இவ்வாண்டு பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொது தேர்வில் 1189 மதிப்பெண்கள் பெற்று, மாநிலத்தில் முதல் இடத்தினை பெற்ற மாணவி - திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகில் உள்ள வடுகபாளையத்தை சார்ந்த எஸ். சுஷ்மிதா. நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையம் ஊரில் உள்ள எஸ்.கே.வி. மேல்நிலைப்பள்ளி மாணவியான இவர் பெற்ற மதிப்பெண்கள் விபரம் வருமாறு:-
தமிழ் - 194
ஆங்கிலம் - 195
இயற்பியல் - 200
வேதியியல் - 200
உயிரியல் - 200
கணிதம் - 200
காயல்பட்டணம்.காம் இணையதளத்தை நடத்தும் தி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் மற்றும் இக்ராஃ கல்வி சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து 2006 ஆம் ஆண்டு முதல் சந்தியுங்கள் மாநிலத்தின் முதல் மாணவரை நிகழ்ச்சியினை காயல்பட்டினத்தில் நடத்தி வருகின்றனர்.
ஜூன் 23 அன்று இந்த நிகழ்ச்சியின் ஏழாவது பதிப்பு காயல்பட்டினத்தில் நடைபெற உள்ளது. அதில் கலந்துக்கொள்ள மாநில முதல் மாணவி எஸ்.சுஷ்மிதா இசைவு தெரிவித்துள்ளார்.
இடது புறத்தில் இருந்து முதலாவதாக நிற்பவர் எஸ்.சுஷ்மிதா ...
1. Re:மாநில முதல் மாணவி சுஷ்மித... posted byVilack SMA (Hong Shen , Siacun)[28 May 2012] IP: 121.*.*.* China | Comment Reference Number: 19064
ஒவ்வொரு வருடமும் நடக்கும் நிகழ்ச்சிதானே !
வாழ்த்துக்கள் சுஷ்மிதா . அன்போடு அழைக்கிறார்கள் . வாருங்கள் . சொல்லிக்கொடுங்கள் எங்கள் மாணவர்களுக்கு உங்கள் வெற்றியின் ரகசியத்தை . ஒருவேளை , அடுத்த வருடம் எங்கள் மாணவரும் உங்களைப்போல் உயர்நிலையை அடைந்தால் , அது உங்களின் அறிவுரையால்தான் வந்தது என்று இருக்கட்டுமே !
2. என் கனவு நனவானால்!!! posted bysheit (Dubai)[28 May 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 19065
என் ஊரை சார்ந்த மாணவி மாநிலத்திலேயே முதல் மாணவியாக வந்தால், நினைக்கும் போதே உள்ளம் பூரிக்கின்றேன், அவள் வருவாளா? இன்ஷால்லாஹ் அந்த நாள்! இந்த கோரிக்கையை படைத்தவனிடம் வைப்போம்.இபொழுதே துவா செய்வோம்.
3. Re:மாநில முதல் மாணவி சுஷ்மித... posted bysyedahmed (GZ,China)[28 May 2012] IP: 119.*.*.* China | Comment Reference Number: 19067
WELCOME TO OUR NATIVE.
MAY THIS OCCASSION BRINGS YOU ALL HAPPINESS & PROSPERITY, AND ALSO, MAY EVERY DAY OF YOUR PLEASANT FUTURE AND AUSPICIOUS DAY OF THIS OCCASSION THAT WILL RECEIVE A GIFT OF OUR AFFECTION. WE BOUQUETLY SENT YOU ON THIS DAY TO CONVEY OUR WARM FEELINGS.
4. Need of the day !! posted byM Sajith (DUBAI)[28 May 2012] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 19072
அதிக மதிப்பெண்கள் மட்டுமே கல்வியை அளக்கும் முறையாகவும், விரும்பியதை படிக்க தேவையான அடிப்படையாகவும் யதார்த்தத்தில் இருக்கும்வரை, நாமும் அதை செய்தாகவேண்டும் - otherwise we might miss the boat !!
No doubt such efforts will bring in motivation and confidence in training our students and thanks to KFT for its consistant contribution..
வருங்கால மாணவ மாணவியருக்கு இவரின் யோசனை / பரிந்துரை பயனளிக்கட்டும்.
முக்கியம் அவரின் பெற்றோரை, நமது மக்களிடம் பேசவையுங்கள் அதுவே இன்றைய தேவை !!
6. Re:மாநில முதல் மாணவி சுஷ்மித... posted byK S Muhamed shuaib (Kayalpatinam)[29 May 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 19085
காயல்நகருக்கு வருகை தரும் மாநில முதல் மதிப்பெண் பெற்ற மாணவி சுஷ்மிதாவை ஒரு காயல்வாசி என்கிற முறையில் வரவேற்கிறேன்.
எங்கோ ஒரு குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்து அருகேயுள்ள அரசுப்பள்ளியில் தனது சுய முயற்சியால் கற்று தேறி முதல் மதிப்பெண் பெரும் ஒரு மாணவனையோ /மாணவியையோ நெஞ்சார வரவேற்கும் முறையில் சகோதரி சுஷ்மிதாவை நான் வரவேற்க விரும்பவில்லை. சகோதரி என்னை மன்னிக்கவேண்டும்
காரணங்கள் பல
நாமக்கல்,திருசெங்கோடு, ஈரோடு, கோபிசெட்டிபாளையம் போன்ற ஊர்களில் :உறைவிட பள்ளிகளில் "( Residential schools)தங்கி படிக்கும் இது போன்ற மாணவ மாணவியர் எவரும் கற்பது கல்வியை அல்ல. தேர்வுக்கு தயாராகும் பயிற்சியை மட்டுமே இப்பள்ளிகள் அவர்களுக்கு அளிக்கின்றன. மூர்க்கமான பயிற்சிகள் அவை. ஒரு பாடத்தையே மாற்றி மாற்றி எழுதிப்பார்த்தல், தலை கீழாக வாசிப்பு பயிற்சி, கடுமையான மனன பயிற்சிகள் என இவைகள் பலதரத்தவை.
பிளஸ் டூ கல்வி இரண்டுஆண்டுகள். ஆனால் இவர்கள் பிளஸ் ஒன வகுப்புக்குரிய பாடங்களை நடத்துவதே இல்லை. கூடுதல் மதிப்பெண் பெரும் வழிமுறைகளை கருத்தில் கொண்டு இரண்டு வருடமும் பிளஸ் டூ பாடத்தையே கற்பிக்கிறார்கள். இதனால் பல அல்லல்கள் நேர்கின்றன. குறிப்பாக இயற்பியல்
(Physics) பிரிவில் மெக்கானிக்ஸ் பிளஸ் ஒன்னில் உண்டு.
பிளஸ் டூவில் இப்பாடம் இல்லை இது போன்ற பள்ளிகளில் கற்று தேறி பொறியியல் போன்ற உயர் கல்விக்கு செல்லும் மாணவர்களுக்கு அங்கு இது தொடர்பான மெக்கானிக்ஸ் பாடம் வரும் போது அவர்கள் மிகவும் சிரமபடுகிரார்கள்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross