தூத்துக்குடி மாவட்டத்தில் ப்ளஸ் 2 தேர்வில் முதல் 3 மதிப்பெண் பெற்ற மாணவர்களைப் பாராட்டி, மாவட்ட ஆட்சியர் .ஆஷிஷ் குமார் கேடயமும், நூற்களும் பரிசாக வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி எஸ்.சரண்யா 1179 மதிப்பெண் பெற்று முதலிடமும், ஸ்டார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி எஸ்.ரவி விக்னேஷ்வரி 1175 மதிப்பெண் பெற்று இரண்டாமிடமும், ஹோலி க்ராஸ் ஆங்கிலோ இந்தியன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர் எஸ்.கிறிஸ்டினா திலகவதினி, எஸ்.சந்தோஷினி, கே.சுருதி மீனாட்சி ஆகிய மூன்று மாணவியரும் 1173 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடமும் பெற்றுள்ளனர்.
இவர்களுக்கு, மாவட்ட ஆட்சியர் .ஆஷிஷ் குமார் கேடயமும், பரிசுப் புத்தகங்களும் வழங்கி பாராட்டினார்.
*** “எதிர்காலத்தில் ஜ.ஏ.எஸ், மருத்துவம், பொறியியல் மற்றும் உங்களுக்கு பிடித்த உயர்கல்வியைக் கற்று சிறந்த பட்டங்களைப் பெற்று வாழ்க்கையில் முன்னேற வேண்டும்...
*** ஜ.ஏ.எஸ். போன்ற கல்வியில் தற்போது உள்ள மாற்றங்களைத் தெரிந்து கற்கவேண்டும்...
பொது அறிவைப் பெருக்கிக்கொள்ள வேண்டும்...
*** தரமான தினசரி நாளிதழ்களை தினமும் தவறாமல் படித்து உங்கள் பொது அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும்...
இவ்வாறு, சாதனை மாணவ-மாணவியருக்கு மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் அறிவுரை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் .சு.ருக்மணி, மக்கள் தொடர்பு உதவி அலுவலர் சி.குமார், சாதனையாளர்களின் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் பெற்றோர் பங்கேற்றனர். |