காயல்பட்டினத்தில், ஒருவழிப்பாதையான தாயிம்பள்ளி - பெரிய நெசவுத் தெரு குறுக்குச் சாலை, பெரிய நெசவுத் தெரு, எல்.கே.லெப்பைத்தம்பி சாலை, கூலக்கடை பஜார் பகுதிகளில் புதிய சாலை அமைக்கும் பணி துவக்கப்பட்டு, இரண்டு அடுக்குகள் அமைக்கப்பட்ட நிலையில் நின்றது.
இன்று (மே 14) மீண்டும் சாலை அமைக்கும் பணி தொடர்கிறது. தார் கலக்கப்பட்ட முக்கால் மற்றும் அரை இன்ச் ஜல்லி கொண்டு மூன்றாவது அடுக்கு அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்று 10.00 மணிக்குத் துவங்கிய இப்பணி மாலை முடிவு வரை தொடரும் என அறியப்படுகிறது.
நாளை (மே 15) தார் கலக்கப்பட்ட கால் இன்ச் ஜல்லி கொண்டு கடைசி அடுக்கு அமைக்கப்படும் என்றும், அத்தோடு சாலைப் பணிகள் நிறைவுபெறும் என்றும் ஒப்பந்தக்காரர் மீராசா தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற சாலைப் பணிகளை, காயல்பட்டினம் நகர்மன்றத்தின் 11ஆவது வார்டு உறுப்பினரும் - துணைத்தலைவருமான எஸ்.எம்.முகைதீன், நகர்மன்ற உறுப்பினர்களான எஸ்.எம்.பி.பத்ருல் ஹக், எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், எஸ்.ஏ.சாமு ஷிஹாபுத்தீன், நகராட்சி ஆணையர் ம.காந்திராஜ், நகரமைப்புத் திட்ட ஆய்வாளர் அறிவுடைநம்பி, பணி மேற்பார்வையாளர் செல்வமணி, திட்ட உதவி அலுவலர் செந்தில் ஆகியோர் மேற்பார்வையிட்டனர்.
காயல்பட்டினம் நகராட்சி வரலாற்றில், நகராட்சிக்குச் சொந்தமான சாலைப்பணி - நெடுஞ்சாலைத் துறையினரால் பயன்படுத்தப்படும் கனரக வாகனங்கள் உதவியுடன் அமைக்கப்படுவது இதுவே முதன்முறை என நகர்மன்ற துணைத்தலைவர் எஸ்.எம்.முகைதீன் கூறினார்.
நீண்ட இடைவெளிக்குப் பின் மார்ச் மாதத்தில் நடைபெற்ற ஒருவழிப்பாதை புதிய சாலை அமைப்புப் பணிகளின்போது, 20 நாட்களில் பணி நிறைவடையும் தெரிவிக்கப்பட்ட நிலையில், சுமார் 2 மாதங்கள் அதிகமானதற்குக் காரணத்தைக் கேட்டபோது, தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக நடைமுறை சிக்கல்கள் இருந்ததால் இந்த காலதாமதம் ஏற்பட்டுவிட்டதாக ஒப்பந்தக்காரர் கூறினார்.
கள உதவி:
A.L.முஹம்மத் நிஜார்
ஒருவழிப்பாதையில் புதிய சாலை அமைப்புப் பணி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |