காயல்பட்டினத்தில் திடக்கழிவு கிடங்கு தொடர்பாக பரப்பப்பட்டு வரும் பொய்த் தகவல்கள் தொடர்பாக, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் விரிவான விளக்கம் தொடராக அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழக அரசு விதித்த காலக்கெடுவுக்குள் மாற்று காயல்பட்டினம் நகராட்சி மாற்று இடம் வாங்காத தகவலை உள்ளடக்கி, “நடப்பது என்ன?” குழுமத்தால் ஆறாம்ம் பாக அறிக்கை வெளியிடப்பட்டள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
//பப்பரப்பள்ளியில் குப்பைகள் கொட்டப்படத்துவங்கி 25 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது; அங்கு குப்பைக்கொட்ட எடுக்கப்பட்ட முடிவுக்கும், கடந்த ஆறு ஆண்டுகளுக்குள் உருவான மெகா அமைப்பு / நடப்பது என்ன? குழுமம் ஆகியற்றுக்கும் - எவ்வித தொடர்பும் இல்லை.//
//பப்பரப்பள்ளியில் - எவ்வித பாதுகாப்பு நடவடிக்கையும் எடுக்காமல், குப்பைகளை கொட்டி - சுற்றுச்சூழலை சீரழிக்கும் தவறை அரங்கேற்றியவர்கள் - அங்கு குப்பைக்கொட்ட துவங்கப்பட்ட காலத்தில் இருந்து பஞ்சாயத்து / நகராட்சி தலைவர்களாகவும், உறுப்பினர்களாகவும், அக்காலகட்டத்தில் செயலாற்றிய சமூக அமைப்புகளும், அரசியல் பிரமுகர்களும் தான்; கடந்த ஆறு ஆண்டுகளுக்குள் உருவான மெகா அமைப்பு / நடப்பது என்ன? குழுமம் ஆகியற்றுக்கும் - அதில் எந்த பங்கும் இல்லை.//
மேலே தெரிவிக்கப்பட்டுள்ள உண்மைகள் - பாகம் 1 - 5 வரை வெளியிடப்பட்ட தகவல்கள், ஆவணங்கள் வாயிலாக தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இந்த உண்மைகளை மறந்து / மறைத்து, மெகா அமைப்பு / நடப்பது என்ன? குழுமம் ஆகியவற்றின் மீது அவதூறு சொல்வது - அவ்வாறு சொல்பவர்கள், சிறந்த வகையில் கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக செயல்புரிந்துவந்தவர்கள் என அவர்கள் உயர்வாக பேசும் நபர்களையும், அமைப்புகளையும் - பாதுகாக்க / அவர்களின் தவறை மறைக்க, பரப்பும் அவதூறுகள் தான் என்பதும் இதன் மூலம் அனைவருக்கும் தெளிவாகியிருக்கும்.
அடுத்து அவர்கள் - மெகா அமைப்பு / நடப்பது என்ன? குழுமம் அங்கத்தினர்கள் மீது எடுத்து வைக்கும் குற்றச்சாட்டு -
இல்லை, இல்லை, மெகா / நடப்பது என்ன? குழுமம் பப்பரப்பள்ளியில் குப்பைகொட்ட சொன்னதாக நாங்கள் சொல்லவில்லை; ஆனால் - கொம்புத்துறை (கடையக்குடி) பகுதியில் முன்னாள் நகர்மன்றத்தலைவர் தந்த இடத்தில் குப்பைக்கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்; வழக்கு நடக்கிறது; அதனால் தான் - பப்பரப்பள்ளியில் தொடர்ந்து குப்பைக்கொட்டப்படுகிறது
என்பதாகும்.
{}{}{} மெகா அமைப்பு / நடப்பது என்ன? குழுமம் நிர்வாகிகள் சிலர் - முன்னாள் நகர்மன்றத்தலைவர் தந்த இடத்திற்கு எந்த காரணத்திற்காக எதிர்ப்பு தெரிவித்தார்கள்?
{}{}{} கொம்புத்துறை (கடையக்குடி) இடத்திற்கு ஏன், யாரால் வழக்கு தொடரப்பட்டது? அந்த வழக்குகளின் தற்போதைய நிலை என்ன?
ஆகிய கேள்விகளுக்கு அடுத்தடுத்த பாகங்களில் - விரிவாக, தெளிவான விளக்கங்கள் வழங்கப்படும்.
கொம்புத்துறை (கடையக்குடி) இடத்திற்கு மெகா அமைப்பு பதிவு செய்த எதிர்ப்பும், போடப்பட்ட வழக்குகளும் தான் - பப்பரப்பள்ளி இடத்தில் இருந்து குப்பைக்கிடங்கு வேறு இடம் செல்ல காலம் தாழ்த்துகிறது என கூறப்படுவது உண்மை அல்ல; அவ்விடத்திற்கான எதிர்ப்புகள் 2013 ஆம் ஆண்டிலும், வழக்கு 2015 ஆம் ஆண்டிலும் பதிவாகின்றன.
ஆனால் - பப்பரப்பள்ளியில் இருந்து வேறு இடத்திற்கு குப்பைக்கொட்டப்படுவது மாற்றப்படவேண்டும் என்ற முடிவு - குறைந்தது 11 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டது. அதாவது - 6.9.2006 அன்று தமிழக அரசு ஒரு அரசாணை (G.O.(Ms.) No.86 MUNICIPAL ADMINISTRATION AND WATER SUPPLY [MA.II] DEPARTMENT) வெளியிட்டது.
அதன் நோக்கம் என்னவென்றால், 2000 ஆம் ஆண்டில், மத்திய அரசு - திடக்கழிவுகள் சம்பந்தமாக ஒரு புது சட்டத்தை கொண்டு வந்தது [Municipal Waste (Management and Handling) Rules 2000].
அதனை தொடர்ந்து - மாநிலத்தின் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் - 2003 ஆம் ஆண்டு இறுதிக்குள், குப்பைகொட்டுவதற்கான முறையான இடம் ஒதுக்கவேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சில உள்ளாட்சி மன்றங்களுக்கு, குப்பைக்கொட்ட இடம் வாங்க - மானியமும், தமிழக அரசால் வழங்கப்பட்டது.
அந்த சட்டம் கொண்டுவரப்பட்டபோது - காயல்பட்டினம், தேர்வு நிலை பஞ்சாயத்து தகுதியில் இருந்தது; நகராட்சியாக இல்லை. அதனால் - அந்த சட்டத்தின் விதிமுறைக்குள் நேரடியாக காயல்பட்டினம் வரவில்லை.
ஜூன் 11, 2004 இல் - காயல்பட்டினம், மூன்றாம் நிலை நகராட்சி என்ற தகுதியை பெறுகிறது. அதன் மூலம் - காயல்பட்டினம் நகராட்சி, 2000 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் கீழ், நகராட்சி என்ற அடிப்படையில் வந்துவிடுகிறது.
அதன் அடிப்படையில் தான் - காயல்பட்டினம் நகராட்சி உட்பட 12 நகராட்சிகளுக்கு, தமிழக அரசு, 1 கோடியே, 72 லட்சத்து, 76 ஆயிரம் ரூபாய் ஒதுக்குகிறது. அதில் - காயல்பட்டினத்தின் பங்கு - 5 லட்சம் ஆகும்.
இது சம்பந்தமாக வெளியான - அரசாணை முழுவதும் இணைக்கப்பட்டுள்ளது. தொடர்பான வாசகங்கள் மட்டும் - கீழே பதியப்படுகிறது:
But, for final disposal of garbage many municipalities do not have sufficient land for compost yard. 30 Municipalities are searching for suitable land for compost yard and only 8 Municipalities are having adequate land for compost yard. In the circumstances the Commissioner of Municipal Administration has requested to sanction Rs.172.76 lakhs for purchase of land for establishing compost yard in 12 Third Grade Municipalities as detailed in the Annexure to this order. (Original English Version)
ஆனால் - இறுதியாக குப்பைகளை கொட்ட, பல நகராட்சிகளுக்கு போதிய இடம் இல்லை. 30 நகராட்சிகள் இடங்களை தேடிக்கொண்டிருக்கிறாரகள்; 8 நகராட்சிகளிடம் தான் போதிய இடம் உள்ளது. இந்த சூழலில், நகராட்சி நிர்வாகத்துறை ஆணையர், இந்த ஆணையுடன் இணைக்கப்பட்டுள்ள தொகுப்பில் காணப்படும் 12 மூன்றாம் நிலை நகராட்சிகளுக்கு, குப்பைகொட்டுவதற்கான இடம் வாங்க - 1 கோடியே, 72 லட்சத்து, 76 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்க கோரியுள்ளார். (தமிழாக்கம்)
மேலே காணும் ஆணையில் இடம்பெற்ற 12 நகராட்சிகளில், காயல்பட்டினமும் ஒன்று. இந்த ஆணை வெளியிடப்பட்டது - செப்டம்பர் 6, 2006. 2001 - 2006 காலகட்டத்தில் பொறுப்பில் இருந்த - திருமதி வஹீதா அவர்களின் தலைமையிலான - உள்ளாட்சி மன்றத்தின் இறுதி மாதம்.
அதாவது - ஹாஜி வாவூ செய்யது அப்துர் ரஹ்மான் தலைமையில், புதிய உள்ளாட்சிமன்றம் பொறுப்பிற்கு வர - ஒரு மாதத்திற்கு முன்னரே, தமிழக அரசு - பப்பரப்பள்ளி இடத்திற்கு மாற்றாக புதிய இடம் வாங்க - 5 லட்சம் ரூபாய், நிதியை காயல்பட்டினத்திற்கு வழங்கிவிட்டது.
அது மட்டும் அல்ல.
அதே அரசாணையில் - 2006 - 2007 நிதியாண்டு முடிவதற்குள், அதாவது மார்ச் 31, 2007 தேதிக்குள் - குப்பைக்கொட்டுவதற்கான இடம் வாங்கப்படவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
The Commissioner of Municipal Administration is requested to review the purchase of proper land by the Municipalities and see that the compost yards are established by them within the financial year 2006 - 2007. (Original English Version)
குப்பைக்கொட்ட முறையான இடம் நகராட்சிகளால் வாங்கப்படுவதை ஆய்வு செய்து, 2006-2007 நிதியாண்டுக்குள் அந்த குப்பைக்கிடங்குகள் நிறுவப்படுவதை - நகராட்சி நிர்வாகத்துறை ஆணையர் உறுதிசெய்யவேண்டும். (தமிழாக்கம்)
முன்னாள் நகர்மன்றத்தலைவர் ஹாஜி வாவூ செய்யது அப்துர் ரஹ்மான் தலைமையிலான நகர்மன்றம் - பப்பரப்பள்ளி இடத்திற்கான மாற்று இடத்தை - *மார்ச் 31, 2007 க்குள் வாங்கினார்களா?
மார்ச் 31, 2007 க்குள் மட்டும் அல்ல, தங்கள் முன்பு இருந்த - முழு ஐந்தாண்டுகளுக்குள்ளும் - பப்பரப்பள்ளிக்கு மாற்று குப்பைக்கொட்டும் இடத்தை வாங்கினார்களா? இல்லவே இல்லை.
அரசு விதித்த காலக்கெடு (31-3-2007) தாண்டிய பிறகும், அந்த ஐந்தாண்டுக்குள் (2006-2011), பப்பரப்பள்ளிக்கு மாற்று இடம் வாங்காமல் - பப்பரப்பள்ளி இடம்/சுற்றுவட்டாரம், சுற்றுச்சூழல் அடிப்படையிலும், சுகாதார அடிப்படையிலும் மேலும் சீர் கெட வழி வகுத்தது யார்?
அப்போது பொறுப்பில் இருந்த - நகர்மன்றத்தலைவர் ஹாஜி வாவூ செய்யது அப்துர்ரஹ்மான் தலைமையிலான நகர்மன்றமா? அந்த நகர்மன்றத்திற்கு பாதுகாவலர்களாக இருந்த காயல்பட்டினம் முஸ்லீம் ஐக்கிய பேரவையா? அப்போது மேடைகளில் அடுக்குமொழியில் பேசி நகரில் வலம் வந்த அரசியல் பிரமுகர்களா?
அல்லது - கடந்த ஆறு ஆண்டுகளுக்குள் உருவான - மெகா அமைப்பா? நடப்பது என்ன? குழுமமா? கெப்பா அமைப்பா?
மக்களே சற்று சிந்தியுங்கள்!
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: டிசம்பர் 2, 2017; 1:30 pm]
[#NEPR/2017120201]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |