காயல்பட்டினம் கடல் அடிக்கடி செந்நிறமாக மாறுவது வாடிக்கை. காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் டி.சி.டபிள்யு. தொழிற்சாலையிலிருந்து கடலுக்குள் திறந்துவிடப்படும் இரசாயணக் கழிவுகளே இதற்குக் காரணம் என கருதப்படுகிறது.
தற்போது கடல் நிறமாற்றமின்றி தெளிவாகக் காணப்பட்டாலும், கடலில் கழிவு நீர் கலக்குமிடத்திலிருந்து கடலுக்குள் தண்ணீர் அவ்வப்போது கலக்கிறது.
30.12.2013 அன்று 18.05 மணியளவில், காயல்பட்டினம் கடற்பரப்பில் பதிவு செய்யப்பட்ட காட்சிகள் வருமாறு:-
காயல்பட்டினம் கடற்பரப்பின் டிசம்பர் 28ஆம் தேதி காட்சிகளைக் காண இங்கே சொடுக்குக!
1. யோக்கியன் முந்தும் முன் நாம் ஏன் அதை தடுக்க கூடாது...? posted byதமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[01 January 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 32247
விரைவில் கடலின் நீர் நிறம் மாறலாம்... கீழே படியுங்கள்...!
யோக்கியன் முந்தும் முன் நாம் ஏன் அதை தடுக்க கூடாது...? இது என் கேள்வி. மற்றும் நேரில் நான் கண்ட காட்சி..!
மழை காலங்களில் நீரோடையில் நீர் நிறைந்து வெளியேறும் பகுதியான நமது கடையக்குடி கடற்கரை கரையோரம் வெட்டி விடப்பட்டு இருக்கும் இடத்தில் DCW வின் கூலி ஆட்களால் ஒரு குடிசை அமைக்கபட்டு அதில் 25 - 30 பேர் தினமும் அமர்ந்து இருப்பது அங்கு வோர் வருவோருக்கு மிக பெரிய அச்சுறுத்தலாக உள்ளது.
KEPA அமைப்பும் - நம் நகர் மக்களும் இது விசியத்தில் மிக விழிப்புணர்வோடு இருந்தால் மட்டுமே நமது அடுத்த தலைமுறை மக்களை நிம்மதியாக இந்நகரில் நோயின்றி வாழ செய்ய முடியும்..
நான் நமது நகரின் நாளைய தலைமுறை மக்களை
பயமுறுத்தும் நோக்கில் இதை பதியவில்லை...! இதை படிக்கும் சகோதரர்கள் நான் குறிப்பிட்ட பகுதியில் நேரில் சென்று கவனித்தால் அதன் ஆபத்து என்ன என்பது புரியும்.
குறிப்பு:- இது விசியத்தில் மக்கள் மத்தியில் பரவலாக ஒரு பரப்புரை வேண்டும் என்பது என் கருத்து.
2. PRECAUTION IS BETTER THAN CURE posted byMauroof (Dubai)[01 January 2014] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 32249
சகோ. முத்து இஸ்மாயீல் அவர்களது கருத்தை நான் முழுமையாக ஆதரிக்கிறேன். எதற்காக அங்கே குடிசை? ஏன் அதற்குள் 25 - 30 நபர்கள் (கூலியாட்கள்)?
"KEPA" இதை கண்காணிக்க வேண்டும். வழக்கம்போல் பெரும் நாசம் விளைவிக்கும் ரசாயன கழிவுகளை கடலில் கலக்கும் வேலைகளை அவர்கள் செய்வார்களாயின் அதனை பொதுமக்களைத் திரட்டி தடுப்பதுடன் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross