வி-யுனைட்டெட் ஸ்போர்ட்ஸ் க்ளப் சார்பில் காயல் ப்ரீமியர் லீக் (கே.பி.எல்.) என்ற பெயரில் ஆண்டுதோறும் க்ரிக்கெட் மற்றும் கால்பந்து சுற்றுப்போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
நடப்பாண்டின் க்ரிக்கெட் போட்டிகள் காயல்பட்டினம் - காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் (கே.எஸ்.ஸி.) மைதானத்தில் 18.05.2012 அன்று துவங்கியது. இப்போட்டித் தொடரில் க்ரீனிஷ் கவுன்டி, ஃபை ஸ்கை பாய்ஸ், காலரி பேர்ட்ஸ், காயல் ராக்கர்ஸ், வாவு வாரியர்ஸ், ஃபைனல் சேலஞ்சர்ஸ், மஹேந்திரா பவர்ஆல் மற்றும் காயல் டைகர்ஸ் ஆகிய 8 அணிகள் லீக் முறையில் விளையாட உள்ளன. வெளிநாடு, வெளியூர் மற்றும் உள்ளூரைச் சேர்ந்த காயல்பட்டினத்தின் தலைசிறந்த வீரர்கள் இவ்வணிகளின் கீழ் விளையாடுகின்றனர்.
போட்டி எண் - 17:
23.05.2012 அன்று நான்கு போட்டிகள் நடைபெற்றன. முதற்போட்டியான - போட்டி எண் 17இல், காயல் டைகர்ஸ் அணியும், ஃபிக்ஸ் ஸ்கை பாய்ஸ் அணியும் மோதின. முதலில் துடுப்பெடுத்தாடிய ஃபிக்ஸ் ஸ்கை பாய்ஸ் அணி, 3 வீரர்கள் இழப்பிற்கு 103 ஓட்டங்களைப் பெற்றது. அந்த அணியின் சுலைமான் 57, இஜாஸ் 15 ஓட்டங்களைப் பெற்றனர். எதிரணியின் முஹம்மத் அலீ, ஹாஜா, ஹமீத் ஜூனியர் ஆகியோர் தலா ஒரு வீரரை வீழ்த்தினர்.
அடுத்து ஆடிய காயல் டைகர்ஸ் அணி, ஒரு வீரரை இழந்து 92 ஓட்டங்களைப் பெற்றது. அந்த அணியின் முஹம்மத் அலீ 16, செய்யித் இப்றாஹீம் ஆட்டமிழக்காமல் 24, ஹமீத் சீனியர் ஆட்டமிழக்காமல் 50 ஓட்டங்களைப் பெற்றனர். எதிரணியின் சல்மான் ஒரு வீரரை வீழ்த்தினார்.
இப்போட்டியில் ஃபிக்ஸ் ஸ்கை பாய்ஸ் அணி வெற்றி பெற்றது.
போட்டி எண் - 18:
இரண்டாவது போட்டியான - போட்டி எண் 18இல், க்ரீனிஷ் கவுண்ட்டி அணியும், ஃபைனல் சேலஞ்சர் அணியும் மோதின.
முதலில் துடுப்பெடுத்தாடிய க்ரீனிஷ் கவுண்ட்டி அணி 5 வீரர்கள் இழப்பிற்கு 90 ஓட்டங்களைப் பெற்றது. அந்த அணியின் ஷாஹுல் 22, மொகுதூம் 15, அஸார் ஆட்டமிழக்காமல் 28 ஓட்டங்களைப் பெற்றனர். எதிரணியின் ஃபாழில் 4 வீரர்களையும், ஷேக் ஒரு வீரரையும் வீழ்த்தினர்.
அடுத்து ஆடிய ஃபைனல் சேலஞ்சர் அணி 5 வீரர்களை இழந்து 63 ஓட்டங்களைப் பெற்றது. அந்த அணியின் லத்தீஃப் 10, மீராஸாஹிப் 33, தவ்ஹீத் 11 ஓட்டங்களைப் பெற்றனர். எதிரணியின் மொகுதூம் 3 வீரர்களையும், செய்யித், ஷாஹுல் தலா ஒரு வீரரையும் வீழ்த்தினர்.
இப்போட்டியில் க்ரீனிஷ் கவுண்ட்டி அணி வெற்றிபெற்றது.
போட்டி எண் - 19:
மூன்றாவது போட்டியான - போட்டி எண் 19இல் காலரி பேர்ட்ஸ் அணியும், காயல் ராக்கர்ஸ் அணியும் மோதின.
முதலில் துடுப்பெடுத்தாடிய காயல் ராக்கர்ஸ் அணி 6 வீரர்களை இழந்து 76 ஓட்டங்களைப் பெற்றது. அந்த அணியின் இம்ரான் 27, தாவூத் 19 ஓட்டங்களைப் பெற்றனர். எதிரணியின் கைஸாலிஹ் 3 வீரர்களையும், யாஸர் இரண்டு வீரர்களையும், ஜஹாங்கீர் ஒரு வீரரையும் வீழ்த்தினர்.
அடுத்து ஆடிய காலரி பேர்ட்ஸ் அணி 4 வீரர்களை இழந்து 75 ஒட்டங்களைப் பெற்றது. அந்த அணியின் கைஸாலிஹ் 10, இஸ்மாஈல் 24, ஜஹாங்கீர் 18 ஓட்டங்களைப் பெற்றனர். எதிரணியின் உமர் 2 வீரர்களை வீழ்த்தினார்.
இப்போட்டியில் காயல் ராக்கர்ஸ் அணி வெற்றிபெற்றது.
போட்டி எண் - 20:
நான்காவது போட்டியான - போட்டி எண் 20இல், மஹிந்திரா பவர் ஆல் அணியும், வாவு வாரியர்ஸ் அணியும் மோதின.
முதலில் துடுப்பெடுத்தாடிய வாவு வாரியர்ஸ் அணி 6 வீரர்களை இழந்து 60 ஓட்டங்களைப் பெற்றது. அந்த அணியின் ஸாலிஹ் ஆட்டமிழக்காமல் 16 ஒட்டங்களும், மூஸா 10 ஓட்டங்களும் பெற்றனர். எதிரணியின் ஷமீம் 2 வீரர்களையும், செய்யித், அர்ஷத் ஆகியோர் தலா ஒரு வீரரையும், யூஸுஃப் 3 வீரர்களையும் வீழ்த்தினர்.
அடுத்து ஆடிய மஹிந்திரா பவர் ஆல் அணி 4 வீரர்களை இழந்து 61 ஓட்டங்களைப் பெற்றது. அந்த அணியின் இம்ரான் 10, அஸார் 11, ஷமீம் 14 ஓட்டங்களைப் பெற்றனர். எதிரணியின் வாவு ஷாஹுல் ஹமீத், ஸாலிஹ், முஹ்யித்தீன் ஆகியோர் தலா ஒரு வீரரையும், அப்துல் காதிர் 2 வீரர்களையும் வீழ்த்தினர்.
இப்போட்டியில் மஹிந்திரா பவர் ஆல் அணி வெற்றிபெற்றது.
தகவல்:
M.M.ஷாஹுல் ஹமீத். |