சோஷியல் டெமாக்ரட்டிக் பார்ட்டி ஆஃப் இந்தியா – SDPI கட்சியின் தூத்துக்குடி மாவட்ட தொழிற்சங்க அணி துவக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த – அக்கட்சியின் செய்தியறிக்கை;-
SDPl கட்சியின் தொழிற்சங்க பிரிவான SDTU தொழிற்சங்க அமைப்பு (சோஷியல் டெமாக்ரடிக் டிரேடு யூனியன்) தூத்துகுடி மாவட்டம் கொங்கராயன் குறிச்சியில் 20/11/2017 திங்கள்கிழமை அன்று புதியதாக துவங்கப்பட்டது.
இந்த தொழிற் சங்கத்திற்கு ஆராம்பண்ணை மற்றும் கொங்கராயன் குறிச்சி ஒருங்கிணைந்த சேர்மன் இப்ராஹிம் நகர் ஆட்டோ ஓட்டுநர் சங்கம் என்ற பெயரில் செயல்பட வேண்டி தீர்மானிக்கப்பட்டது.
இந்த தொழிற் சங்கத்திற்கு நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க சிறப்பு அழைப்பாளர்களாக தூத்துக்குடி மாவட்ட SDPI கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் காயல் சம்சுதீன் அவர்களும், SDTU தொழிற்சங்க நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் M.ரத்திஸ் முஹம்மது அலி அவர்கள் கலந்து கொண்டனர. SDTU தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் (பொறுப்பு ) மியாகான் சேக் அவர்களின் ஒருங்கிணைப்பில் இந்த கூட்டம் நடைபெற்றது..
SDTU தொழிற்சங்கத்தில் ஏன் சேர வேண்டும் தொழிற்சங்கதினால் தொழிலாளர்கள் பெறும் பயன்கள் பற்றி #SDTU நெல்லை கிழக்கு மாவட்டம் செயலாளர் M.ரதீஸ் முஹம்மது அலி அவர்கள் தொழிற்சங்க உறுப்பினர்களுக்கு விளக்கமாக கூறினார்.
இந்நிகழ்ச்சியில் ஏராளமான ஆட்டோ / வாகன ஒட்டுனர்கள் / பொதுமக்கள் கலந்து கொண்டார்கள். முதற்கட்டமாக 15 நபர்கள் தங்களை #SDTU தொழிற்சங்கத்தி இணைத்து கொண்டனர்..
புதியதாக துவங்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் சங்கம் கொங்கராயன் குறிச்சி மற்றும் கருங்குளம் புதிய ஆற்றுப்பாலம் வடக்கு பகுதியில் அமைய உள்ளது. இதற்காக ஆராம்பண்ணை மற்றும் கொங்கராயன் குறிச்சி ஒருங்கிணைந்த சேர்மன் இப்ராஹீம் நகர் ஆட்டோ ஓட்டுநர் சங்கம் என்ற பெயர் ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது.
மேலும் இந்த தொழிற் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
தலைவர் : முகமது இஸ்மாயில் ,
செயலாளர் : தங்கராஜ்,
பொருளாளர் : அபுபக்கர் சித்திக் ,
துணைத் தலைவர் : ஜெயசிங் ,
துணைச் செயலாளர் : அப்துல் ரவ் ஃப்
ஆகியோர் தேர்வு செய்யப்பட்டார்கள்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
மியாகான் சேக்,
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் (பொறுப்பு)
SDTU - தூத்துக்குடி மாவட்டம்.
|