வி-யுனைட்டெட் ஸ்போர்ட்ஸ் க்ளப் சார்பில், காயல் ப்ரீமியர் லீக் க்ரிக்கெட் போட்டிகள் இன்று (மே 02) துவங்கின. மே 09, 10 நாட்களில் நடைபெற்ற போட்டிகள் குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:-
வி-யுனைட்டெட் காயல் பிரிமியர் லீக் 2014 : மே 09, 10ஆம் நாள் போட்டிகளின் முடிவுகள்!
மே 09ஆம் நாள் போட்டிகள்:
மே 09ஆம் நாளன்று நடைபெற்ற முதல் போட்டியில் Fi-Sky Boys அணியினரும், Norway Knight Riders அணியினரும் விளையாடினார்கள். முதலில் பேட்டிங் செய்த Fi-Sky boys அணியினர் 10 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 88 ரன்களை எடுத்திருந்தனர். அந்த அணிக்காக இஜாஸ் மற்றும் பிலால் தலா 18 ரன்களையும், புஹாரி 12 ரன்களையும் சேர்த்தனர். Norway Knight Riders அணிக்காக அப்துல்லாஹ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தொடர்ந்து பேட்டிங் செய்த Norway Knight Riders அணியினர் 10 ஓவர்களின் முடிவில் 65 ரன்களை மட்டுமே சேர்த்து தோல்வியடைந்தனர். அந்த அணிக்காக செய்யது இப்றாஹீம் 14 ரன்களையும், சித்தீக் 12 ரன்களையும் சேர்த்தனர். Fi-Sky Boy அணிக்காக முஹம்மது தம்பி 3 விக்கெட்டுகளையும், அபுல் ஹஸன் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இரண்டாவது போட்டியில் வாவு வாரியர்ஸ் அணியினர் KTN அணியை எதிர்த்து விளையாடினார்கள். முதலில் பேட்டிங் செய்த KTN அணியினர் 10 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 92 ரன்களை எடுத்திருந்தனர். அந்த அணிக்காக யாஸர் 24, பசீர் 16, ஹனீஃபா 15, மீரா சாஹிப் 13 மற்றும் முஹம்மது முஹைதீன் (ஹாஜியார்) 11 ரன்களை சேர்த்தனர். வாவு வாரியர்ஸ் அணிக்காக இஸ்ஸத்தீன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தொடர்ந்து பேட்டிங் செய்த வாவு வாரியர்ஸ் அணியினர் 10 ஓவர்களின் முடிவில் 80 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தனர். அந்த அணிக்காக வாவு S.A.R.இப்றாஹீம் 33 ரன்களையும், M.M.சாஹூல் 22 ரன்களையும் சேர்த்திருந்தனர். KTN அணிக்காக சஃபீக் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
10ஆம் நாள் போட்டிகள்:
மே 10ஆம் நாள் போட்டியின் முடிவில் அணிகள் பெற்ற புள்ளிகளின் விபரம்:-
இவ்வாறு அந்த செய்தியறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் & படங்கள்:
M.ஜஹாங்கீர்
வி-யுனைட்டெட் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |