Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:04:56 PM
திங்கள் | 22 அக்டோபர் 2018 | சஃபர் 13, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5312:0815:2918:0619:16
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்16:32
மறைவு17:58மறைவு04:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:1905:44
உச்சி
12:02
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:2018:4519:09
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
Namemackie noohuthambi
Placecolombo
Approved Comments640
Rejected Comments25
கருத்துக்கள்
எண்ணிக்கை
640
பக்க எண்
1/64
பக்கம் செல்ல
செய்தி: மகுதூம் ஜுமுஆ பள்ளி, ஜாவியா, கே.எம்.டீ. மருத்துவமனை நிர்வாகி காலமானார்! இன்று 10.00 மணிக்கு நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:..இறைபக்திமிக்க பாரம்பரியம் .
posted by mackie noohuthambi (colombo) [13 October 2018]
IP: 175.*.*.* Sri Lanka | Comment Reference Number: 46285

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

பேச்சிலே இனிமை தொழிலிலே நேர்மை பொதுவாழ்விலே தூய்மை இறை அச்சத்தில் ஓர்மை என்ற நல்ல உதார குணங்கள் படைத்த எனதருமை மாமா அவர்களின் வபாத் செய்தி அறிந்து மனம் வருந்தினேன்.

அவர்கள் குடும்பத்தில் அவர்களின் மருமகனாக நான் அவர்கள் குடும்பத்தில் என்னை இணைத்துக் கொண்டதிலிருந்து இன்று வரை அவர்களுடன் எனக்கு பாசமும் பற்றும் இருந்தது. அவர்களும் என்னை மருமகனாக ஏற்று உதவிகள் பல செய்த காலங்கள் பசுமையாக இருக்கின்றன.

1988 முதல் அவர்களுடன் இலங்கையில் ஒன்றாக இருந்தவன். அவர்கள் நகைச்சுவை மிக்கவர்கள் மற்றவர்கள் மாமன் மருமகனான அல்லது மச்சான் மச்சினனா என்று கேட்கும் அளவுக்கு அவர்களுடன் எனக்கு நெருக்கம் இருந்தது.

அவர்களின் ஒட்டுமொத்த குடும்பமே இறை அச்சத்தில் ஊறியது. தொழுகை இபாதத்துக்கள் நேரம் தவறாமல் ஜமாஅத்துடன் தொழுவது, நோன்பு காலங்களில் தவறாது நோன்பு நோற்பது என்பதில் மிக்க பூணிப்பானவர்கள். பிறர் அறியாமல் ஏழை எளியவர்களுக்கு வாரி வழங்கும் கரங்களுக்கு சொந்தக்காரர் அவர்கள். மக்களையும் அந்த வழியிலே வளர்த்து வார்த்தெடுத்தவர்கள்.

இதை விட அவர்களைப்பற்றி சொல்வதற்கு என்னவிருக்கிறது. அந்த குடும்பத்தில் நான் ஒருவன் என்பதில் எனக்கு பெருமையும் சந்தோஷமும் ஏற்படுகிறது.

எல்லாம் வல்ல அல்லாஹ் மாமா அவர்களின் நல்லமல்களை பொருந்திக் கொள்வானாக அவர்களின் பிழைகளை பொருத்தருள்வானாக .அவர்களின் மண்ணறையை விசாலமாக்கி வைப்பானாக வெளிச்சமாக்கி வைப்பானாக அவர்களுக்கு ஜன்னத்துல் பிர்தவ்ஸ் என்ற மேலான சுவர்க்க வாழ்வை கொடுத்தருள்வானாக

ஒரு இனிமையான குடும்பத்தலைவரை இழந்து நிற்கும் குடும்பத்தினருக்கு அல்லாஹ் நல்ல பொறுமையை கொடுப்பானாக. அவர்கள் விட்டு சென்ற நல்லமல்களை தொடர்ந்து செயல்படுத்த தௌபீக் செய்வானாக

ஜாவியா மொகுதூம் ஜும்மா பள்ளி KMT நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள இந்த வெற்றிடத்தை நிரப்ப இவர்கள் போன்ற நல்லவர்களை தந்தருள்வானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் நிர்வாகக் குழு உறுப்பினர் காலமானார்! இன்று இஷா தொழுகைக்குப் பின் நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...நட்புக்கு ஒரு SMS
posted by mackie noohuthambi (colombo) [09 October 2018]
IP: 175.*.*.* Sri Lanka | Comment Reference Number: 46281

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

SMS நூஹு மச்சான் வபாத் செய்தி கேட்டவுடன் அடிவயிற்றில் அமிலம் சுரந்தது. நாங்கள் இளம்பருவத்தில் பள்ளிவாசலில் முஹியித்தீன் பூங்காவில் கடற்கரையில் கழித்த நாட்கள் நினைவுக்கு வருகிறது.

இரு சக்கர மிதிவண்டியில் DCW யில் அவன் பணியாற்ற சென்ற காலங்கள் பின்னர் படிப்படியாக உழைத்து முன்னேறி சவூதி அரேபியா ARAMCO வில் தடம்பதித்து தன்னை சுற்றியுள்ள குடும்பங்களுக்கு ஏழை எளியவர்களுக்கு சப்தமில்லாமல் உதவி செய்து எல்லோருடைய துஆக்களை நிரம்ப பெற்றிருந்தவர்.

ஒரு SMS கொடுத்தால் நான் உன்னை வந்து பார்த்திருப்பேனே என்று SMS பற்றி நவீன காலத்தில் நண்பர்கள் பேசிக் கொள்வார்கள். ஆனால் 50 வருடங்களுக்கு முன்னால் இந்த SMS எங்களுக்கு கூப்பிடும் முன்னே வந்து என்ன வேண்டும் என்று கேட்கும் நண்பனாக இருந்தான்.

சமீபத்தில் ஒரு நாள் என் வீட்டுமுன்னே வந்து நின்றான் நான் கதவை திறந்து வெளியே வந்து பார்த்தபோது SMS . ஆச்சரியத்துடன் கேட்டேன் மச்சான் இந்த பக்கம் காத்து வீசுகிறதே யாரை பார்க்க வந்தாய் என்று கேட்டேன். உன்னைத்தான் பார்க்க வந்தேன்.. என்னையா எதற்கு என்றேன் உனக்கு உனக்கு நரம்பு அம்மன் போட்டு கஷ்டப்படுகிறாயாமே பார்க்க வந்தேன்.

எனக்கு பகீரென்றது. இளைப்பு என்று அடிக்கடி நாகர்கோயில் செல்பவன் இப்போது இவ்வளவு தூரம் நடந்து வந்து என்னை பார்க்க வந்திருக்கிறானே. நான் அப்போதுதான் சற்று குணமாகி எனது சகோதரி மகன் வீட்டுக்கு ஒரு முக்கிய நிகழ்ச்சிக்கு ஆட்டோவில் ஏறிக் கொண்டிருக்கிறேன்.

மச்சான் மிக்க சந்தோஷம். ஒரு ஆட்டோ பிடித்து வருகிறேன். நீ வீட்டுக்கு போ என்றேன். போடா போ நான் பொடி நடையாக போய் விடுவேன் என்று சொன்னான்.

கடநத ஞாயிறன்றுதான் எனக்கு அவன் சென்னை சென்ற தகவல் அறுவை சிகிச்சை நடந்த செய்தி எல்லாம் தெரியவந்தது. அல்லாஹ்விடம் அன்று முதல் இன்று வரை து ஆ செய்து கொண்டிருந்தேன் அவன் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று அல்லாஹ்விடம் வேண்டிக் கொண்டிருந்தேன். அல்லாஹ்வின் நாட்டம் முந்தி விட்டது.

மர்ஹூம் SMS மச்சான் அவர்களின் நல்லமல்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக அவனது குற்றங்களை பொருத்தருள்வானாக அவனது மண்ணறையை வெளிச்சமாகி வைப்பானாக அவனுக்கு மேலான சுவர்க்க வாழ்வை கொடுத்தருள்வானாக.

ஒரு சீதேவியான கணவனை இழந்து வாடும் சித்திமாவுக்கும் அவர்கள் மக்களுக்கும் அவர்கள் குடும்பத்தினர் எல்லோருக்கும் அல்லாஹ் நல்ல பொறுமையை கொடுத்தருள்வானாக ஆமீன்.

கனத்த இதயத்துடன்
மக்கி நூஹுத்தம்பி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: சமூக ஊடகங்களில் தகவல்களைப் பகிர்வதில் பொறுப்புணர்வு வேண்டும்! “நடப்பது என்ன?” குழுமங்கள் மூலம் பொதுநல அறிக்கை வெளியீடு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...கலாச்சார சீரழிவுக்கு எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் பகிர்வுகள்
posted by mackie noohuthambi (kayalpatnam) [03 October 2018]
IP: 106.*.*.* India | Comment Reference Number: 46276

கலாச்சார சீரழிவு என்று ஒரு பக்கம் பேசுகிறோம் அந்த சீரழிவுக்கு தவறான தகல்வளை சமூக ஊடகங்களில் பகிர்ந்து எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றி பெரிதாக்குகிறோம்.

நமதூரில் வாட்ஸுப் மூலம் பல குழுமங்கள் பதிவு செய்யும் தகவல்கள் FORWARDED என்று போட்டு பகிரப்படுகிறது. தவறான செய்திகள் எங்கிருந்தோ எந்த சமூக விரோதியோ போடும் செய்திகளை எல்லாம் பதிவு செய்து மூளை சலவை செய்கிறார்கள். ஒரு செய்தி சரியானதுதானா என்று தெரியாமல் பேசுவதும் எழுதுவதும் இஸ்லாத்தில் பெரிய குற்றமாக கருதப் படுகிறது.

ஒருவரை பற்றி புறம் பேசுவது பெரிய குற்றம் என்று நபிகள் நாயகம் அவர்கள் கூறியபோது சுற்றியிருந்த நபி தோழர்கள் யா ரசூலுல்லாஹ் அந்த குறை அந்த நபரிடம் இருந்தாலுமே அவரைப் பற்றி பேசக் கூடாது என்று கேட்டார்கள். ஆம் அவரிடம் அந்த குறை இருந்தால் அவர் முதுகுக்கு பின்னால் அதை பேசுவதுதான் புறம் பேசுவது என்பதாகும். அந்த குறை அவரிடம் இல்லாவிட்டால் அவரைப் பற்றி பேசுவது அவதூறு அது புறம்பேசுவதை விட கொடிய குற்றம் என்றார்கள் நபிகள் நாயகம் என்பதை உலமாக்கள் சொல்கிறார்கள். இந்த ஹதீதில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை.

எனவே இந்த செய்தியில் சொன்னபடி எல்லோரும் மிக கவனமாக இருக்க வேண்டும். இங்கே இதை பதிவு செய்துள்ளமைக்கு எனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: மண்டலம் வாரியாக அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள காயல்பட்டினம் நகராட்சியின் சொத்து வரி! உங்கள் தெரு எந்த மண்டலத்தில்? “நடப்பது என்ன?” குழுமம் பொதுநல அறிக்கை!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...தகவலுக்கு நன்றி
posted by mackie noohuthambi (kayalpatnam ) [30 September 2018]
IP: 106.*.*.* India | Comment Reference Number: 46275

நமதூரில் செயல்பட்டு வந்த சுமார் 7 இணையதளங்களின் பணி மிக சுருங்கி ஒன்றுமில்லாமல் ஆகிவிட்ட நிலையிலில் காயல்பட்டணம்.காம் மட்டும் இன்று ஒரு தகவல் என்ற அடிப்படையில் ஏதாவது ஒரு செய்தியை தினமும் பதிவிட்டு வருகிறது. சந்தோஷம் தரும் கல்யாணமானாலும் கவலைதரும் மரண செய்தியானாலும் அவ்வப்போது ஊர் நடப்புகளை தெரிவித்து வருகிறது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.

வாட்ஸுப் கலாச்சாரத்துக்கும் சென்று விட்டதால் அங்கு பல குழுமங்களும் கால் ஊன்றி விட்டதால் அவை தரும் தகவல்களை நம்ப முடியாமல் forward செய்து வருகிறார்கள். ஆதாரங்கள் இல்லாத செய்திகள் சில நேரம் நமக்கு ஆத்திரமூட்டுகிறது. இந்த நிலையில் பயனுள்ள செய்திகளை உடனுக்குடன் பதிவு செய்து நமக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் இந்த இணையத்தை பாராட்டுகிறேன்.

நாங்கள் புதுக்கடை தெருவில் வசிக்கிறோம். மேலே உள்ள தகவல்படி எந்த வித சொத்து வரி விதிப்பு நோட்டீசும் இது வரை எங்களுக்கு கிடைக்கவில்லை.நாங்களாக நகர்மன்றத்தில் போய் கேட்கவேண்டுமா அல்லது அவர்கள் அனுப்பும்வரை காத்திருக்க வேண்டுமா என்று தெரியவில்லை. இதுபற்றியும் தெரிவிக்கும்படி அன்புடன் வேண்டிக் கொள்கிறோம். தொடர்பு கொள்ள வேண்டிய அலை பேசி எண்களையும் அறிய தாருங்கள். நன்றி.

Modrator: “நடப்பது என்ன?” குழுமத்தின் தொடர்பு எண்: + 91 73974 68321


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: பேருந்து நிலைய வாயிலில் காவல்துறை சாவடி அமைக்க நகராட்சி அனுமதி வழங்கவில்லை! த.அ.உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு நகராட்சி பதில்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...ஆளுமை இல்லாத ஆட்சிகள்.
posted by mackie noohuthambi (kayalpatnam ) [28 September 2018]
IP: 106.*.*.* India | Comment Reference Number: 46274

அதிர்ச்சி அளிக்கும் செய்தி. ஆனால் நாட்டில் குறிப்பாக தமிழகத்தில்.இரண்டு அரசியல் ஆளுமைகளை சமகாலத்தில் இழந்து நிற்கும் மக்களின் போதாத காலம்..

ஒரு சிலை கோயிலில் இருந்தால் அது கடவுள் என்று போற்றப்படுகிறது அதே சிலை கோயிலுக்கு வெளியே வந்தால் அது எந்த சக்தியும் அற்ற வெறும் சிலையாக மாறுவது மட்டுமல்ல கோடிக்கணக்கில் விலை போகும் வர்த்தகப் பொருளாகவும் மாறி விடுகிறது. இன்றைய நாளிதழில் வந்த செய்தி இது அதிர்ச்சி தரும் சுமார் 100 கோடி ரூபாய் பெறுமதியான சிலைகள் கைப் பற்றப் பட்டிருக்கிறது.

காவல் துறைபற்றி சட்டமன்ற உறுப்பினர் முதல் கம்பெடுத்தவனெல்லாம் வேட்டைக்காரன் என்ற முறையில் மிக கேவலமாக பேசி காவல் துறையை களங்கப் படுத்துகிறார்களே என்ற கவலை ஒரு பக்கம் இவர்களும் இப்படித்தானே தீமைகளுக்கு துணைபோகிறார்கள் என்ற கவலை மறுபக்கம்.

நகராட்சியின் அனுமதியில்லாமல் வீட்டுக்கு வரும் குடிநீர் குழாயில் விரிசல் ஏற்பட்டால் கூட நகராட்சி அனுமதி வாங்காமல் அதை சரி செய்ய முடியாது. ஒரு குழி தோண்ட முடியாது ஒரு கல்யாண பந்தல் அமைக்க முடியாது என்றெல்லாம் சட்டங்கள் இருக்கும்போது காவல் துறை எப்படி நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் இப்படி ஒரு பொதுமக்கள் அதிகமாக கூடும் இடத்தில் ஓர் மினி காவல் நிலையம் அமைத்தார்கள். இதை பகல் கொள்ளை என்று சொல்வதைவிட வேறு என்னென்று சொல்வது.

இத்தனைகாலம் அது எப்படி நகராட்சி நிர்வாகத்துக்கு தெரியாமல் போனது என்பது ஆச்சரியமான செய்தி. மொத்தத்தில் நாட்டில் மக்களாட்சியும் இல்லை,ஊரில் நகராட்சியும் இல்லை. நேர்மை நியாயம் என்று பேசுபவர்கள் ஒதுங்கி நிற்கிறார்கள் வெட்டு குத்து என்று பேசுபவர்கள் கோலோச்சுகிறார்கள்.

நமது ஊரை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்..நமது கையில் உள்ள கடைசி ஆயுதம் அதுதான் ஆனால் வலிமையான ஆயுதமும் அதுதான் இறைவனிடம் கை ஏந்தி பிரார்த்திப்போம்.

யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் புரியலே
அட அண்ட காக்கைக்கும் குயில்களுக்கும் பேதம் புரியலே... பேதம் புரியலே...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஹாங்காங்கில் நடைபெற்ற சிற்றுலா கடற்கரை கபடி போட்டியில் காயல் யுனைட்டெட் அணி சாம்பியன்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...நான் காற்று வாங்க போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்
posted by mackie noohuthambi (kayalpatnam) [26 September 2018]
IP: 106.*.*.* India | Comment Reference Number: 46271

பார்ப்பதற்கும் படிப்பதற்கும் ரம்மியமாக இருந்தாலும் ஒரு கவிஞர் சொல்வதும் நினைவுக்கு வராமல் இல்லை.

இந்தியாவுக்கு தங்க பதக்கம் கிடைத்தது ..கபடி போட்டியில்.... ஆமாம் காலைவாரி விடுவதில் நடக்கும் போட்டிகளில் நமக்கு தங்க பதக்கம் நிச்சயம்.

இதை விளையாட்டாக எடுத்துக்கொள்வதா சீரியஸாக எடுத்துக் கொள்வதா... விளையாட்டில் கலந்து கொண்ட இளைஞர்களின் கருத்துக்களை வரவேற்கிறோம்.....

வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: மெகா | நடப்பது என்ன குழுமம் நடத்திய பாராட்டு விழாவில், டாக்டர் எம்.எஸ்.அஷ்ரஃபுக்கு “PRIDE OF KAYALPATTINAM” விருது வழங்கப்பட்டது! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...வாழும் காலத்தில் வாழ்த்துங்கள் விருதுகள் வழங்குங்கள்
posted by mackie noohuthambi (kayalpatnam ) [21 September 2018]
IP: 106.*.*.* India | Comment Reference Number: 46269

நாள் மறைந்த பிறகு எனக்கொரு தாஜ்மஹால் கட்ட வேண்டாம். நான் வாழும் காலத்தில் நிம்மதியாக வாழ ஒரு குடிசை கட்டி தாருங்கள் என்று ஒரு புது கவிதை சொல்கிறது.

அமர்க்களமாக அரங்கம் நிறைந்த விழாவாக நடந்து முடிந்த அந்த நிகழ்வு மனநிறைவை தந்தது காயல்பட்டினம் மருத்துவர்களை ஒரே மேடையில் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது மருத்துவ சேவையாற்றி நம் நெஞ்சங்களில் நிறைந்து வாழும் மருத்துவர்களையும் நினைவுக்கு கொண்டு வந்த நெகிழ்ச்சியான விழா அது

நினைவலைகளும் உணர்வலைகளும் சிரிப்பலைகளும் நிறைந்த ஒரு கலவையான நிகழ்ச்சியாக மாற்றி தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்ட மருத்துவர்கள்

மருத்துவர் அஷ்ரப் மருத்துவர் பாவநாச குமார், மருத்துவர் இத்ரீஸ், மருத்துவர் தம்பி மருத்துவர் ஜாபர் சாதிக் மற்றும் மேடையில் அமர்ந்திருந்த எல்லா மருத்துவர்களும் சில மணித்துளிகள் மட்டுமே பேசினாலும் எல்லாமே தேன் துளிகள். கருக்கலில் தொழுகை நேரம் வந்ததால் அத்துடன் மருத்துவர்கள் பேசியது முடிந்துவிட்டாலும் இன்னும் சொல்ல மாட்டார்களா என்ற ஆதங்கம் எல்லோரிடமும் தென்பட்டது.

என்னதான் மருத்துவர்கள் அதிசயங்கள் நிகழ்த்தினாலும் அல்லாஹ்வின் தொழுகைக்கான அழைப்பொலி வந்தால் அதுதான் எல்லாவற்றையும் விட முக்கியம் என்பதை அவர்கள் உணர்த்த தவறவில்லை.

மருத்துவர்கள் தங்களால் முடிந்தவரை ஒரு நோயாளியை மரணத்திலிருந்து காப்பாற்றவே முயற்சி செய்வார்கள் அவர்களையும் மீறிய ஒரு சக்தி - அல்லாஹ்வின் முடிவே இறுதியானது என்று அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள். அப்போது அவர்கள் ஒரு குறிப்பை எழுதி வைத்து விட்டு அந்த நோயாளியிடமிருந்து விடை பெற்றுக் கொள்வார்கள். அதுதான் G .O .K - GOD ONLY KNOWS. ஆங்கிலத்திலே இறைவனை அழைக்கும் பெயராக GOD என்ற வார்த்தையை மிக அழகாக உருவாக்கி இருக்கிறார்கள். GENERATOR - OPERATOR - DESTROYER உருவாக்குபவன் இயக்குபவன் முடித்து வைப்பவன்.

மருத்துவம் மகத்துவம் மனிதத்துவம் இவற்றை அடிப்படையாக கொண்ட மனித சேவை இப்போது வர்த்தகம் என்ற புதிய பரிணாமத்துக்குள் புகுந்து கொண்டதால் மக்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். இந்த அவல நிலையிருந்து நமதூரை மீட்டெடுக்க இந்த மருத்துவர்கள் சங்கமம் ஒரு சபதம் எடுத்துள்ளதை மக்கள் மிகவும் பாராட்டுகிறார்கள்.

வீடுதேடி வந்து மருத்துவம் செய்ய இத்ரீஸ் டாக்டர் அவர்கள் நான் தயார் என்று சூளுரைத்த போது கரகோஷம் விண்ணை பிளந்தது. டாக்டர் அஷ்ரப் அவர்களுக்கு PRIDE OF KAYALPATNAM விருது ஒரு சாதாரண விருது ஆனாலும் அதுதான் அவர்களுக்கு பெருமை தரும் விருது. அவர்களை போன்றவர்களுக்கு பாரத ரத்னா என்ற தேசிய விருது இனிமேலும் தாமிதிக்காமல் கொடுக்கப் படவேண்டும் என்பதே நமது அவாவும் து ஆ வும்.

வாழும் காலத்திலேயே இப்படிப் பட்டவர்கள் வாழ்த்தப் படவேண்டும் அவர்கள் சேவைகள் அங்கீகரிக்கப் படவேண்டும். இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த இளைஞர்களை பாராட்டுகிறோம்.

உழைக்கும் தோழர்களே இளைஞர்களே ஒன்று கூடுங்கள் உலகம் நமது என்று சிந்து பாடுங்கள் மேடு பள்ளம் இல்லாத சமுதாயம் காண என்ன வழி என்று எண்ணி பாருங்கள் அல்லாஹ் ரசூல் சொன்ன வழி சென்று நன்மை தேடுங்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: மலபார் கா.ந.மன்றம் & ஐக்கியப் பேரவை இணைந்து, கேரள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவி! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...காயலர்கள் கேரளர்கள் இணைப்பு பாலம் மலபார் காயல்நல மன்றம்
posted by mackie noohuthambi (kayalpatnam) [18 September 2018]
IP: 27.*.*.* India | Comment Reference Number: 46267

மலபார் காயல்நலமன்ற ஆண்டறிக்கை நலத்திட்டங்கள் பற்றிய செய்தி இந்த இணையத்தளத்தில் பதிவு செய்யப்பட்டபோது நான் ஒரு கருத்தை பதிவு செய்திருந்தேன். இப்போது தேவை உங்கள் உதவிகள் காயலர்களுக்கு அல்ல கேரளத்தில் காயம்பட்டவர்களுக்கு என்று எழுதி இருந்தேன். அல்ஹம்து லில்லாஹ் மிக்க சந்தோஷமான மனநிறைவுதரும் நிகழ்வு இப்போது பதிவாகி இருக்கிறது.

''அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்
அளவிலாத வெள்ளம் வந்தால் ஆடும்
''தென்னை இளம் கீற்றினிலே தாலாட்டும் தென்றலது
தென்னை தன்னை சாய்த்து விடும்
புயலாக வரும்பொழுது''

என்று ஒரு கவிஞன் பாடியது நினைவுக்கு வருகிறது. நிழற்படங்கள் சொல்லும் செய்தியும் அதுதான்.

எவ்வளவு ரம்மியமான காட்சிகளுனூடே எவ்வளவு கொடூரமான இயற்கை தாக்குதலும் நடந்திருக்கிறது எல்லாம் அல்லாஹ்வின் தேசம்தான். ஆனாலும் இப்படி இயற்கை காட்சிகள் நிறைந்த பூமி எப்படி சிதறி சின்னாபின்னமானது என்பதை நினைக்கும்போது அல்லாஹ்விடம் கை ஏந்தி பாவ மன்னிப்பு கேட்க நாம் கடமைப் பட்டுள்ளோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் நம் எல்லோரது பாவங்களையும் மன்னித்து இது போன்ற சீற்றங்களால் நம்மை சோதித்து நாம் பாதிக்கப்பட்டு நிர்க்கதியாக நிற்காமல் நம்மையும் நம் சமுதாயத்தையும் நமது தாய் நாட்டையும் பாதுகாப்பானாக...

காயல்பட்டினம் ஐக்கிய பேரவை உறுப்பினர்கள் தெருத்தெருவாக வந்து கேரளாவுக்கு உதவி கேட்டு வந்தார்கள் மக்கள் அள்ளி அள்ளிக் கொடுத்தார்கள்.அது முறையாக கேரளா அரசிடம் ஒப்படைக்கப்பட்ட செய்தி மக்களிடம் இதுவரை எதுவும் சொல்லப்படவில்லையே என்ற மனக் குறை என்போன்றவர்களுக்கு இருந்தது. இந்த தகவல் மூலம் அந்த மனக்குறை அகன்றுள்ளது என்றாலும் இணைய தளத்தையே எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள். மக்களுக்கு ஒரு நோட்டீஸ் மூலம் நன்றி தெரிவித்தால் அவர்கள் மனநிறைவு பெறுவார்கள் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள். வாழ்த்துக்கள். .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: மலபார் கா.ந.மன்ற (மக்வா) பொதுக்குழுவில் புதிய தலைவர் தேர்வு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...நீங்கள் பொருளீட்டும் மாநிலத்தின் துயர் துடைக்க என்ன செய்தீர்கள்>
posted by mackie noohuthambi (kayalpatnam) [02 September 2018]
IP: 106.*.*.* India | Comment Reference Number: 46264

இங்கே சொல்லப்பட்ட நிகழ்ச்சிகள் எல்லாம் சிறப்பாக சொல்லப் பட்டிருக்கிறது. கேரள மாநிலத்தில் கால் ஊன்றி அந்த மாநிலத்தில் பொருளீட்டி சிறப்பாக வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை நான் சில வருடங்களுக்கு முன் அங்கு வந்தபோது கண்கூடாக கண்டேன்.

கடவுளின் தேசம் என்று மற்றவர்கள் அந்த மாநிலத்தை புகழ்ந்தாலும் பூமியில் எல்லா நாடும் கடவுளின் தேசம்தான் என்பதுதான் முஸ்லிம்களின் நம்பிக்கை. ஆனாலும் சில மாநிலங்கள் சில நாடுகள் நமக்கு குளிர்ச்சிதரும் மாநிலமாக நாடாக இருப்பதால் அதை சிலாகித்துக் கூறுகிறோம் .

இலங்கையில் வாழ்பவர்கள் இலங்கையைத்தான் இறைவனின் தேசம் என்று சொல்வார்கள். இப்போது கடவுளின் தேசம் ஏன் கை பிசைந்து நிற்கிறது மக்கள் நிர்கதியாகி இருக்கிறார்கள் பல ஆயிரம் கோடிகள் நஷ்டம் என்றும் மீட்பு பணிக்கு பல்லாயிரம் கோடிகள் தேவை படுகிறது என்று முதல்வர் கூறுகிறார்.இந்த நேரத்தில் மீட்புப் பணிக்கு தேவையான பொருளாதாரத்தை அள்ளி வழங்கவேண்டியது காயல்பட்டினத்துக்கு அல்ல. கேரளாவில் காயப்பட்டவர்களுக்கு.

காயல் நல மன்றம் உடனடியாக ஒரு கணிசமான தொகையை கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கி தாங்கள் வாழும் மாநில முதல்வரின் அங்குள்ள மக்களின் இதயத்தில் இடம் பிடிக்க வேண்டும்.

உதவி வரைத்தன்று உதவி உதவி செய்யப்பட்டார் சால்பின் வரைத்து

உதவி யாருக்கு செய்கிறோம் என்பது பெரிதல்ல எப்படிப் பட்ட நேரத்தில் அந்த உதவியை செய்கிறோம் என்பதில்தான் உதவியின் உண்மையான மதிப்பு தெரிய வரும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: மாசற்ற மண்பாண்ட விற்பனையைத் தொழிலாக்கிக் கொண்ட காயல் இளைஞர்கள்! பெருநாளையொட்டி கடற்கரையில் கண்காட்சியை நகராட்சி சுகா. ஆய்வாளர் துவக்கி வைத்தார்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற மாயை மறைகின்றது
posted by mackie noohuthambi (kayalpatnam) [01 September 2018]
IP: 223.*.*.* India | Comment Reference Number: 46263

நாம் என்னவெல்லாம் புதுமை என்று நினைத்தோமோ அதெல்லாம் நமக்கு கேடு விளைவிக்கும் பொருள்களாக மாறி விட்டதை காலம் கடந்து உணர்கிறோம்.

பிளாஸ்டிக் பைகள் பிளாஸ்டிக் வாளிகள் நமது மண்பாண்டங்களையும் துணிப் பைகளையும் ஏன் நல்ல காற்று வீசும் பனை ஓலை விசிறிகளை நாம் புறம் தள்ளுவதற்கு காரணமாக அமைந்தது.

அரசுகள் அந்த செயற்கை பொருள்களுக்கு ஊக்கம் தந்தது அதை தயாரிக்கவும் அனுமதிகள் வழங்கின. செயற்கை உரங்கள் நமது இயற்கை உரங்களை பாழ்ப்படுத்தவும் அரசுகள் ஊக்கம் தந்தன விளைவு இப்போது அதன் கேடுகளை நாம் அனுபவித்து வருகிறோம்.

நமது கல்யாண விருந்துகளில் கந்தூரி வைபவங்களில் வழங்கப் பட்ட மண் சிட்டிகள் கலயங்கள் பலாப்பெட்டிகள் பனை ஓலைப் பெட்டிகள் எல்லாம் ஒரு தலைமுறைக்கு காணாமல் போய்விட்டது.

இன்று இருபது வயதுள்ள ஒரு இளைஞனுக்கு அவை எல்லாம் ஆச்சரிய பொருளாக மாறி விட்டது. இப்போது ''பழையன கழிதலும் புதியன புகுதலும்'' என்ற சொல்லாடல் விடைபெறுகிறது என்பதை எண்ணும்போது மனதுக்கு சந்தோசமாக உள்ளது. இந்த மண்பாண்ட விற்பனையை நாம் ஊக்குவிக்க வேண்டும்.

''ஊக்கு விற்பவனை ஊக்குவித்தால்
ஊக்கு விற்பவனும் தேக்கு விற்பான்
என்று ஒரு புது கவிதை சொல்கிறது.

கலயங்களும் சிட்டிகளும் மீண்டும் நமது மணவிழாக்களில் இடம்பெறவேண்டும்.

கோடை காலங்களில் மின்விசிறிக்கு பதிலாக இயற்கை சுகம் தரும் பனை ஓலை விசிறிகள் நம் வீட்டில் இடம் பெறவேண்டும்.

நமது கந்தூரி வைபவங்களில் மீண்டும் ஓலைப் பெட்டி பலாப் பெட்டி.

நமது வீடுககளில் ஐஸ் பெட்டிகளுக்கு பதிலாக மண்பாண்ட குடங்கள் சட்டிகள் நமது அடுப்பங்கரைகளை வந்து அடைய வேண்டும்.

இதற்கு ஒரு அடையாளமாக இந்த கலாச்சார மாற்றத்தை இங்கு அரங்கேற்றி இருக்கும் இளைஞர்களுக்கு நமது வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
640
பக்க எண்
1/64
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2018. The Kayal First Trust. All Rights Reserved