கூடங்குளம் அணுஉலையில் ஏற்பட்ட விபத்தில் 6 பேர் படுகாயம் அடைந்தனர். பதற்றம் நிலவி வருவதால் பொலிஸார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அணுஉலை அமைக்கப்பட்டது முதல் அதில் மின்உற்பத்தி துவங்கும் வரை கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் போராட்ட ஒருங்கிணைப்பாளர்களான உதயகுமார் உள்பட 3 பேர் ஆம்ஆத்மி கட்சி வேட்பாளர்களாக மாறி விட்டனர். இதனால் அணுஉலை எதிர்ப்பு போராட்டம் தொய்வு அடைந்துள்ளது.
இந்நிலையில் இன்று மதியம் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் அணு உலையில் மின்உற்பத்தி பணிகள் நடந்து கொண்டிருந்தது.அப்போது அணு உலையை குளிர்விக்கக்கூடிய நீராவி குழாய் திடீரென வெடித்து சிதறியது. இதனால் அதன் சிதறல்கள் பறந்து சென்று அ்ங்கு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் மீது விழுந்தது. இந்த விபத்தில் அணுமின் நிலைய ஊழியர்கள் 3 பேரும், ஒப்பந்த ஊழியர்கள் 3 பேரும் என 6பேர் படுகாயம் அடைந்தனர். உடல்வெந்த நிலையில் அவர்களுக்கு அங்குள்ள அணுநகரில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டது.
பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக நாகர்கோவி்ல் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவத்தையடுத்து அணு உலை எதிர்ப்பாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அவர்கள் திரண்டு வந்து போராட்டம் நடத்த தயாராகி வருவதாக தகவல் பரவியது. இதையடுத்து அங்கு போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர். இதுமட்டுமின்றி டெல்லியில் இருந்து அணு தொழில்நுட்ப வல்லுனர்கள் கூடங்குளம் நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி ஆம்ஆத்மி கட்சி வேட்பாளரும், அணுஉலை எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணை்ப்பாளர்களில் ஒருவருமான உதயகுமார் ஏற்கனவே ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் கூடங்குளம் அணுஉலையில் உள்ள உதிரிபாகங்கள் தரமற்றவையாக இருக்கின்றன. அதை தயாரித்த நிறுவனங்கள் பிரபலமானவை அல்ல என்று குற்றம்சாட்டியிருந்தார். இந்தநிலையில் இப்போது ஏற்பட்டுள்ள விபத்து அதை உறுதிப்படுத்துவது போல் உள்ளது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross