காயல்பட்டினம் - சென்னை வழிகாட்டுக் குழு, பெங்களூரு காயல் நல மன்றம் இணைந்து, காயல்பட்டினம் நகரைச் சேர்ந்த மாணவ-மாணவியருக்கான கல்வி வழிகாட்டு நிகழ்ச்சியை இம்மாதம் 21ஆம் தேதி நடத்தின.
அதனைத் தொடர்ந்து, மறுநாள் 22ஆம் தேதியன்று, காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்க அலுவலகத்தில், மாணவர் உயர்கல்வி வழிகாட்டலுக்கான தனிநபர் நேர்காணல் (கவுன்சிலிங்) மதியம் 02.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை நடைபெற்றது.
இந்நிகழ்வில் பங்கேற்ற மாணவ-மாணவியருக்கு - அவர்களின் அறிவுத்திறன், ஆர்வம் உள்ளிட்டவற்றின் அடிப்படையில், தொழில் நுட்பக்கல்வி இயக்குநரின் தனிச்செயலாளர் (ஓய்வு) சத்தியமூர்த்தி உயர்கல்வி குறித்து ஆலோசனைகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் 9 மாணவர்களும், 6 மாணவியரும் மேலும் சில பெற்றோரும் கலந்துகொண்டனர்.
பி.ஏ.கே.சுலைமான், வி.எம்.ஷேக் சுலைமான், ஸ்மார்ட் அப்துல் காதர், KCGC அமைப்பின் உள்ளூர் பிரிதிநிதியும், இக்ராஃ கல்விச் சங்கத்தின் மக்கள் தொடர்பாளருமான என்.எஸ்.இ.மஹ்மூது, இக்ராஃ கல்விச் சங்க நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மத் உள்ளிட்டோர் இந்நிகழ்வின்போது உடனிருந்தனர். |