தூத்துக்குடி மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடேஷ் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
தூத்துக்குடி மாவட்டத்தில் 02.12.2017. அன்று காலை 08.00 மணி வரை (கடந்த 24 மணி நேரத்தில்) கீழ்க்கண்ட விபரப்படி மழை பெய்துள்ளது:-
இம்மழை காரணமாக,
தூத்துக்குடி வட்டத்தில் 4 வீடுகள் பகுதி சேதமும்,
திருச்செந்தூர் வட்டத்தில் 3 வீடுகள் பகுதி சேதமும், 2 வீடுகள் முழுவதுமாகவும் சேதம் அடைந்;துள்ளது.
சாத்தான்குளம் வட்டத்தில் 2 வீடுகள் பகுதி சேதமும், 1 வீடு முழு சேதமும் அடைந்துள்ளது.
கோவில்பட்டி வட்டத்தில் ஒரு வீடு பகுதி சேதமும்,
விளாத்திகுளம் வட்டத்தில் 5 வீடுகள் பகுதி சேதமும்,
எட்டையபுரம் வட்டத்தில் 4 வீடுகள் பகுதி சேதமும்,
கயத்தார் வட்டத்தில் 2 வீடுகள் பகுதி சேதமும்
ஆக மொத்தம் 21 வீடுகள் பகுதி சேதமும், 3 வீடுகள் முழுவதுமாகவும் சேதமடைந்துள்ளன.
தாமிரபரணி; ஆற்றில் அதிக வெள்ளம் செல்லுவதன் காரணமாக புன்னக்காயல் கிராம பகுதியில் சாலையில் தண்ணீர் தேங்கியுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு நிவராண முகாம் அமைக்கப்பட்டு - 107 ஆண்களும், 204 பெண்களும், 34 குழந்தைகளும் ஆக மொத்தம் 345 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான குடிநீர், உணவு செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
மாவட்ட ஆட்சியர் அவர்கள் வெள்ளக் கட்டுபாட்டு அறையைப் பார்வையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|