தமதமைப்பின் செயலாளரது தந்தை மறைவை முன்னிட்டு, காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள இரங்கல் அறிக்கை:-
இறைவனிடம் இறைஞ்சுகிறோம்!
இதய ஆறுதலைத் தெரிவிக்கிறோம்!!
எமது காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை, ஹாங்காங் அமைப்பின் செயலாளர் ஜனாப் எஸ்.எம்.ஜெ.முஹம்மத் பாக்கர் அவர்களின் தந்தை ஹாஜி ஜெ.ஏ.செய்யித் முஹம்மத் ஜலீல் என்ற J.A.S.M.Jaleel அவர்கள் இன்று (11.05.2014) காலை வஃபாத்தாகிவிட்ட செய்தியறிந்து மிகவும் கவலையடைந்தோம். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
இறைவனுடைய நாட்டப்படி ஏற்பட்டுவிட்ட இந்த மரணத்திற்காக நாங்கள் ஸபூர் செய்து கொண்டோம்.
யா அல்லாஹ் மர்ஹூம் அவர்களது பிழைகளை பொறுத்து, உயரிய சுவனபதியில் அவர்களை அமரச்செய்வாயாக, ஆமீன்.
மர்ஹூம் அவர்களைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் எமது பேரவையின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வளவு பெரிய இழப்பைத் தாங்கும் இதயத்தையும், அழகிய பொறுமையையும் அவர்களுக்கு வழங்க இறைவனிடம் மனமுருக பிரார்த்திக்கிறோம்.
இவ்வாறு, காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |