காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்தால் நடத்தப்பட்ட – தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த பயிற்சி வகுப்பில், சமூக ஆர்வலர்கள் பங்கேற்றுள்ளனர். இதுகுறித்த செய்தியறிக்கை:-
தகவல் அறியும் உரிமை சட்டத்தினை (RIGHT TO INFORMATION ACT), 2005 ஆம் ஆண்டு மத்திய அரசு - நாடு முழுவதும் அமல்படுத்தியது. இந்த சட்டம் மூலம் - அரசு, அரசு சார்ந்த மற்றும் அரசு உதவி பெறும் துறைகளிடம் இருந்து - அவர்கள் வசம் உள்ள, பல்வேறு வகையான, பல்வேறு வடிவில் உள்ள தகவல்களை (INFORMATION) - நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் கோரலாம்.
இந்திய சுதந்திரத்திற்கு பிறகு அமலுக்கு வந்த சட்டங்களில், மிகவும் முக்கியமான சட்டமாக கருதப்படும் இச்சட்டத்தை, எவ்வாறு பயன்படுத்துவது என்பதற்கு பயிற்சி முகாம்களை - நடப்பது என்ன? குழுமம், காயல்பட்டினத்தில் தொடர்ந்து நடத்தவுள்ளது.
முதல் பயிற்சி வகுப்பு நவம்பர் 26 (அரசியல் சாசனம் தினம்; CONSTITUTION DAY) இன்று, மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (மெகா) உடைய நிர்வாக அலுவலகத்தில், காலை 10:00 மணி முதல் மதியம் 12:30 வரை - நடத்தப்பட்டது.
TRAINING OF TRAINERS என்ற அடிப்படையில் நடைபெற்ற இந்நிகிழ்ச்சியில், சமூக ஆர்வலர்கள் பலர் கலந்துக்கொண்டனர். இந்த சட்டம் குறித்து எளிதாக விளக்கும் கையேடு கலந்துக்கொண்ட அனைவருக்கும் வழங்கப்பட்டது.*
கலந்துரையாடலாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களிடம், இது போன்ற பயிற்சி நிகழ்ச்சியினை தத்தம் பகுதிகளில் அவர்கள் நடத்திடவும், அதற்கான உதவிகளை நடப்பது என்ன? குழுமம் வழங்கும் என்றும் உறுதி அளிக்கப்பட்டது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: நவம்பர் 26, 2017; 4:30 pm]
[#NEPR/2017112601]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|