துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளியின் நிறுவனரது சகோதரர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, அப்பள்ளியின் செயலாளர் எம்.எல்.ஷேக்னா லெப்பை வெளியிட்டுள்ள அறிக்கை:-
காயல்பட்டினம் துளிர் சிறப்பு குழந்தைகள் பள்ளியின் நிறுவனர் வழக்குரைஞர் எச்.எம். அஹ்மத் அவர்களின் ஒன்றுவிட்ட சகோதரரும், காயல்பட்டினம் ஐக்கிய பேரவை ஹாங்காங் அமைப்பின் செயலர் எஸ்.எம்.ஜெ.பாக்கர் அவர்களின் தந்தையும், சமூக ஆர்வலர் ஜே.ஏ.முஹம்மத் லரீஃப் அவர்களின் சகோதரரும், துளிர் அறங்காவலர் எம்.ஐ..செய்யித் ராழியா அவர்களின் கணவருமான ஜெ.ஏ.செய்யித் முஹம்மத் ஜலீல் அவர்கள் 11-05-2014 காலை வபாத்தாகிவிட்ட செய்தியறிந்து மிகவும் கவலை அடைகிறோம். இன்னா லில்லாகி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரின் மறைவுக்கு துளிர் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது.
மறைந்த ஜலீல் அவர்கள் துவக்க காலத்திலிருந்தே துளிருடன் நெருங்கிய தொடர்புடன் இருந்தார்கள். துளிரின் சேவைகள் தொய்வின்றி நடைபெற அவ்வப்போது தனது ஆலோசனைகளை வழங்கி வந்ததோடு, ஒவ்வொரு கட்டத்திலும் துளிரின் வளர்சிக்கு துணை நின்றார்கள்.
துளிரின் எல்லா நிகழ்வுகளிலும் தவறாமல் கலந்து கொண்டு ஆதரவு தந்தார்கள். காயல்பட்டினம் முதல் நீர்தேக்க தொட்டி, பேருந்து நிலையம், கால் நடை மருத்துவமனை , பத்திரப்பதிவு அலுவலகம் அமைவதற்கு தானமாக இடம் தந்து உதவிய பு.சே. செய்யது முஹம்மத் அவர்களின் வம்சாவழி வந்த ஜலீல் அவர்கள் நகர் நலனில் மிகுந்த சிந்தனயும், அக்கறையும் கொண்டவர். நமதூரில் உப மின் நிலையம் அமைந்திட தனது குடும்பத்தாரிடம் கலந்து பேசி ஐக்கிய பேரவைக்கு நிலத்தினை கிரயம் பெற்று தந்தவர்.
அவர்களது மறைவு எமது துளிர் குடும்பத்திற்கு மிகப்பெரும் இழப்பாகும். அவர்களது இழப்பினால் துயருறும் , எங்கள் நிறுவனர். வக்கீல். ஹெச். எம் . அஹ்மத், அறங்காவலர் ராழியா ஆகியோருக்கும், மற்றும் குடும்பத்தாருக்கும்,பொறுமையும், அமைதியும் தந்தருளவும், மர்ஹூம் அவர்களுக்கு மேலான சுவனபதியை கொடுத்தருளவும் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.
இவ்வாறு, துளிர் பள்ளி செயலாளர் எம்.எல்.ஷேக்னா லெப்பை தனதறிக்கையில் தெரிவித்துள்ளார். |