச்சரியமாகவே இருக்கிறது. அவர் இவ்வளவு நாட்கள் வாழ்வதற்கே அந்த நகைச்சுவை உணர்வுகள்தான் கிரியா உக்கியாக அமைந்திருக்கிறது.

கலைஞருக்கு ''ஆளுயர மாலை'' அணிவித்தபோது அவர் சொன்னார், இது ''ஆள் உயர மாலையா?'' இந்த ஆள் உயர நீங்கள் மாலை அணிவித்திருக்கிறீர்கள் நன்றி என்று சொன்னாராம்..

கவிஞர் வாலி அவர்கள் எம்ஜியார் நடிக்கும் படத்துக்கு பாட்டு எழுதும்போது ''நான் அளவோடு ரசிப்பவன்'' என்று ஆரம்பித்து அடுத்த வரிகள் சட்டென்று வராமல் இருந்த போது கலைஞர் உள்ளே நுழைந்து என்ன வாலி அவர்களே பாட்டு ரெடியாகிவிட்டதா என்றாராம். தலைவரே முதல் அடி வந்து விட்டது அடுத்த அடி வரவில்லை என்றார் வாலி. முதல் அடியை சொல்லுங்கள் பார்ப்போம் என்றாராம் கலைஞர். ''நான் அளவோடு ரசிப்பவன்..''..அப்படியானால் அடுத்த வரி ''எதையும் அளவின்றி கொடுப்பவன்'' என்று போடுங்கள் என்றாராம் கலைஞர். இப்போது பாட்டு ரெடியாகி விட்டது. எம்ஜியார் அடுத்த படி உள்ளே வந்து பாட்டு ரெடியா என்றாராம். ஆமாம். ரெடி...எங்கே பாடுங்கள்.

நான் அளவோடு ரசிப்பவன் எதையும் அளவின்றி கொடுப்பவன்...

எம்ஜியாருக்கு சந்தோஷம் மிகுதியால் வாலியின் கன்னத்தில் முத்தமிட்டாராம். வாலி சொன்னார் நீங்கள் முத்தம் தரவேண்டியது எனக்கல்ல கலைஞருக்கு அவர்தான் இரண்டாவது அடியை எடுத்து தந்தார்.

எப்படிப்பட்ட நினைவாற்றல் பேச்சாற்றல் எழுத்தாற்றல் கவியாற்றல். கலைஞரின் பன்முகத்தன்மையை என்னவென்று சொல்வது.

விரல் நோக எழுதியவர்
குரல் நோக பேசியவர்
கால் நோக நடந்தவர் ஆனால்
யார் மனமும் நோகாமல் நாசூக்காக காய் நகர்த்தியவர் .
தமிழக மக்கள் உள்ளம் எல்லாம் நிறைந்தவர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: காயல்பட்டினத்தில் போதைப் பொருள் நடமாட்டத்தைத் தடுப்பது குறித்து அனைத்து ஜமாஅத் கலந்தாலோசனைக் கூட்டம் நடத்தப்படும்! செய்தியாளர் சந்திப்பில் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் அறிவிப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...இறைவனின் திருப்பெயரால்......
posted by mackie noohu thambi (kayalpattinam ) [11 August 2018]
IP: 106.*.*.* India | Comment Reference Number: 46248

இறைவனின் திருப்பெயரால்... அல்லாஹ்வின் திருப்பெயரால் என்று எங்கு பார்த்தாலும் காயல்பட்டினத்திலிருந்து வெளிவரும் எல்லா துண்டறிக்கைகளிலும் அழைப்பிதழ்களிலும் தலை எழுத்தாக குறிக்கப்படும் இந்த நகரிலா போதை பொருள்.... கேட்கவே அதிர்ச்சியாக இருக்கிறது என்று ஒரு காவல்துறை அதிகாரி கூறினார்.

திரையரங்கு இல்லாத ஊர்
மதுக்கடை இல்லாத ஊர்
காவல் நிலையம் இல்லாத ஊர்

என்றேல்லாம் சரித்திரத்தில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப் பட்டு வரலாற்று சிறப்பு மிக்க ஊராக மற்ற மாவட்டங்களுக்கும் மற்ற மாநிலங்களுக்கும் எடுத்துக் காட்டாக இருந்த ஊருக்கு ஏற்பட்டிருக்கும் இந்த அவமானத்தை துடைத்தெறிய ஊர் நலம் காக்கும் நல்லவர்கள் கூடும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவேண்டும் என்ற பேரவா இருந்தாலும் தவிர்க்க முடியாத உடல்நிலை காரணத்தால் அதில் கலந்து கொள்ள முடியாமல் போய்விட்டது.

எல்லா மக்களின் மனத்திலும் இந்த கவலை பற்றிக் கொண்டு எரிகிறதை பார்க்கிறேன்.இது இஸ்லாமிய விழுமியங்களை தங்கள் வாழ்வியலாக கொண்டிருக்கும் நமது மக்கள் விரும்பி ஏற்றுக் கொண்டதல்ல எங்கிருந்தோ இறக்குமதியாகியுள்ள இந்த சாபக் கேட்டுக்கு நமது இளைஞர்கள் பலிகிடாவாக்க பட்டிருக்கிறார்கள் என்பதுதான் நிதர்சன உண்மை.

இளமைப் பருவம் தீமைக்கு வெகு விரைவில் அடிமையாகி விடுகிறது. மார்க்க அறிவு குன்றிப் போனதையே இது காட்டுகிறது. எல்லா பள்ளிவாசல்களிலும் மார்க்க விஷயங்களை போதிக்கும் மதராஸாக்களிலும் ஊரில் நடக்கும் எல்லா திருமண கந்தூரி சொற்பொழிவு மேடைகளிலும் இந்த இழிவை பற்றி பேச வேண்டும் சுதந்திர தின உரைகளிலும் இது இடம் பெற வேண்டும்.

நேற்று நடைபெற்ற கஸ்வா கலந்துரையாடல் நிகழ்ச்சியிலும் சகோதரி பர்வீன் சுல்தானா அவர்கள் பதின்ம வயதினரிடம் எப்படி இந்த தீமை பற்றிக் கொள்கிறது என்று விரிவாக சொன்னார்கள். சுகந்தம் தரும் நீண்டு உயர்ந்து நின்று மணம் வீசும் சந்தன மரத்தை நச்சுப் பாம்புகள் சுற்றி பின்னிக்கொள்கின்றன என்று சொன்னார்கள்.

தீயவை தீய்மை பயக்கும் ஆதலின்
தீயவை தீயினும் அஞ்சப்படும்
என்று வள்ளுவம் சொல்கிறது.

ஒருவர் ஒரு தீய செயலுக்கு துணைபோனாலோ அல்லது அந்த தீய செயலை பரிந்துரைத்தாரோ அந்த தீமை நடக்கும் காலமெல்லாம் அந்த தீமையில் அவருக்கும் ஒரு பங்கு உண்டு என்று திருமறை சொல்கிறது. இந்த தீய சக்திகளை நமதூரிலிருந்து அப்புறப்படுத்த இன்று எடுக்கப் படும் எல்லா முடிவுகளுக்கும் நமதூர் மக்கள் எல்லோரும் ஆதரவு தெரிவிக்க வேண்டியது நமது தார்மீக மார்க்க கடமை.

நமது மண்ணின் மைந்தர் அபூபக்கர் தலைமையில் இந்த கூட்டம் கூட்டப்ப படுவது மிக பொருத்தமானது. சட்டமன்றம் வரை இந்த செய்தியை கொண்டு சென்று ஒரு அரசாணை பிறப்பிக்க கூட அவருடைய பங்களிப்பை அவர்கள் செய்ய முடியும். புரட்சி தலைவி ஜெயலலிதா அவர்களாலும் இன்றைய ஆட்சியாளர்களாலும் மிகவும் மதிக்கப்படும் ஒரு தலைவராக அவர்கள் உயர்ந்து நிற்கிறார்கள் அல்ஹம்து லில்லாஹ். அல்லாஹ் உங்கள் முயற்சிகளுக்கு துணை நிற்பானாக ஆமீன்.

இதனை இதனால் இவண் முடிக்குமென்றாய்ந்து
அதனை அவன் கண் விடல்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: லட்சக்கணக்கானோரது கண்ணீருக்கிடையே கலைஞர் மு.கருணாநிதியின் உடல் சென்னை மெரினா கடற்கரையில் நல்லடக்கம்! காயல்பட்டினத்தில் கடைகள் அடைப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...என் உயிரும் மேலான உடன்பிறப்புக்களே
posted by mackie noohuthambi (kayalpatnam) [09 August 2018]
IP: 106.*.*.* India | Comment Reference Number: 46243

இன்னி விரலால் சூரியனை மறைக்கப் பார்க்கிறார்கள். கலைஞரின் உடலை வேறு எங்கும் அடக்கிவிட்டால் அவரது சுவாசம் அடங்கியதுபோல் அவருடைய செல்வாக்கும் அடங்கிவிடும் ஓரத்தில் ஒதுங்கிவிடும் என்று நினைத்தவர்கள் இப்படி ஒரு இமாலய தவறை செய்திருக்கவும் தேவை இல்லை, இப்படி மூக்குடைபட்டு போயிருக்கவும் தேவை இல்லை, விநாச காலே விபரீத புத்தி.

உலகமே உற்று நோக்கி மூக்கில் விரல் வைத்து பார்க்கும் அதிசயம் நிகழ்ந்து இருக்கிறது.

மரணம் எல்லோருக்கும் சம்பவிக்கும் ஒரு நிகழ்ச்சிதான். கடவுளை நம்பினாலும் நம்பாவிட்டாலும் ஆண்டவனே இல்லை என்று ஆர்ப்பரித்தாலும் அவர்கள் பேச்சை இறைவன் லட்சியம் செய்வதில்லை. ஏனெனில் அவன் தான் எல்லோரையும் படைத்து பரிபாலித்து உணவளித்து பின் தன் பக்கம் அழைத்துக் கொள்பவன்.

தான் பாசத்துடன் பெற்று வளர்த்த பிள்ளை தன்னை அலட்சியம் செய்தாலும் எந்த தந்தையும் அவனை வெறுப்பதில்லை. கடுகளவாவது தந்தை மகன் பாசம் இருக்கவே செய்யும். அப்படி இருக்கும்போது உலகெலாம் படைத்தது ஆட்சி செய்யும் இறைவன் அவர்களை கடிந்து கொள்வதில்லை. மாறாக மற்ற பிள்ளைகளுக்கு செய்யும் உதவியைவிட இவர்களுக்கு அதிகமாகவே செய்கிறான்.

விவிலியத்தில் வரும் கதைபோல் THE PRODIGAL SON என்றே இறைவன் அவர்களை நினைத்துக் கொள்வான். ஆனால் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்களை கடவுளுக்கும் மேலாக நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள் அதுதான் வேதனைக் குரியது.

நீதிபதிகள் இந்த இக்கட்டான நிலையிலும் தங்கள் தீர்ப்புக்களை மனித நேயத்துடன் வழங்கி கலைஞரை கௌரவத்திருக்கிறார்கள். சட்டங்களை பார்க்காமல் சரித்திரத்தை பார்த்திருக்கிறார்கள். மத்திய அரசு இந்திய தேசிய கொடியையே அரைக் கம்பத்தில் பறக்கவிட்டு தனக்கு பெருமை சேர்த்துக் கொண்டது. கலைஞரின் உடலை போர்த்தியிருந்த தேசிய கொடியை அவரது மகனிடம் ஒப்படைத்தது இன்னொரு மைல் கல்

ஆனாலும் புரட்சி தலைவி அவர்களை மெரினாவில் நல்லடக்கம் செய்தது கூடாது என்று வழக்கு தொடுத்தவர்களை அந்த வழக்குகளை வாபஸ் பெறுவதற்கு ஒரு நல்ல சந்தர்ப்பமாக இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டார்கள். அரசியல் சாணக்கியம் என்பது எல்லோருக்கும் கைவந்த கலை ஆகி விடாது. எப்படியோ அண்ணாவின் சமாதி அருகே கலைஞர் அடக்கம் செய்யப் பட்டு விட்டார்.

49 ஆண்டுகளுக்கு பிறகு அண்ணாவின் மறைவின் போது அண்ணாவின் சமாதிக்கருகில் நின்று கலைஞர் சூளுரைத்தபடி அண்ணாவின் இதயத்தை இரவலாக பெற்றிருந்து அதை மீண்டும் அவர் காலடியில் கொண்டு சேர்த்து விட்டார். ஆனால் கலைஞரின் இதயம் இப்போது அவரது தொண்டர்களின் இதயங்களுடன் கலந்து நிற்கிறது.

கலைஞரின் சமாதியில் அந்த மெரினாவின் வீதியிலே கருணாநிதியின் சமாதியில் வருவோர் போவோர் எல்லோரும் படித்து செல்லும் வாசகமாக....''என் உயிரிலும் மேலான என் அன்பு உடன்பிறப்புக்களே'' என்ற வாசகம் பொறிக்கப்பட வேண்டும் அதுதான் திராவிட முன்னேற்ற கழக தொண்டர்களுக்கு என்றென்றும் உற்சாகம் தரும் ஒரு அமுத மொழி, தங்க பஸ்பம். தாரக மந்திரம்.....

தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு இந்த வேண்டுகோளை இந்த இணயதளம் மூலம் சமர்ப்பிக்கிறேன். ....

ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை. ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும் அலை கடல் ஓய்வதில்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: திமுக தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கலைஞர் மு.கருணாநிதி காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...மூன்றெழுத்து மந்திரம்
posted by mackie noohuthambi (kayalpatnam ) [09 August 2018]
IP: 223.*.*.* India | Comment Reference Number: 46242

திராவிட முன்னேற்ற கழகம் திமுக
திருக்குவளை முத்துவேல் கருணா நிதி. திமுக

இரு அதிசயமான வசனங்கள். ஒரு கட்சியின் பெயரின் சுருக்கமும் அந்த கட்சியின் தலைவரின் பெயரின் சுருக்கமும் இப்படி அமைந்திருப்பது அதிசயம்தான். அதியசயமே அசந்து விடும் அதிசயம் கலைஞர்

ஆட்சி பொறுப்பில் இருப்பதுதான் தனக்கு சுமையான ஒன்று மற்றெல்லாம் சுவையானதும் சுகமானதும்தான் என்று சொல்கிறார் கலைஞர். அப்படி ஒரு சுமையான ஆட்சிப் பொறுப்பில் சட்டமன்ற நிகழ்ச்சிகளில் அவர் பங்குகொள்ளும் எதிர்க்க கட்சியினரின் கடுமையான கேள்விக் கணைகளுக்கும் நகைச்சுவையாக பதிலளிக்கும் அற்புத ஆற்றல் மிக்கவர்.

உங்கள் ஆட்சி பாசிஸ்ட் ஆட்சி என்கிறார் ஹண்டே. பாசயிஸம் என்று சொல்லுங்கள் என்கிறார் கலைஞர்.

இது மூன்றாம் தரமான ஆட்சி என்கிறார் ஹண்டே. இப்போதும் அதே நகைச்சுவையுடன் கலைஞர் சொல்கிறார்.

இல்லை இது நான்காம் தரமான ஆட்சி ஆமாம் சூத்திரர்கள் ஆட்சி.

இன்னும் எவ்வளவோ சொல்வதற்கு இருக்கிறது.

இறுதியாக தி ஹிந்து தமிழ் தலையங்கம் சொல்வதுபோல்

எல்லா அரசியல்வாதிகளை போல கருணாநிதியும் தவறுகள் இழைத்தார். விமர்சனங்களை எதிர்கொண்டார். ஊழல் குடும்ப வாரிசு அரசியல் குற்றச்சாட்டுக்கள் அவருடைய இறுதிக் காலத்தில் அவருடைய புகழை குலைத்தன பெரியார் அண்ணா வழியில் அவற்றையும் அவர் தவிர்த்திருந்தால் அவருடைய இடம் இன்னும் உயர்ந்திருக்கும்.

தெற்கே இருந்து பிறந்த சூரியன் உலகமெங்கும் நிறைந்திருக்கும். கலைஞரும் மனிதன்தானே.

நீங்கள்தான் கடவுளை நம்பவில்லையே நீங்கள் எப்படி கடவுளை நம்பும் முஸ்லிம்களை நம்புகிறீர்கள் என்று அவரிடம் கேட்டபோது அவர் சொன்ன பதில் முஸ்லிம்கள் உள்ளங்களில் என்றும் நிலைத்து நிற்கும்.

நான் கடவுளை நம்பாவிட்டாலும் கடவுளை நம்புகிறவர்களை நம்புகிறேன்.

இதுதான் கலைஞர்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: அமெரிக்காவில் காயல் மாணவி ‘ஹாஃபிழத்துல் குர்ஆன்’ பட்டம் பெற்றார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...பெற்றோர்க்கு அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக
posted by mackie noohuthambi (kayalpatnam) [03 August 2018]
IP: 106.*.*.* India | Comment Reference Number: 46233

இஸ்லாமிய சூழல்கள் முற்றிலும் நிறைந்து காணப்படும் நமது ஊரில் வைகறைப் பொழுதில் தாய்மார்கள் தங்கள் சின்னஞ்சிறிய குழந்தைகளை எழுப்பிவிட்டு தலைவாரி பளிச்சென உடை அணிவித்து காலை உணவு அளித்து பகல் உணவை டப்பாக்களில் வைத்து தெருவுக்கு கூட்டி வந்து அவர்கள் எதிர்பார்க்கும் xxxxxx பள்ளிக் கூடத்து வாகனம் வந்ததும் மகிழ்ச்சி பொங்க தங்கள் பிள்ளைகளுக்கு டாட்டா சொல்லி ஆங்கிலக் கல்வி மோகத்தில் அவர்களை அனுப்பி வைக்கும் அவல நிலையை இன்றும் கூட நாம் கண்கூடாக கண்டு வருகிறோம்.

எத்தனையோ ஆங்கில கல்வி பள்ளிக் கூடங்கள் நமதூரிலே பெருகி விட்ட பிறகும் கூட இந்த நிலை இங்கு.

ஆனால் லண்டன் அமெரிக்கா போன்ற இஸ்லாமிய வெறுப்பு சக்திகள் நிறைந்து காணப்படும் நாட்டில் வசிக்கும் இஸ்லாமிய சூழல் மிக்க குறைவாக உள்ள இடத்தில இப்படி இளஞ்சிறுசுகள் மார்க்கக்கல்வி கற்று திருமறையை இளம் வயதிலேயே பாராயணம் செய்து பரிசுகளும் வாங்குகிறார்கள் என்றால், இதில் மறைந்துள்ள ஒரு பெரிய ரகசியம் இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இந்த பிள்ளைகளின் அதீத வளர்ச்சிக்கு வித்திட்டு நிற்பது அவர்கள் பெற்றோர்களின் கடுமையான பயிற்று வித்தலும் இஸ்லாமிய மார்க்க நெறியிலே தங்கள் பிள்ளைகள் வார்த்தெடுக்கப் பட வேண்டும் வளர்த்தெடுக்கப் படவேண்டும் என்ற உந்துதல்தான் காரணியாக இருக்கிறது.எனவே இந்த சூழலை மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ள பெற்றோர்களுக்கு நமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வோம். இந்த பெற்றோர்களுக்கு அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக என்று து ஆ வும் செய்வோம்.

