காயல்பட்டினம் தொடர்வண்டி நிலையத்தில் நிலவும் போதிய வெளிச்சமின்மை உள்ளிட்ட பெருங்குறைகளைச் சுட்டிக்காட்டி, அவற்றுக்கான தீர்வைத் தரக் கோரி, மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு சார்பில் தென்னக ரெயில்வேயிடம் முறையிடப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து, தென்னக ரெயில்வே அதிகாரி காயல்பட்டினம் தொடர்வண்டி நிலையத்தை நேரில் ஆய்வு செய்துள்ளார். இதுகுறித்து, “நடப்பது என்ன?” குழுமத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் ரயில்வே நிலையத்தில் போதிய வெளிச்சம் இல்லை என்ற புகார் நீண்ட நாட்களாக நிலவுகிறது. இது குறித்து - பல மாதங்களாக புகார்கள் தெரிவிக்கப்பட்டும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் - மத்திய ரயில்வே அமைச்சகத்தின் கவனத்திற்கு இப்பிரச்சனை - மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (மெகா) சார்பாக கொண்டு செல்லப்பட்டுள்ளது.
அதன் பிறகு - மெகா நிர்வாகிகளை தொடர்புக்கொண்டு - தென்னக ரயில்வே உடையை மதுரை கோட்ட அதிகாரிகள், இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
அதன் தொடர்ச்சியாக - இன்று மதியம் - தென்னக ரயில்வே உடைய திருநெல்வேலி பகுதி சார்ந்த அதிகாரி திரு மாணிக்கம் (SSE) - காயல்பட்டினம் ரயில்வே நிலையத்திற்கு நேரடியாக வந்து பார்வையிட்டார்.
அந்த சமயத்தில் - வெளிச்சம் குறைவு காரணமாக பயணியர் சந்திக்கும் பிரச்சனைகள் எடுத்துரைக்கப்பட்டன.
மேலும் - பயணியர்களின் நீண்ட நாட்கள் கோரிக்கையான நடைமேடை உயர்த்துவது குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.
இது தவிர - காத்திருக்கும் அறை, நடைமேடையில் உள்ள மேற்கூரை - மழையில் ஒழுகுவதும் - அவரிடம் தெரிவிக்கப்பட்டது.
நீண்ட நாட்களாக செயல்படாமல் இருக்கும் ஸ்டேஷன் தொலைபேசி குறித்து தெரிவிக்கப்பட்ட புகாருக்கு, விரைவில் நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டும் - இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாதது குறித்தும் அவரிடம் எடுத்துரைக்கப்பட்டது.
கோரிக்கைகளை கேட்டறிந்த திரு மாணிக்கம் - இது குறித்து முறையான நடவடிக்கைகளை விரைவில் எடுப்பதாக உறுதியளித்தார்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|