காயல்பட்டினத்தில் திடக்கழிவு கிடங்கு தொடர்பாக பரப்பப்பட்டு வரும் பொய்த் தகவல்கள் தொடர்பாக, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் விரிவான விளக்கம் தொடராக அளிக்கப்பட்டு வருகிறது. முதல் பாகம் குறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினத்தில் உருவாகும் குப்பைகளை கொட்டுவதற்கான இடம் (கிடங்கு) குறித்த விவாதங்கள் - சுமார் 60 ஆண்டுகளாக நகரில் நடந்துவருகிறது. அந்த விவாதங்கள் எழும் போது எல்லாம், தீர்வுகள் காணப்பட்டு - அப்பிரச்சனைகள் தற்காலிகமாக ஓய்ந்தும் உள்ளன.
கடந்த சில ஆண்டுகளாக மீண்டும் இப்பிரச்சனை, நகரில் விவாதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, சில சமூக ஊடகக்குழுமங்களில், பப்பரப்பள்ளியில் குப்பைகள் கொட்டுவதற்கு - நடப்பது என்ன? குழுமம் / மெகா அமைப்பு / அந்த அமைப்பை சார்ந்த சிலர் - காரணமென, உண்மைக்கு புறம்பான பிரச்சாரங்களை ஒரு சிலர் செய்து வருகிறார்கள்.
இதில் ஏதேனும் உண்மை உள்ளதா?
கொம்புத்துறை (கடையக்குடி) பகுதியில் - முன்னாள் நகர்மன்றத்தலைவர் வழங்கிய இடத்தை மாற்று குப்பைக்கிடங்கு இடமாக மாற்ற, அவ்விடத்தில் பயோ காஸ் திட்டம் கொண்டு வர - ஏன் எதிர்ப்புகள் பதிவு செய்யப்பட்டன?
இப்பிரச்சனை சம்பந்தமான வழக்குகளின் தற்போதைய நிலை என்ன?
--- ஆகிய மேற்கண்ட கேள்விகளுக்கான - விரிவான, ஆதாரங்கள், ஆவணங்கள் அடிப்படையிலான விளக்கங்களை - நடப்பது என்ன? குழுமம், இறைவன் நாடினால் - வெளியிட முடிவு செய்துள்ளது.
இன்னும் சொல்லப்போனால் - பப்பரப்பள்ளியில் குப்பைகள் கொட்டுவதை எதிர்த்து, அப்பகுதி மக்கள் சார்பாக - பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர - ஆர்வமூட்டியவர்களில், நடப்பது என்ன? குழும நிர்வாகிகளும் உண்டு.
மேலும் அவ்வழக்கிற்கான - கணிசமான நிதி உதவியை, நடப்பது என்ன? குழுமம் நிர்வாகிகளும் செய்துள்ளார்கள்.
மேலும் - நடப்பது என்ன? குழுமத்தின் மூத்த நிர்வாகிகள், அப்பகுதியில் வாழக்கூடியவர்கள் கூட. அப்படி இருக்க, தொடர்ந்து அவ்விடத்தில் குப்பைகள் கொட்டப்பட - எவ்வாறு அவர்கள் ஆதரவு தெரிவிப்பார்கள்?
இது தவிர - முதற்கட்டமாக, அங்கு கொட்டப்படும் குப்பைகளுக்கு தீமூட்டும் செயலை உடனடியாக நிறுத்த - மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆணையை பெற்றதும் - நடப்பது என்ன? குழுமம் தான்.
இது குறித்த விளக்கங்கள் அவ்வப்போது பல்வேறு வகைகளில் கடந்த காலங்களில் தெரிவிக்கப்பட்டிருந்தாலும், தற்போது பல பாகங்களாக வெளியிட திட்டமிடப்பட்டுள்ள விளக்கங்கள் - இப்பிரச்சனையின் அனைத்து அம்சங்களையும் வெளிக்கொண்டுவரும் விதமாக (இறைவன் நாடினால்) அமையும்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: நவம்பர் 30, 2017; 9:30 am]
[#NEPR/2017113001]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|