சுமார் 30 40 ஆண்டுகளுக்கு முன்னால் லண்டன் அபூபக்கர் ஹாஜி அவர்கள் மக்களாகிய ஜியாத் முஹம்மது அலி ஆகியோர் அவர்கள் தந்தையுடன் பம்பாய் வந்தபோதும் இந்த பிள்ளைகள் லண்டனில் இருந்து வாழ்ந்து கொண்டு இஸ்லாமிய விழுமியங்களை தங்கள் வாழ்வியலுடன் இணைத்துக் கொண்டிருப்பதை நான் கண்டு ஆச்சரிய பட்டேன். அப்போதும் இவர்கள் பெற்றோர்கள்தான் இந்த பிள்ளைகளை இப்படி வளர்க்கிறார்கள் வார்த்தெடுக்கிறார்கள் என்ற உண்மை தெரிந்தது.

எனவே பெற்றோர்கள் மனம் வைத்தால் அவர்கள் பிள்ளைகளை எந்த சூழ்நிலைகளையும் தங்கள் கொள்கை கோட்பாடுகளுக்கு சாதகமாக வளர்க்க முடியும் என்ற உண்மையை இவர்கள் நமக்கு முன்மாதிரியாக இருந்து வாழ்ந்து காட்டுகிறார்கள்.

இந்த செய்தி வெறும் இணையதளங்களில் மட்டும் சொல்லப் பட வேண்டிய செய்தி அல்ல. நமது தாய்மார்களின் இல்லக் கதவுகளை தட்டி சொல்லப் பட வேண்டிய செய்தி அவர்கள் உள்ள கதவுகளை அல்லாஹ் திறந்து விடுவான்.

ஒரு விடியல் பிறக்கும் நமதூரில் இத்தகைய மாற்றம் பிறக்கும் மக்தப்கள் மார்க்கக் கல்வி நிலையங்கள் பெரியவர்களுக்கு மட்டும் அல்ல, இந்த சின்னஞ்சிறுசுகளுக்கும் மிக அவசியம்.

அல்லாஹ் நம் எல்லோருக்கும் இந்த பெற்றோர்களின் சிந்தனையை உண்டாக்குவானாக. நமது பிள்ளைகளும் இந்த சாதனைகளை எட்டிப் பிடிக்க அருள்புரிவானாக. இந்த மழலைகளுக்கும் நமது வாழ்த்துக்களையும் து ஆ க்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

RABBI ZIDHNEE ILMAA ..
BAARAKALLAAHU LAKUM
LAA THOWFEEQA ILLAA BILLAAH ..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: காயல்பட்டினத்தைச் சேர்ந்த டாக்டர் எம்.எஸ்.அஷ்ரஃபுக்கு ‘வாழ்நாள் சாதனையாளர்’ விருது! மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் வழங்கினார்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...இளமை இனிமை புதுமை
posted by mackie noohuthambi (kayalpatnam) [01 August 2018]
IP: 106.*.*.* India | Comment Reference Number: 46229

மருத்துவர் அஷ்ரப் அவர்கள் எனக்கு எவ்வளோ வயதில் இளையவர் திருச்சியில் அவர்கள் மாமா அவர்கள் அவர்களது நிறுவனத்தில் வேலை வாய்ப்பு தந்து எனக்கு ஒரு முகவரியை தந்தார்கள். அன்று மருத்துவர் அஷ்ரப் அவர்கள் தஞ்சை மருத்துவக் கல்லூரியில் பயில்வதற்கு செல்வார்கள். அன்று முதல் இன்று வரை என்னை தனியாக என் பெயர் சொல்லி நூஹுத்தம்பி காக்கா என்றுதான் அழைப்பார்கள்.

என் தந்தை அவர்களுக்கு சிகிச்சை செய்வார்கள் பணம் கொடுத்தால் கோபமடைவார்கள். சாமானியார்களும் அவரை மிக எளிதில் சந்தித்து உரையாட முடியும். ஒரு பிஸியான மருத்துவர் இப்படியெல்லாம் இருக்க முடியுமா என்று யோசிக்கும் அளவுக்கு மக்கள் மனங்களை கவர்ந்தவர்கள். ஆனாலும் இளமை தோற்றம் அவர்களை அரவணைத்துக் கொண்டது.

அவர் சிகிச்சைகளில் புதுமையை புகுத்தி பல சக மருத்துவர்களும் ஆச்சரியப்படும் அளவுக்கு தன்னை உயர்திக் கொண்டவர்கள். நமதூர் kMT மருத்துவ மனையிலும் முக்கிய பதவி வகிக்கிறார்கள் அதே நேரம் LK கல்வி நிலையத்திலும் தனது பங்களிப்பை சிறப்பாக செய்து வருகிறார்கள். அதே நேரம் இஸ்லாமிய மார்க்க கடமைகளையும் தவறாது கடைப் பிடித்து வருகிறார்கள்.

இப்படி பல துறையிலும் தடம் பதித்து சாதனை செய்து வரும் நமது மண்ணின் மைந்தன் அவர்களுக்கு குடியரசுத்தலைவர் விருது அளித்து கௌரவித்தார். இப்போது நமது தமிழக அமைச்சர் அவர்களும் வாழ்நாள் சாதனையாளர் விருது கொடுத்து கௌரவித்துள்ளார்கள். ஆனாலும் வாழ்நாள் சாதனையாளர் விருதோடு அவர்கள் பணி முடிந்து விடாது தொடர்ந்து அவர்கள் நீடூழி வாழ்ந்து இன்னும் பல அரிய விருதுகளை பெற வேண்டும் என எல்லாம் வல்ல அல்லாஹ்வை பிரார்த்திக்கிறேன்.

SOME ARE BORN IN GREATNESS
SOME ACHIEVE GREATNESS..
BUT DR .ASHRAF IS GIFTED WITH BOTH .
IT IS A GREAT AND UNIQUE GIFT FROM ALLAAH .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஜூலை 21 அன்று (நாளை) காயல்பட்டினத்தில் மாதாந்திர பராமரிப்பு மின்தடை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...யானை வாரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே
posted by mackie noohuthambi (kayalpatnam) [21 July 2018]
IP: 106.*.*.* India | Comment Reference Number: 46222

யானை வரும் முன்னே மணி ஓசை வரும் முன்னே என்பார்கள். யானை எங்கிருந்து வந்தாலும் அதற்கு முன்னால் ஒரு மணி ஓசை வரும் அதே போல் நாளை மின்தடை என்றால் அதற்கு முன்னாலே இணையதளங்களில் அந்த செய்தி வந்து விடுகிறது. நாம் முன்னெச்சரிக்கையாக இருக்க அது உதவுகிறது.

சமீப காலமாக இணையத்தளத்தில் அந்த செய்தி வரும் முன்னே முந்தின நாளே இருள் கவ்விக் கொள்கிறது. இரவு பத்து மணிக்கெல்லாம் மின் தடை ஆறாம்பித்து விடுகிறது இன்று இரவும் அப்படி ஒரு நிகழ்வுதான் நடந்தது.

குழந்தைகள் வயது முதிர்ந்தவர்கள் நோயாளிகள் என்று பல தரப்பட்ட மக்களும் இந்த மின்தடையை எப்படி பார்க்கிறார்கள். அவர்கள் மின்வாரியத்தையும் அதில் பணிபுரிபவர்களையும் சபிக்கிறார்கள் கரித்துக் கொட்டுகிறார்கள். பாவம் அவர்களும் மனிதர்கள்தானே.... என்று நாம் சொன்னால் நாளை மின்தடை என்று அறிவித்து விட்டு இன்று இரவே அந்த மின்தடையை அமுல்படுத்திவிடுகிறார்களே என்ன நியாயம் என்று அவர்களிடமிருந்து பதில் வருகிறது.

இதற்கு மாற்று ஏற்பாடே இல்லையா...தமிழகம் .மின்மிகு மாநிலமாக இருக்கவேண்டாம் குறைந்த பட்சம் அறிவிக்கப்பட்ட நேரத்துக்கு முன்னதாக மின்தடை செய்யாத மாநிலமாக இருக்க வேண்டாமா,,,வெளிநாடுகளில் இந்த நிலை இல்லையே ஏன் அது...

IT IS A MILLION DOLLAR QUESTION


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: எதிர்பார்த்தது தவறா அண்ணாச்சி அவர்களே...! “நடப்பது என்ன?” குழுமம் தொடர்பாக சட்டமன்ற உறுப்பினர் பேசியதைத் தொடர்ந்து குழுமம் அறிக்கை!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...நலத்திட்ட நாயகன்
posted by mackie noohuthambi (kayalpatnam) [20 July 2018]
IP: 106.*.*.* India | Comment Reference Number: 46221

காயல்பட்டினம் மக்களால் நலத்திட்ட நாயகன் என்று புகழப்படும் அனிதா அவர்கள் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக திமுகவில் அதிமுகவில் இருந்து தமிழக சட்டமன்றத்துக்கு தொடர்ந்து திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார். அடுத்தடுத்து வரும் தேர்தல்களிலும் அவரே சட்டமன்ற உறுப்பினராக வரும் வாய்ப்புக்கள் உள்ளன. காயல்பட்டினம் மக்களின் வாக்கு வாங்கி அவர்களுக்கு நல்லவிதம் கைகூடி வருகிறது.

