காயல்பட்டினம் இஸ்லாமிய தமிழிலக்கிய மாமன்றத்தின் 13ஆவது மாதாந்திர கூட்டம் குறித்து அவ்வமைப்பின் சார்பில் அதன் அமைப்பாளர் ஏ.லெப்பை ஸாஹிப் என்ற ஏ.எல்.எஸ்.மாமா வெளியிட்டுள்ள அறிக்கை:-
சத்துணவு குறைவின் காரணமாக, கண்மங்கள் நோய் ஏற்படுகிறதா? விளக்கம் காண்பீர்!
காயல்பட்டினம் மே 10 சனிக்கிழமை மாலை 5:40 மணி அளவில் ரிஸ்வான் சங்கம் (புதுப்பள்ளி) வளாகத்தில் இஸ்லாமியர் தமிழ் இலக்கிய மாமன்றம் சார்பில் 13ஆம் மாதம் கலந்துரையாடல் நடைபெற்றது. இதன் அமைப்பாளர் ஏ.எல்.எஸ்.இப்னு அப்பாஸ் இலக்கிய பிரியர்களை வரவேற்றார். முதல் பேச்சை அவரே ஆரம்பித்தார்.
சத்துணவு குறைவினால் கண்பார்வை மங்கச் செய்கிறது. இதை உடன் கவனிக்க வேண்டும். இதற்காக விட்டமின் “ஏ” சத்து உணவுகளை தேடி தினமும் உணவுகளுடன் சேர்த்து வரவேண்டும். முருங்கை, புதினா, முளைக்கீரை, கொத்தமல்லி, கருவேப்பிலை, காரட், மஞ்சள் பூசணி, சிகப்பு முள்ளங்கி, தக்காளி, மஞ்சள் நிற காய்கறிகள், மாம்பழம், பப்பாளி பழங்கள், பால், வெண்ணெய், தயிர், முட்டை, மீன், ஈரல் மற்றும் மீன் எண்ணெய் இவைகளை அன்றாடம் உணவுடன் எடுத்து கொள்ள வேண்டும். இன்னும் 7 அல்லது 8ஆம் மாதத்தில் பிறந்த குழந்தைகள் குறைமாதம் ஆகும். அக்குழந்தைகளின் கண்களை உடனே பரிசோதனை செய்வது நலம். இந்த தகவலை அரவிந்த் மருத்துவமனை மாத இதழ் கண்ஒளி ஜனவரி 2010- இதழிலிருந்து தந்தார்.
அடுத்து கவிஞர் ஷேய்க், உமிழ் நீர் நமது உணவுகளை எளிதாக ஜீரணிக்க செய்வதாகவும். வாயில் நாக்குக்கு கீழ் பகுதி, கீழ் தாடைக்கு கீழ்பகுதி, காதுக்கு கீழ் பகுதி உமிழ்நீர் சுரப்பிகள் இயற்கையாக உள்ளது என்றார்.
அடுத்து ஏ.எல்.முஹம்மது நிஜார் பேசும்போது உமிழ் நீருக்கு ஆங்கிலத்தில் ஸலீவா (ளுயுடுஐஏயு) என்று பெயர் ஆகும். கணையத்திலுள்ள இன்சுலின் சுரபி வேலை செய்யாததால் சுகர் நோய்க்கு ஆளாகிறோம் என்று நீண்ட விளக்கம் தந்தார் இன்சுலின் ஊசி ஒரு நாளைக்கு 10 எம்.எல். போட்டாலே போதும் என்றார்.
18.10 மணியளவில், இறையருளால் கூட்டம் இனிதே நிறைவுற்றது.
இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயல்பட்டினம் இஸ்லாமிய தமிழிலக்கிய மாமன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
காயல்பட்டினம் இஸ்லாமிய தமிழிலக்கிய மாமன்றத்தின் முந்தைய (12ஆவது) கூட்ட நிகழ்வுகள் தொடர்பான செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
[செய்தியில் சிறு திருத்தம் செய்யப்பட்டது @ 01:46 / 14.05.2014] |