சஊதி அரபிய்யா – ரியாத் காயல் நல மன்றத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினர் கூஸ் அபூபக்கர் உடைய தாய்மாமா – காயல்பட்டினம் தீவுத் தெருவைச் சேர்ந்த ‘பெரிய சோனா’ என்றழைக்கப்படும் சோனா முஹ்யித்தீன் அப்துல் காதிர், நேற்று (02.12.2017. சனிக்கிழமை) 23.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 61. அன்னார்,
மர்ஹூம் பி.அபூபக்கர் அவர்களின் மகனும்,
மர்ஹூம் சோனா மஹ்மூத் மானாத்தம்பி அவர்களின் மருமகனாரும்,
எம்.ஏ.செய்யித் அஹ்மத், எம்.ஏ.பஷீர், எம்.ஏ.செய்யித் அப்துல் பாரிஃ ஆகியோரின் சகோதரரும்,
சோனா அபூபக்கர் ஸித்தீக், சோனா மஹ்மூத் புகாரீ, செய்யித் ராபியா ஆகியோரின் தந்தையும்,
சோனா எம்.ஏ.கே.மஹ்மூத் மானாத்தம்பி என்பவரது மாமனாரும்,
மர்ஹூம் கூஸ் ஸலீம், ரியாத் காயல் நல மன்ற ஆலோசனைக் குழு உறுப்பினர் கூஸ் அபூபக்கர் ஆகியோரின் தாய்மாமாவும்,
மர்ஹூம் கூஸ் செய்யித் அபூதாஹிர் அவர்களின் மைத்துனரும்,
சோனா முஹ்யித்தீன் அப்துல் காதிர், சோனா ஷாஹுல் ஹமீத், சோனா முஹம்மத் அப்துல் காதிர், சோனா லெப்பைக்குட்டி, ஹாஃபிழ் சோனா அமீர் சுல்தான் ஆகியோரது சகோதரியின் கணவரும்,
வங்காளம் உமர் அப்துல் காதிர், எம்.எச்.செய்யித் முஹம்மத் ஸாலிஹ், ஏ.ஏ.சி.செய்யித் முஹம்மத் ஆகியோரின் சகலையும்,
எஸ்.ஏ.பி.அபூபக்கர் ஷிஃபாய், ஏ.செய்யித் அபூதாஹிர், ஏ.ஈஸா, சோனா எம்.ஏ.எஸ்.ஹம்ஸா ஆகியோரின் பாட்டனாருமாவார்.
அன்னாரின் ஜனாஸா, இன்று அஸ்ர் தொழுகைக்குப் பின், காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
தகவல்:
A.G.முஹம்மத் ஜுபைர்
(தீவுத்தெரு, காயல்பட்டினம்.) |