சென்னை, அம்பேத்கர் சட்டக் கல்லூரி உள்ளிட்ட, ஏழு அரசு சட்டக் கல்லூரிகளில், 2012-13ம் கல்வியாண்டிற்கான, பி.எல்., பட்டப்படிப்பிற்கு
மாணவர் சேர்க்கை நடக்கிறது. இதற்கான விண்ணப்பங்கள், வரும், 28ம் தேதி முதல் வழங்கப்படுகின்றன.
விண்ணப்பங்களை சென்னை, செங்கல்பட்டு, வேலூர், திருச்சி, கோவை, மதுரை மற்றும் நெல்லையில் உள்ள, அரசு சட்டக் கல்லூரிகளிலும்,
சட்டப் பல்கலையிலும் பெறலாம்.
ஐந்தாண்டு பி.எல்., பட்டப் படிப்பிற்கு விண்ணப்பிப்போர், பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொதுப் பிரிவினருக்கு, 20 வயதும், எஸ்.சி.,
- எஸ்.டி., பிரிவினருக்கு, 22 வயதும் நிரம்பியிருக்க வேண்டும். பொது பிரிவினர், 45 சதவீதமும், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினர், 40
சதவீதமும் குறைந்தபட்ச மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
மூன்றாண்டு பட்டப்படிப்பிற்கு விண்ணப்பிப்போர், ஏதேனும் ஒரு பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொதுப் பிரிவினர், 45 சதவீதமும், எஸ்.,
எஸ்.டி., பிரிவினர், 40 சதவீதமும் குறைந்தபட்ச மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
மூன்றாண்டு பட்டப்படிப்புகளுக்கு, 1,262 பேரும், ஐந்தாண்டு பட்டப் படிப்புகளுக்கு, 1,052 பேரும் சேர்க்கப்பட உள்ளனர். ஐந்தாண்டு பட்டப்
படிப்புக்கு விண்ணப்பிக்க, ஜூன் 15ம் தேதியும், மூன்றாண்டு பட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்க, ஜூன் 30ம் தேதியும் கடைசி நாள்.
தகவல்:
www.ChennaiOnline.com
|