காயல்பட்டினம் நகராட்சியின் 01, 02ஆவது வார்டு மக்களுக்கான குடும்ப அட்டை பெயர் சேர்த்தல் - திருத்தல் முகாம் இம்மாதம் 25ஆம் தேதி நடைபெறுமென, காயல்பட்டினம் கோமான் தெருவில் அண்மையில் நடைபெற்ற நியாய விலைக் கடை கிளை நிறுவன திறப்பு விழாவின்போது, மாவட்ட வழங்கல் அதிகாரி பஷீர் தெரிவித்திருந்தார்.
அதன்படி, காயல்பட்டினத்தின் 01, 02ஆவது வார்டுகளைச் சார்ந்த குடும்ப அட்டைதாரர்களுக்கான பெயர் சேர்த்தல், திருத்தல், நீக்கல் முகாம், 25.05.2012 அன்று காலை 09.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை நடைபெற்றது.
இம்முகாமில், வட்டார வழங்கல் அலுவலர் செல்வபிரசாத், வருவாய் ஆய்வாளர் ராஜேந்திரன், வருவாய் வட்டாட்சியர் பொற்கொடி ஆகியோர் கலந்துகொண்டு, 01, 02ஆம் வார்டு பொதுமக்களின் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்ப்பு, திருத்தல், நீக்கம் உள்ளிட்டவற்றைச் செய்துகொடுத்தனர். அந்த வார்டுகளைச் சேர்ந்த சுமார் 250 குடும்ப அட்டைதாரர்கள் இம்முகாமில் பங்கேற்று தமது தேவைகளைப் பூர்த்தி செய்துகொண்டனர்.
இம்முகாமை, காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், 01ஆவது வார்டு உறுப்பினர் ஏ.லுக்மான், இரண்டாவது வார்டு உறுப்பினர் வி.எம்.எஸ்.முஹம்மத் செய்யித் ஃபாத்திமா ஆகியோர் பார்வையிட்டனர்.
முகாம் ஏற்பாடுகளை, சமூக ஆர்வலர் லேண்ட்மார்க் ஹாஜி ராவன்னா அபுல்ஹஸன் தலைமையில் குழுவினர் செய்திருந்தனர்.
படங்கள்:
M.ஜஹாங்கீர். |