1 முதல் 9 ஆம் வகுப்பு வரை பாடநூல் விநியோகம் மாநிலத்தில் துவங்கியுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-
இந்த ஆண்டு தமிழ் நாட்டில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் தேவையான பாடநூல்களை விரைவில் அச்சடித்து தமிழ் நாட்டுப் பாடநூல்
கழகம் பகுதி பகுதியாக மாணவர்களுக்கு விநியோகித்து வருகிறது. ஏற்கெனவே 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பாடநூல்கள் விநியோகம்
நல்ல முறையில் நடந்து முடிந்த நிலையில் மே 16 ஆம் தேதி முதல் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான இலவசப் பாடநூல்கள் பள்ளிகளுக்கு
அனுப்பப்பட்டு வருகிறது. தற்போது 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான தனியார் பள்ளிகளுக்கான பாடநூல்களின் விற்பனையை மே 23 ஆம் தேதி
முதல் துவக்க தமிழ் நாட்டுப் பாடநூல் கழகம் முடிவு செய்துள்ளது.
தமிழக அரசு புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள முப்பருவ முறையில் முதல் பருவத்திற்கான 1 மற்றும் 2 ஆம் வகுப்புகளுக்கு தமிழ், ஆங்கிலம்,
கணக்கு மற்றும் சூழ் நிலையில், 3, 4, 5 ஆம் வகுப்புகளுக்கு தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூகவியல் எனவும் அனைத்து பாடங்களும்
தொகுக்கப் பெற்ற ஒரே பாடநூலாக வெளிவருகிறது. 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை தமிழ், ஆங்கிலம் ஒரு தொகுதியும் கணக்கு,
அறிவியல், சமூக அறிவியல் மூன்று பாடங்களும் சேர்த்து ஒரு தொகுதி என இரண்டு தொகுதிகளாக வெளிவருகிறது.
இலவசப் பாடநூல்களை பொறுத்தவரை அச்சகங்களில் இருந்து நேரடியாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்ட பாடநூல்களை பள்ளிகளுக்கு அனுப்பும் பணி மே 16-ல் துவங்கப்பட்டு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மே 27 ஆம் தேதிக்குள் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டு பள்ளி துவங்கும் நாளிலேயே மாணவர்களுக்கும் பாடநூல் வழங்கிட ஆவன செய்யப்பட்டுள்ளது.
விற்பனை பாடநூல்களை பொறுத்தவரை மெட்ரிக் (தனியார் பள்ளிகள்) பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான பாடநூல்கள் 23.05.2012 முதல் சென்னை தரமணியில் உள்ள தமிழ்நாட்டுப் பாடநூல் கழக கிடங்கு உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள 22 பாடநூல் கழக வட்டார அலுவலகங்களிலும் நேரடியாக பள்ளிகளுக்கு வழங்கப்பட உள்ளது.
சென்னை கல்லூரி சாலையில் உள்ள தமிழ்நாட்டுப் பாடநூல் கழக தலைமை அலுவலகத்தின் சிறப்பு விற்பனை மையங்களிலும் பாடநூல்கள் கிடைக்கும். மாவட்டம் தோறும் மெட்ரிக் பள்ளி ஆடீநுவாளர்கள் மற்றும் மழலையர் பள்ளி உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்கள் ஆகியோர் இணைந்து பாடநூல் விற்பனையினை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளி முதல்வர்கள் அவரவர்களுக்கு தொடர்புடைய மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் மற்றும் மழலையர் பள்ளி உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் ஆகியோரை 23 ஆம் தேதி முதல் தொடர்பு கொண்டு அவர்கள் ஒதுக்கும் நாளில் வரைவோலைகளை செலுத்தி பாடநூல்களை பெற்றுக் கொள்ளலாம்.
சென்னையில் மெட்ரிக் பள்ளிகள் அதிகம் இருப்பதால் அனைத்து பள்ளிகளுக்கும் காலதாமதமில்லாமல் உடனடியாக பாடநூல்கள் கிடைப்பதற்கு ஏதுவாக ஒரு பகுதியில் உள்ள சில பள்ளிகள் ஒருங்கிணைந்து பாடநூல் கிடங்கிலிருந்து பாடநூல்களை அவற்றில் ஒரு பள்ளிக்கு எடுத்துச் சென்று இதர பள்ளிகளுக்கு பிரித்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வருகிற 26.05.2012 மற்றும் 27.05.2012 சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களும் பாடநூல் கிடங்குகள் இயங்கும்.
முதல் மற்றும் இரண்டாம் வகுப்புகளுக்கான முதல் பருவ பாடநூலின் விலை ரூ.60/- மூன்று, நான்கு, ஐந்தாம் வகுப்புகளுக்கான முதல் பருவ பாடநூலின் விலை ரூ.80/- ஆறாம் வகுப்பு ஒரு தொகுதி ரூ.40/- வீதம் இரண்டு தொகுதிகளுக்கு ரூ.80/- ஏழாம் வகுப்பு மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான பாடநூல்கள் தொகுதி ஒன்றுக்கு ரூ.50/- வீதம் இரண்டு தொகுதிகளுக்கு ரூ.100/- ஒன்பதாம் வகுப்பு தமிழ், ஆங்கிலம், கணக்கு,
அறிவியல், சமூக அறிவியல் என ஐந்து தலைப்புகளும் தலா ரூ.70/- வீதம் மொத்தம் ரூ.350/- என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பாடநூல்களுக்கான தொகையை பள்ளி முதல்வர்கள் 5 சதவீத கழிவு போக நிகரத் தொகையை அந்தந்த வட்டார அலுவலகங்கள் அமைந்துள்ள ஊரில் மாற்றத்தக்கதாக வரைவோலை அளித்து பாடநூல்களை பெற்றுக்கொள்ள வேண்டும். பாடநூல்கள் போதுமான அளவு அச்சிடப்பட்டுள்ளது.
மாணவர்களின் நலன் கருதி 28.5.2012 முதல் பாடநூல் உரிமம் பெற்ற சில்லரை விற்பனையாளர்கள் மூலமும் தமிடிநநாடு முழுவதும் பாடநூல்கள் விநியோகிக்கப்படும்.
மத்திய அரசு பாடத்திட்டம் (CBSE) மாணவர்களுக்கு தனியாக தமிழ் பாடநூல்கள் மட்டும் அச்சடித்து விநியோகம் செய்ய எற்பாடுகள் நடைபெற்று வருகிறது. மேற்கண்ட தகவல்களை தமிழ்நாட்டுப் பாடநூல் கழக மேலாண்மை இயக்குநர் டாக்டர் கே. கோபால் அவர்கள் தெரிவித்தார்.
இவ்வாறு அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, தலைமைச் செயலகம், சென்னை. |