‘புன்னகை மன்றம்’ வாட்ஸ் அப் குழுமம், அரிமா சங்க காயல்பட்டினம் கிளை ஆகிய அமைப்புகள் இணைவில் நடத்தப்பட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், சுமார் 1 லட்சம் ரூபாய் மதிப்பில் நலிந்தோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. விரிவான விபரம்:-
காயல்பட்டினம் ‘புன்னகை மன்றம்’ வாட்ஸ் அப் குழுமம், அரிமா சங்க காயல்பட்டினம் கிளை ஆகிய அமைப்புகள் சார்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, 26.11.2017. ஞாயிற்றுக்கிழமையன்று, காயல்பட்டினம் துளிர் பள்ளி கேளரங்கில், அரிமா சங்க தலைவர் எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில்,
குவைத் நாட்டில் பணிபுரியும் அப்துர்ரஹ்மான் நிதிநல்கையில் – துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளிக்கு 65 ஆயிரம் ரூபாய் மதிப்பில் சோலார் மின் விளக்குகள், அபூதபீயில் பணிபுரியும் ‘துணி’ உமர் அன்ஸாரீ & ஓமன் காயல் நல மன்ற நிதிநல்கையில், 25 ஆயிரம் ரூபாய் மதிப்பில் – பேசும் பயிற்சியளிக்கும் (Speech Theraphy) கருவி ஆகியன அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
இயலா நிலையிலுள்ள ஒருவருக்கு 4 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பிலான ஊன்றுகோல், கே.எம்.ரஃபீக் நிதிநல்கையில் – சுவாசப் பிரச்சினையுள்ள ஒருவருக்கு 2 ஆயிரத்து 900 மதிப்பிலான நெபுலைசர் கருவி, தேனீர் விற்பனை செய்யும் ஒருவருக்கு 2 ஆயிரம் ரூபாய் மதிப்பில் தேனீர் கேன் ஆகியன அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
அத்துடன், குளிர்காலத்தை முன்னிட்டு – தேவையுடையோருக்கு படுக்கை விரிப்பு (பெட்ஷீட்) வழங்கல், துளிர் பள்ளி குழந்தைகளுக்கு காலணி (ஷூ) வழங்கல் ஆகிய திட்டங்களும் இதன்போது அறிமுகப்படுத்தப்பட்டன.
‘புன்னகை மன்றம்’ வாட்ஸ் அப் குழும நிர்வாகி ஏ.எல்.முஹம்மத் நிஜார் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்த, காயல்பட்டினத்தைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் கிஸார், காயல் அமானுல்லாஹ், மஸ்ஊத், மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.
விழா ஏற்பாடுகளை – துளிர் பள்ளி செயலாளர் எம்.எல்.ஷேக்னா லெப்பை, ‘புன்னகை மன்றம்’ குழும நிர்வாகி ஏ.எல்.முஹம்மத் நிஜார், வி.டி.என்.அன்ஸாரீ, ஜுவெல் ஜங்ஷன் கே.அப்துர்ரஹ்மான், ஷேக் அப்துல் காதிர் ஆகியோர் ஒருங்கிணைப்பில் குழுவினர் செய்திருந்தனர்.
தகவல் & படங்கள்:
A.L.முஹம்மத் நிஜார்
(நிர்வாகி: ‘புன்னகை மன்றம்’ வாட்ஸ்அப் குழுமம்)
|