காயல்பட்டினம் நகராட்சி சேவைகளில் பொதுமக்களுக்குள்ள நியாயமான குறைகளைக் கேட்டறிந்து சரிசெய்திடும் பொருட்டு, மாதந்தோறும் மக்கள் குறைதீர் கூட்டம் - கடைசி புதன்கிழமைகளில் - ஜனவரி முதல் நடைபெற்றுவருகிறது.
மே மாத கூட்டம் - நாளை (மே 30) மதியம் 03.00 மணி முதல் மாலை 05.00 மணி காயல்பட்டினம் நகராட்சி கூட்டரங்கில் நடைபெறும்.
நாளை நடைபெறுவது - இத்தொடரில் நான்காவது கூட்டமாகும். இதுவரை நடந்துள்ள மூன்று கூட்டங்களில் சுமார் 100 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாகவும், அவைகளில் சில நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும், சில நிலுவையில் உள்ளதாகவும், புதிய சாலைகள் போன்ற பொதுவான கோரிக்கைகள் பரிசீலனையில் இருப்பதாகவும் - தகவல்கள் தெரிவிக்கின்றன.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross