காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் இம்மாதம் 29ஆம் தேதி காலையில் நடைபெறவுள்ளது. இதுகுறித்து, அதன் செயலாளர் கே.ஜே.ஷாஹுல் ஹமீது வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம், இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் 29.05.2012 செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு, இக்ராஃ துணைத்தலைவர் ஹாஜி வாவு எம்.எம்.ஷம்சுத்தீன் அவர்களின் - 2.C.திருச்செந்தூர் சாலை (வாவு நகர்) இல்ல அரங்கில் நடைபெறவுள்ளது.
இக்ராஃவின் ஆண்டறிக்கை தாக்கல்,
2011-2012 பருவத்திற்கான வரவு-செலவு கணக்கு தாக்கல்,
புதிய தலைவரைத் தேர்ந்தெடுத்தல்,
புதிய உறுப்பினர்களை அங்கீகரித்தல்,
எதிர்கால திட்டங்கள்
உள்ளிட்ட பொருள்கள் குறித்து இக்கூட்டத்தில் கலந்தாலோசித்து முடிவுகள் எடுக்கப்படவுள்ளது.
இக்கூட்டத்தில் பங்கேற்கக் கோரி, இக்ராஃவின் அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் முறைப்படி தகவல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகள் மற்றும் வெளியூர்களிலிருந்து தாயகம் வந்துள்ள இக்ராஃ உறுப்பினர்கள், மற்றும் காயல் நல மன்ற நிர்வாகிகள் இச்செய்தியையே அழைப்பாக ஏற்று, அவசியம் கூட்டத்தில் பங்கேற்று நல்ல பல ஆலோசனைகளை வழங்கிடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
இவ்வாறு, இக்ராஃ கல்விச் சங்க செயலாளர் கே.ஜே.ஷாஹுல் ஹமீது தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தகவல்:
N.S.E.மஹ்மூது,
மக்கள் தொடர்பாளர்,
இக்ராஃ கல்விச் சங்கம், காயல்பட்டினம். |