ப்ளஸ் 2 அரசுப் பொதுத் தேர்வு முடிவுகள் 22.05.2012 அன்று வெளியாயின. இம்முடிவுகளின் படி, மாநில அளவிலும், காயல்பட்டினம் நகரளவிலும் சாதனை மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவியரையும், கோமான் தெருக்கள் அளவில் சாதனை மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவியரையும் பாராட்டி பரிசளிக்கும் நிகழ்ச்சி கோமான் நற்பணி மன்றம் சார்பில் வரும் ஜூன் மாதம் 06ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இவ்விழாவின்போது, காயல்பட்டினம் நகரளவில் முறையே முதல் மூன்றிடங்களைப் பெற்ற மாணவி அபிஷா ஜூலியட் மேரி, மாணவர்களான எம்.எச்.முஹம்மத் அபூபக்கர், எம்.ஏ.கே.ஹாஜா தவ்ஃபீக் ஆகியோரைப் பாராட்டி பரிசுகள் வழங்கப்படவுள்ளது.
அதுபோல, மனையியல் பாடத்தில், மாநில அளவில் இரண்டாமிடம் பெற்ற மாணவி செய்யித் அலீ ஃபாத்திமாவையும் பாராட்டி பரிசளிக்கப்படவுள்ளது.
அத்துடன், கோமான் தெருக்களான கோமான் மேலத்தெரு, நடுத்தெரு, கீழத்தெரு ஆகிய மூன்று தெருக்களிலிருந்து ப்ளஸ் 2 தேர்வெழுதிய மாணவ-மாணவியருள் முதல் மூன்றிடங்களைப் பெற்ற மாணவ-மாணவியருக்கும் இவ்விழாவில் சிறப்புப் பரிசுகள் வழங்கப்படவுள்ளது.
அனைத்திற்கும் மேலாக, திருமறை குர்ஆனை முழுமையாக மனனம் செய்து முடித்து, இவ்வாண்டு “ஹாஃபிழுல் குர்ஆன்” பட்டம் பெற்ற கோமான் தெருக்களைச் சார்ந்த மாணவர்களும் இவ்விழாவில் பரிசுகளுடன் கவுரவிக்கப்படவுள்ளனர்.
இத்தகவலை, கோமான் நற்பணி மன்றம் சார்பில், ஹாஜி மலங்கு தெரிவித்துள்ளார். |