நிகழும் வடகிழக்குப் பருவமழையையொட்டி, காயல்பட்டினத்தில் கடந்த சில நாட்களாக மீண்டும் ஓரளவுக்கு மழை பொழியத் துவங்கியுள்ளது.
நேற்று (26.11.2017. ஞாயிற்றுக்கிழமை) 14.30 மணி துவங்கி, 18.30 மணி வரை நகரில் இதமழை பெய்தது. தாழ்வான பகுதிகளில் வழமை போல மழைநீர் தேங்கிக் காணப்படுகிறது.
இன்று 12.40 மணி நிலவரப்படி, நகரில் வெயில் இல்லை. இதமான வானிலை நிலவுகிறது.
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்திலிருந்து நேற்று வெளியிடப்பட்டுள்ள மழை பொழிவுப் பட்டியலின் படி, காயல்பட்டினத்தில் 27.80 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இது, மாவட்டத்தில் நான்காவது அதிகபட்ச மழைப் பொழிவாகும்.
|