தகவல் உரிமை சட்டத்தை கொண்டு வந்த காங்கிரஸ் அரசே தன்னுடைய வலுவை இழந்து வெறும் 44 உறுப்பினர்களை பெற்று நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சியாக வரும் அந்தஸ்த்தைக் கூட இழந்தது ஆனாலும் தொடர்ந்து அவர்கள் தங்கள் ஆதிக்கத்தை தக்க வைத்துக் கொண்டு வருகிறார்கள்.

கலைஞரின் தம்பி இப்படி ஆதங்கப் பட்டு நடப்பதென்ன குழுமத்தின் தகவலை கேட்டு கவலைப் பட்டிருக்க தேவை இல்லை. கலைஞர் அவர்களின் தம்பிமார்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் அவரது குணங்களையும் எதிர்மறையான கருத்துகளையும் நேர்மறையாக எப்படி அணுகி சட்டமன்றத்துக்கு வெளியேயும் உள்ளேயும் நிருபர்களின் பேட்டியையும் எப்படி நகைச்சுவையுடன் சமாளித்தார் என்பதை எல்லாம் ''தெற்கிலிருந்து ஒரு சூரியன்'' என்ற ஒரு புத்தகத்தை படித்தபோது நான் ஆச்சரியப்பட்டு போனேன். அதே நகைச்சுவையுடன் இந்த விஷயத்தை அனிதா அவர்கள் அணுகி பதில் சொல்லிவிட்டு ஊதி விட்டு போய் இருக்கலாம்.

அனிதா அவர்கள் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து காயல்பட்டினத்துக்கு இன்னும் செலவு செய்ய வேண்டியது உள்ளது என்பதைத்தான் நடப்பதென்ன குழுமம் சுட்டிக் காட்டி இருக்கிறது. இதை வரவேற்று நான் உங்க வீட்டு பிள்ளை தொடர்ந்து உங்களுக்கு நலத்திட்டங்களை வழங்குவேன் சட்டமன்ற நிதியிலிருந்து மட்டுமல்ல எனது சொந்த கை காசையும் போட்டு செலவு செய்வேன் நான் அதற்கு கடமைப் பட்டிருக்கிறேன்.என்று சொல்லி இருந்தால் மக்கள் விண்ணை பிளக்கும் அளவுக்கு கரகோஷம் எழுப்பி அவர்களை வாழ்த்தி இருப்பார்கள்.

''எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்பது அறிவு''.

''செல்லுமிடத்து சினம் காக்க காவாக்கால் தன்னையே கொல்லும் சினம்''

என்ற இரண்டு குறள்களையும் குறளோவிய நாயகனின் தம்பி மறக்கலாமா....

மீண்டும் வாருங்கள் நல்லாட்சி தாருங்கள் காயல்பட்டினம் உங்கள் நலத்திட்டங்களால் இன்னும் பயனடைய நீங்கள் நீடூழி வாழ வேண்டும். என்று கலைஞரின் 96 ஆண்டு பிறந்தநாள் விழாவில் உங்களை வாழ்த்துகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ‘சேவைச் செம்மல்’ ஏ.கே.அப்துல் ஹலீம் ஹாஜியார் காலமானார்! இன்று அஸ்ர் தொழுகைக்குப் பின் சென்னையில் நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...ஹலீம் ஹாஜியார்
posted by mackie noohuthambi (kayalpattinam ) [10 July 2018]
IP: 106.*.*.* India | Comment Reference Number: 46207

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

காயல்பட்டினத்தில் குறுகிய அலியார் தெருவில் போய் ஹலீம் ஹாஜியார் வீட்டை கண்டு பிடிப்பது கஷ்டம்..

ஆனால் நீண்ட நெடுஞ்சாலையான கூட்டமும் சந்தடியும் நிறைந்த மண்ணடியில் எந்த மூலையில் போய் நின்று ஹலீம் ஹாஜி அவர்கள் பெயரை சொன்னாலும் எளிதில் அவர்களை சென்று அடையலாம். அவர்களின் சென்னை வாழ்வின் நீண்ட வரலாறு காயல்பட்டினம் மக்களின் சொத்துக்களில் பின்னிப் பிணைந்தது.

ஒரு நம்பிக்கைக்குரிய ஆளுமை.அவர்களிடம் பலர் சொத்து வாங்கி கேட்டிருக்கிறார்கள் விற்றுக் கேட்டுமிருக்கிறார்கள். அவர்கள் வாங்கி கொடுத்த சொத்துக்களின் பெறுமதி இன்று பல கோடிகளை தாண்டி நிற்கிறது. எனக்கு நேரடியாக அவர்களுடன் தொடர்பு இல்லாவிட்டாலும் அவர்களின் ஈடுபாடு சமுதாய சேவைகள் பற்றி நான் பரவலாக அறிந்திருக்கிறேன்.

அவர்கள் வாழ்வின் 90 அகவையை தாண்டி வாழ்ந்து தனது சேவைகளை முழுமையாக இந்த இஸ்லாமிய சமுதாயத்துக்கும் காயல்பட்டினம் மக்களுக்கும் செய்திருக்கிறார்கள் என்ற மன திருப்தி எல்லோருக்கும் இருக்கும் அவர்களுக்கு எல்லோருடைய து ஆக்களும் நிறைந்திருந்து அவர்கள் சொர்க்க வாழ்வுக்கு கட்டியம் கூறும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை பொருந்திக் கொள்வானாக அவர்கள் குற்றம் குறைகளை மன்னித்து அருள் புரிவானாக அவர்கள் மண்ணறையை விசாலமாக்கி வைப்பானாக அவர்களுக்கு மேலான சுவர்க்க வாழ்வை நசீபாக்கி வைப்பானாக.

ஒரு நீண்ட நெடிய பாரம்பரியத்தின் தலைமையை இழந்து நிற்கும் எல்லோருக்கும் அவர்கள் முன்னெடுத்து சென்ற காரியங்களை தொடர்ந்து செய்வதற்கு ஊக்கமும் ஆக்கமும் கொடுத்தருள்வானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: வேண்டுகோளை ஏற்று அரூஸிய்யா பள்ளியருகில் விரைவாக வேகத்தடை அமைத்த நகராட்சி ஆணையருக்கு “நடப்பது என்ன?” குழுமம் நன்றி! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:..தனி அதிகாரி ஆட்சி நீடிப்பு .
posted by mackie noohuthambi (kayalpatnam) [30 June 2018]
IP: 223.*.*.* India | Comment Reference Number: 46199

ஊராட்சிகளுக்கு நியமிக்கப் பட்டுள்ள தனி அதிகாரிகள் ஆட்சி இன்னும் 6 மாத காலங்களுக்கு நீடிக்கப் பட்டுள்ள செய்தியை நேற்றைய நாளிதழில் படித்தேன்.

அரூஸிய்யா பள்ளி அருகே வேகத்தடை அமைக்கப் பட்டுள்ள செய்தியும் படித்தேன். இன்று வைகறை தொழுகை முடித்து விட்டு நடைப் பயிற்சியையும் அந்த பாதை வழியே சென்று பார்த்தேன்.தார் இன்னும் இறுக்கமாக ஊற்றினால் திடீர் கோடை மழைக்கு அந்த வேகத்தடை ஈடு கொடுக்கும் என்பது எனது அபிப்பிராயம்.

இவ்வளவு விரைவாக வேலைகள் நடக்குமென்றால், சட்டமன்ற தேர்தல் வரும்வரை இந்த தனி அதிகாரி ஆட்சி தொடர்ந்தால் நமதூருக்கு வரவேண்டிய நலத்திட்டங்கள் விரைவாக வரும் என்று நினைக்கிறேன், 18 வார்டுகளுக்கு மக்கள் பிரதிநிகளை தேர்ந்தேடுக்க போட்டி செலவுகள் குத்து வெட்டுக்கள் நடப்பதும் மக்கள் நேரடியாக நகர்மன்ற தலைவரை தேர்ந்தப்பதும் அவை எல்லாம் முடிந்த பிறகு தலைவர் ஒரு வழி உறுப்பினர்கள் தனி வழி என்று கடந்த 7 ஆண்டுகால ஆட்சிகளின் அவலத்தை பார்த்தோம்.

யார் சரி யார் தப்பு என்று இப்போது போஸ்ட் மோர்டெம் பண்ணுவதில் அர்த்தமில்லை. பஞ்சாயத்து ராஜ் ஆட்சி தோல்வியில் பெரும்பான்மையான இடங்களில் நடந்து முடிந்துள்ளது. சட்டமன்ற தொகுதிகள் 18 கூட சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லாமல் காலியாக கிடக்கிறது. இப்போது ஆளுநர் களப்பணியில் நேரடியாக இறங்கியுள்ளதால் ஆளுநர் ஆட்சி நடந்தாலும் நல்லது போல் தெரிகிறது. நமதூர் நலத்திட்டங்கள் எல்லாமே தனி அதிகாரி மூலமாக நடக்க நடப்பதென்ன குழுமம் முயற்சி செய்தால் நல்லது.

யார் குத்தியாவது நெல் அரிசியாகட்டும் என்றுதான் நடு நிலையாளர்கள் யோசிக்கிறார்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
629
பக்க எண்
1/63
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2018. The Kayal First Trust. All Rights Reserved