இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர மகளிரணி சார்பில், குடும்ப சங்கம நிகழ்ச்சி, 25.05.2012 அன்று மாலை 05.30 மணியளவில், காயல்பட்டினம் குறுக்கத் தெருவிலுள்ள கே.வி.ஏ.டி. பசுமை இல்லத்தில் நடைபெற்றது.
நகர முஸ்லிம் லீக் தலைவர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். கவிமகன் காதர் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். ஹாங்காங் காயிதேமில்லத் பேரவை அமைப்பாளர் ஹாஃபிழ் வி.எம்.டி.முஹம்மத் ஹஸன் கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். ஹாஜி கே.வி.ஏ.டி.ஹபீப் முஹம்மத் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். அ.ர.ஜாகிர் ஹுஸைன் இறைவாழ்த்துக் கவி பாடினார்.
தலைமையுரையைத் தொடர்ந்து, முஸ்லிம் லீக் நகர துணைச் செயலாளர்களான ஹாஜி எம்.எல்.ஷேக்னா லெப்பை, ஹாஜி என்.டி.அஹ்மத் ஸலாஹுத்தீன், பெத்தப்பா சுல்தான். மாவட்ட துணைச் செயலாளர் ஏ.கே.மஹ்மூத் சுலைமான், காயிதேமில்லத் பேரவை நகர அமைப்பாளர் ஆசிரியர் மு.அப்துல் ரசாக், மாணவரணி மாவட்ட அமைப்பாளர் எம்.ஏ.சி.சுஹைல் இப்றாஹீம், காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர்களான ஏ.லுக்மான், கே.வி.ஏ.டி.முத்து ஹாஜரா, முஸ்லிம் லீக் மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்.ஜே.மஹ்மூதுல் ஹஸன், மாநில கொள்கை பரப்புச் செயலாளர் காயல் மகபூப் ஆகியோர் கருத்துரையாற்றினர்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் வாழ்த்துரை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முஸ்லிம் லீக் நகர மகளிரணி அமைப்பாளர் கே.வி.ஏ.டி.முத்து ஹாஜராவைப் பாராட்டி, அவரது கணவர் கே.வி.மொகுதூம் முஹம்மதிடம், தலைமை நிலையத்தின் சார்பில் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் பாராட்டுச் சான்றிதழை வழங்கினார்.
கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 - மகளிரணி மாவட்ட அமைப்பாளர் தேர்வு:
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட மகளிரணியின் அமைப்பாளராக, இதுவரை காயல்பட்டினம் நகர மகளிரணி அமைப்பாளராக செயல்பட்ட - காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர் கே.வி.ஏ.டி.முத்து ஹாஜராவை இக்கூட்டம் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கிறது.
தீர்மானம் 2 - மகளிரணி மாநில அமைப்பாளரைக் கொண்டு கருத்தரங்கம்:
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மகளிரணி மாநில அமைப்பாளர் பேராசிரியை தஸ் ரீஃப் ஜஹான் கலந்துகொள்ளும் வகையில், மகளிர் விழிப்புணர்வு குறித்த மாபெரும் கருத்தரங்கத்தை விரைவில் நடத்திடுவதென இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ் நன்றி கூறினார்.
நிறைவாக, நகர மக்களின் நோய் நிவாரணம், ஒற்றுமை, நகர்நலம் உள்ளிட்ட பல்வேறு நாட்ட தேட்டங்களை நிறைவேற்றக் கோரி சிறப்பு துஆ மஜ்லிஸ் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட காழீ மவ்லவீ எஸ்.டி.அம்ஜத் அலீ மஹ்ழரீ ஃபைஜீ தமிழாக்கத்துடன் துஆ இறைஞ்சினார்.
இக்கூட்டத்தில், நகர முஸ்லிம் லீக் நிர்வாகிகளும், அவர்களின் குடும்பத்தினர் உட்பட திரளான பெண்களும் கலந்துகொண்டனர். அனைவருக்கும் சிற்றுண்டியுபசரிப்பு செய்யப்பட்டது.
|