27.05.2012 அன்று (நேற்று) காலமான - குவைத் காயல் நல மன்ற செயலாளரின் தந்தை மறைவிற்கு இரங்கல் தெரிவித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
பழகுதற்கினியவரும், பாசத்திற்குரியவரும், இன்முகத்துக்கு சொந்தக்காரரும், இறைப்பணிகளை தன் வாழ்நாள் முழுதும் நிறைவாகச் செய்தவரும், எங்கள் குவைத் காயல் நல மன்றத்தின் கண்ணியத்திற்குரிய செயலாளர் ஹாஜி எல்.டி.அஹ்மத் முஹ்யித்தீன் அவர்களின் தந்தையுமான ஜனாப் லெப்பை தம்பி அவர்கள், 27.05.2012 அன்று காலமான செய்தியறிந்து நாங்கள் மிகவும் துயருற்றோம்.
அன்னாரின் நல்லறங்கள் அனைத்தையும் கருணையுள்ள அல்லாஹ் முழுமையாக கபூல் செய்து, அவர்கள் தம் வாழ்நாளில் அறிந்தோ, அறியாமலோ செய்த பாவப்பிழைகளைப் பொருத்தருளி, அன்னாரின் மண்ணறை - மறுமை வாழ்வுகளை வெற்றிகரமானதாக்கி, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர் சுவனபதியை அவர்களுக்கு நற்கூலியாக ஈந்து, நபிமார்கள், ஷுஹதாக்கள், ஸித்தீக்கீன்கள், ஸாலிஹீன்களுடன் அவர்களையும், நம்மையும் ஒன்றிணைத்து வைப்பானாக, ஆமீன்.
அன்னாரின் பிரிவால் வாடும் எம் மன்ற செயலாளர் ஹாஜி எல்.டி.அஹ்மத் முஹ்யித்தீன் அவர்கள் உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் ஸப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை வழங்கியருள்வானாக. அவர்கள் யாவருக்கும் எங்கள் மனமார்ந்த அஸ்ஸலாமு அலைக்கும் என்று எம் மன்றத்தின் நிர்வாகிகள், செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் ஸலாமுரைக்கிறோம்.
இவ்வாறு, குவைத் காயல் நல மன்ற துணை செயலாளர் எஸ்.எம்.டி.மொஹுதூம் முஹம்மது தனதறிக்கையில் தெரிவித்துள்ளார். |