காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் செயலாளர் எஸ்.எம்.ஜெ.முஹம்மத் பாக்கர் (கைபேசி எண்: +852 6079 7474) தந்தை - காயல்பட்டினம் எல்.எஃப். வீதியிலுள்ள புளியங்கொட்டையார் குடும்பத்தைச் சேர்ந்த ஹாஜி ஜெ.ஏ.செய்யித் முஹம்மத் ஜலீல் என்ற (J.A.S.M.Jaleel), இம்மாதம் 11 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 02.30 மணியளவில் - ஹாங்காங்கில் மாரடைப்பால் காலமானார்.
இன்று 16.30 மணியளவில், அன்னாரின் ஜனாஸா ஹாங்காங் சாய்வான் மஸ்ஜிதுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் ஆலோசகர் கம்பல்பக்ஷ் எஸ்.எச்.பாக்கர் ஸாஹிப் ஜனாஸா தொழுகையை வழிநடத்த, மறைந்தவரின் பாவப் பிழைபொறுப்பிற்காகவும், மறுமை நல்வாழ்விற்காகவும் - ஹாங்காங் கவ்லூன் பெரிய பள்ளியின் இமாம் மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.கே.ஷுஅய்ப் நூஹ் மஹ்ழரீ கூட்டுப் பிரார்த்தனை செய்தார்.
பின்னர், பள்ளியையொட்டியுள்ள அடக்கத்தலத்தில் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது.
அனைத்து நிகழ்ச்சிகளிலும், காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் (KUFHK), காயல்பட்டினம் மாணவர் நல மன்றம் (KSWA) ஆகிய அமைப்புகளின் அங்கத்தினர் உள்ளிட்ட காயலர்களும், கீழக்கரை, கூத்தாநல்லூர், தஞ்சாவூர் பகுதிகளைச் சேர்ந்தோர் உள்ளிட்ட இந்திய முஸ்லிம்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.
நிறைவில், மறைந்தவரின் மக்களான - காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை ஹாங்காங் அமைப்பின் செயலாளர் எஸ்.எம்.ஜெ.பாக்கர், காயல்பட்டினத்திலிருந்து சென்றிருந்த - மறைந்தவரின் இளைய மகன் எஸ்.எம்.ஜெ.முஹம்மத் இக்பால் ஆகியோர் உள்ளிட்ட குடும்பத்தினருடன், நல்லடக்கத்தில் கலந்துகொண்ட அனைவரும் கட்டித்தழுவி, கைலாகு செய்து தமது இரங்கலைத் தெரிவித்தனர்.
தகவல் & படங்கள்:
ஹாங்காங்கிலிருந்து...
ஹாஃபிழ் B.S.முஹம்மத் அல்அமீன்
[குடும்பத்தார் வேண்டுகோளுக்கிணங்க - வெளியிடப்பட்ட சில படங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது. @ 23:45 / 13.05.2014] |