தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், இம்மாதம் 11ஆம் நாளன்று நடத்தப்பட்ட - 10ஆம், 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டு நிகழ்ச்சியில், நகர மாணவர்கள் திரளாகப் பங்கேற்றுள்ளனர். இதுகுறித்து, அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:-
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காயல்பட்டினம் கிளை மாணவரணி சார்பில், கல்வி - வேலைவாய்ப்பு வழிகாட்டு முகாம், இம்மாதம் 11ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை 11.00 மணி முதல் 13.00 மணி வரை, ஜாமிஉத் தவ்ஹீத் வளாகத்தில் நடைபெற்றது.
10, 12ஆம் வகுப்பு தேர்வுகளை எழுதியுள்ள மாணவ-மாணவியர் அடுத்து என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், ஒவ்வொரு படிப்புக்கும் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்து, அவ்வமைப்பின் மாணவரணி மாநில ஒருங்கிணைப்பாளர் ஷமீம் விளக்கமளித்தார்.
இம்முகாமில், காயல்பட்டினத்தைச் சேர்ந்த மாணவர்கள் திரளாகப் பங்கேற்றனர். முகாம் ஏற்பாடுகளை, மாணவரணி மாவட்ட மற்றும் நகர நிர்வாகிகள் செய்திருந்தனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
‘தேக்’ முஜீப்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |