காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் செயலாளர் எஸ்.எம்.ஜெ.முஹம்மத் பாக்கர் (கைபேசி எண்: +852 6079 7474) தந்தை - காயல்பட்டினம் எல்.எஃப். வீதியிலுள்ள புளியங்கொட்டையார் குடும்பத்தைச் சேர்ந்த ஹாஜி ஜெ.ஏ.செய்யித் முஹம்மத் ஜலீல் என்ற (J.A.S.M.Jaleel), இம்மாதம் 11 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 02.30 மணியளவில் - ஹாங்காங்கில் மாரடைப்பால் காலமானார்.
இன்று 16.30 மணியளவில், அன்னாரின் ஜனாஸா ஹாங்காங் சாய்வான் மஸ்ஜிதுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. தொழுகை மற்றும் பிரார்த்தனை நிகழ்வுகள் நிறைவுற்ற பின், பள்ளியையொட்டிய மையவாடியில் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது.
அன்னாரின் மறைவை முன்னிட்டு, அவரது மஹல்லாவான - காயல்பட்டினம் புதுப்பள்ளியில் இன்று (மே 13 செவ்வாய்க்கிழமை) மஃரிப் தொழுகைக்குப் பின், 19.00 மணியவில் ஙாயிப் ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டது. பள்ளியின் இமாம் ஹாஃபிழ் முஹம்மத் நூஹ் தொழுகையை வழிநடத்தினார். எஸ்.கே.ஸாலிஹ் துஆ பிரார்த்தனை செய்தார்.
அதனைத் தொடர்ந்து, வெளிப்பள்ளியில் அன்னாரின் குடும்பத்தினருக்கு ஸலாம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. புதுப்பள்ளியின் தலைவர் ஹாஜி எஸ்.எம்.உஸைர், மறைந்த மர்ஹூம் ஜெ.ஏ.எஸ்.எம்.ஜலீல் அவர்கள் புதுப்பள்ளி ஜமாஅத்திற்கும், நகர்நலனுக்கும் செய்த சேவைகள் குறித்து சுருக்கவுரையாற்றினார்.
பின்னர், மர்ஹூம் அவர்களின் பு.செ. குடும்பத்தினர் சார்பில் - அவர்களது ஒன்றுவிட்ட சகோதரரும், துளிர் பள்ளியின் நிறுவனருமான வழக்குரைஞர் எச்.எம்.அஹ்மத் சில நிமிடங்கள் பேசினார்.
மர்ஹூம் அவர்களின் சேவைகள் குறித்தும், குடும்பத் தலைவராக அவரிடமிருந்து பெற்ற வழிகாட்டுதல்கள் குறித்தும் புகழ்ந்து பேசிய அவர், மர்ஹூம் அவர்கள் தம் வாழ்நாளில் யாருக்கேனும் அறிந்தோ - அறியாமலோ, சொல்லாலோ - செயலாலோ தவறிழைத்திருப்பின், அல்லாஹ்வுக்காக பொருத்தருளி, அவர்களின் பாவப் பிழை பொறுப்பிற்காக அனைவரும் துஆ செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து, அனைவருக்கும் நன்றி தெரிவித்து மர்ஹூம் அவர்களின் உடன்பிறந்த சகோதரர் ஜெ.ஏ.முஹம்மத் லரீஃப் பேசியதாவது:-
எங்கள் அன்பிற்குரிய சகோதரரான மர்ஹூம் அவர்கள் மே 11ஆம் நாளன்று காலமானது முதல், ஜனாஸாவைப் பாதுகாத்து, குளிப்பாட்டி, கஃபனிட்டு, அரசு தொடர்பான அனைத்து வேலைகளையும் தமது பணியாகக் கருதி முன்னின்று செய்தமைக்காக, காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் (KUFHK), காயல்பட்டினம் மாணவர் நல மன்றம் (KSWA) ஆகியவற்றின் அங்கத்தினர் உள்ளிட்ட ஹாங்காங் வாழ் காயலர்கள், கீழக்கரை, கூத்தாநல்லூர், தஞ்சாவூர் உள்ளிட்ட ஊர்களைச் சேர்ந்த பொதுமக்கள், இறுதிச் சடங்குப் பணிகளில் இணைந்து களப்பணியாற்றிய - பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பொதுமக்கள், ஹாங்காங் - இந்தியன் முஸ்லிம் அசோஸியேஷன் அங்கத்தினர் உட்பட அனைவருக்கும் மர்ஹூம் அவர்களின் பாக்கர் காலனி, பு.செ.குடும்பத்தினர், கம்பல்பக்ஷ் குடும்பத்தினர் யாவரும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அதுபோல, மர்ஹூம் அவர்கள் மரணித்த நாள் முதல், அடக்கப்பட்ட நாள் வரை, அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் வெளியிட்டு - அனைவருக்கும் தகவல்களைத் தெரியப்படுத்திய காயல்பட்டினத்தின் அனைத்து இணையதள ஊடகங்கள், அவ்வூடகங்களின் வாயிலாகவும், தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் மூலமாகவும் இரங்கல் தெரிவித்தும், துஆ - பிரார்த்தனை செய்தும் கருத்துக்களைத் தெரிவித்த அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் மர்ஹூம் அவர்களின் குடும்பத்தார் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஜஸாக்குமுல்லாஹு கைரா...
இவ்வாறு, மர்ஹூம் அவர்களின் உடன்பிறந்த சகோதரர் ஜெ.ஏ.முஹம்மத் லரீஃப் பேசினார்.
இந்நிகழ்வுகளில், காயல்பட்டினம் புதுப்பள்ளி துணைத்தலைவர் எஸ்.எஸ்.எம்.முஹம்மத் இஸ்மாஈல், செயலாளர் ஏ.எஸ்.அஷ்ரஃப், எம்.எஸ்.ஸதக்கத்துல்லாஹ், ஐக்கிய விளையாட்டு சங்க தலைவர் பி.எஸ்.ஏ.பல்லாக் லெப்பை, செயலாளர் பி.எஸ்.எம்.இல்யாஸ், நிர்வாகிகளான பல்லாக் அப்துல் காதிர் நெய்னா, எஸ்.ஏ.அஹ்மத் முஸ்தஃபா, ஏ.எஸ்.புகாரீ,
அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் நிர்வாகிகளான எஸ்.ஓ.கியாத், ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ, காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ், மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் நிர்வாகிகளான கம்பல்பக்ஷ் என்.எஸ்.நூஹ் ஹமீத், கம்பல்பக்ஷ் எச்.எச்.மொகுதூம் முஹம்மத், ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் ஆசிரியர் எம்.ஐ.தமீமுல் அன்ஸாரீ,
முஹ்யித்தீன் டிவி இயக்குநர் ஜெ.எம்.அப்துர்ரஹீம், சென்ட்ரல் மேனிலைப்பள்ளியின் ஆசிரியர் இசட்.ஏ.ஷேக் அப்துல் காதிர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப், அதன் நகர துணைச் செயலாளர் பெத்தப்பா சுல்தான், இளைஞரணி நகர அமைப்பாளர் ஏ.ஆர்.ஷேக் முஹம்மத், காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர்களான எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், எஸ்.ஏ.சாமு ஷிஹாபுத்தீன் உட்பட காயல்பட்டினம் நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். நிறைவில் அனைவரும் - மர்ஹூம் அவர்களின் குடும்பத்தினருடன் கட்டித் தழுவி, கைலாகு செய்து இரங்கல் தெரிவித்துப் பிரார்த்தித்தனர்.
படங்களுள் உதவி:
ஹாஃபிழ் M.M.முஜாஹித் அலீ |