தமிழகரசால் 1973 ம் ஆண்டு துவக்கப்பட்ட தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம் மூலம் மேலாண்மை படிப்புக்கு விண்ணப்பிக்க 31.5.2012 கடைசி நாளாகும். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:-
தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம் 1973 ம் ஆண்டு தமிழ்நாடு அரசால் துவங்கப்பட்ட கல்வி மற்றும் பயிற்சி நிலையமாகும். இது முற்றிலும் அரசுக்குச் சொந்தமானது. சென்னை மெரினா கடற்கரையில் எண்.5, காமராசர் சாலையில் (விவேகானந்தா இல்லம் அருகில்) தமிழ்நாடு குடிசை
மாற்று வாரிய கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இங்கு சென்னை பல்கலைக்கழக அங்கீகாரம் பெற்ற பி.ஏ. (தொழிலாளர் மேலாண்மை - Labour Management), எம்.ஏ. (தொழிலாளர் மேலாண்மை Labour Management) மற்றும் தொழிலாளர் நிர்வாகவியலில் ஆய்வறிஞர் (பி.எச்டி) பட்டப்படிப்புகள் நடத்தப்படுகின்றன.
தொழிலாளர் துறையில் தொழிலாளர் அலுவலர், தொழிலாளர் உதவி ஆய்வாளர் ஆகிய பதவிகளுக்கான முன்னுரிமை தகுதியாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட படிப்புகளாகும்.
இப்படிப்புகள் பல்கலைக்கழக மானியக்குழுவின் தகுதி பெற்ற நீண்ட கால அனுபவமிக்க ஆசிரியர்களாலும், தகுதி பெற்ற புற விரிவுரையாளர்களாலும் கற்றுத்தரப்படுகின்றன. தொழிலாளர் சட்டங்கள் மற்றும் தொழிலாளர் நிர்வாகவியல் குறித்து சிறப்பான கல்வி தரப்படுவதோடு, கணினி பயிற்சியும் அளிக்கப்படுகிறது. அரசு நிர்ணயித்துள்ள குறைந்த அளவிலான கட்டணமே வசூலிக்கப்படுகிறது.
இக்கல்வி நிலையம் சென்னை - 5, காமராசர் சாலையிலுள்ள (விவேகானந்தர் இல்லம் அருகில்), தமிடிநநாடு குடிசை மமற்று வாரிய அலுவலக வளாகத்தில் செயல்படுகிறது.
இங்கு பயின்று நல்லமுறையில் தேர்ச்சி பெற்ற அனைவருமே, பல பெரிய நிறுவனங்களில் மனிதவள மேலாண்மை துறையில் உயர் பதவிகளில் உள்ளனர் என்பது சிறப்பம்சமாகும். பல பெரிய நிறுவனங்களும் நேரடியாக வந்து வளாகத் தேர்வு மூலம் தகுதிவாய்ந்த மாணவர்களை, தங்கள்
நிறுவன மனிதவளத் துறைகளில் பணிபுரிய தேர்ந்தெடுக்கும் சிறப்பு பெற்றுள்ளது.
பி.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) யில் 50 இடங்களும் எம்.ஏ (தொழிலாளர் மேலாண்மை) யில் 40 இடங்களும் மட்டுமே உள்ளன.
பணியில் உள்ளோர் பயன்பெறும் வகையில் தொழிலாளர் நிர்வாகத்தில் முதுநிலை பட்டயப்படிப்பும் (ஓராண்டு மாலைநேரம்) இக்கல்வி நிலையம் வழங்குகிறது.
பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் பி.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) யும், ஏதாவதொரு அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள் எம்.ஏ (தொழிலாளர் மேலாண்மை) மற்றும் தொழிலாளர் நிர்வாகத்தில் பட்டயப் படிப்பிற்கும் விண்ணப்பிக்கலாம்.
இப்படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் (ரூ.200/- மட்டும்) வழங்கப்பட்டு வருகின்றன. இப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க 31.5.2012 கடைசி நாளாகும்.
தகவல் பெற தொலைபேசி எண்கள்:- 044 - 28440102 / 28445778
இவ்வாறு அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, தலைமைச் செயலகம், சென்னை. |