காயல்பட்டினம் சதுக்கைத் தெருவில் அமைந்துள்ள மஹ்பூப் சுபுஹானீ தைக்கா வளாகத்தில் இயங்கி வரும் நஸூஹிய்யா பெண்கள் மத்ரஸாவில், திருக்குர்ஆன் மனனம் - ஹிஃப்ழு செய்யும் மாணவியருக்கான தையல் பயிற்சியகம் மற்றும் ஆடை தையல் தொழிற்கூட துவக்க விழா, 24.05.2012 வியாழக்கிழமை காலை 11.30 மணிக்கு, மத்ரஸா வளாகத்தில் நடைபெற்றது.
காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை தலைவர் ஹாஜி எம்.எம்.உவைஸ் தலைமை தாங்கினார். காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளை - தாய்லாந்து காயல் நல மன்றம் (தக்வா) அமைப்புகளின் தலைவரும், தாய்லாந்து காயிதேமில்லத் பேரவையின் அமைப்பாளருமான ஹாஜி வாவு எம்.எம்.ஷம்சுத்தீன், காயல்பட்டினம் அஹ்மத் நெய்னார் பள்ளியின் தலைவர் ஹாஜி எஸ்.கே.ஜெய்னுல் ஆப்தீன் மற்றும் நகரப் பிரமுகர்கள் முன்னிலை வகித்தனர்.
ஹாஃபிழ் எம்.எஸ்.எல்.மீரா லெப்பை ஃபத்தாஹ் கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். மத்ரஸத்துன் நஸூஹிய்யாவின் அமைப்பாளர் ஹாஜி எம்.எல்.ஷேக்னாலெப்பை அனைவரையும் வரவேற்றுப் பேசினார். மத்ரஸாவின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் காரீ ஏ.செய்யித் முஹம்மத் மன்பஈ நிகழ்ச்சி அறிமுகவுரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் வாழ்த்துரை வழங்கினார்.
மத்ரஸாவின் தையல் பயிற்சிகம் மற்றும் ஆடை தையல் தொழிற்கூடத்தை, இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் துவக்கி வைத்து, சிறப்புரையாற்றினார்.
ஹாஜி ஏ.எஸ்.ஜமால் நன்றி கூற, மவ்லவீ கத்தீப் அஹ்மத் அப்துல் காதிர் துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
இந்நிகழ்ச்சியில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் மற்றும் நகர பொதுமக்கள் கலந்துகொண்டனர். தைக்காவின் மேல் தளத்தில் பெண்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
|