தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், 1 முதல் 3 பாடங்களில் தோல்வி அடைந்த மாணவ, மாணவியர்கள்
உடனடியாக நடத்தப்படும் துணைத் தேர்வுக்கு மே 23ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று கல்வித் துறை அறிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பிளஸ் 2 தேர்வில் 3 பாடங்களுக்குள் தோல்வி அடைந்தவர்கள் உடனடியாக துணைத் தேர்வுகளை எழுதி தேர்ச்சி பெற்று அந்த
கல்வியாண்டிலேயே உயர்கல்விக்கு செல்லும் வகையில் ஜுன் அல்லது ஜுலை மாதத்திலேயே துணைத் தேர்வு நடத்தப்படும்.
இந்த தேர்வுக்கு 23ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
பிளஸ் 2 தேர்வெழுதியுள்ள அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் மதிப்பெண் பட்டியல் மே 30ம் தேதி முதல் அவரவர் படித்த பள்ளிகளிலேயே
வழங்க கல்வித் துறை ஏற்பாடு செய்துள்ளது.
மேலும், தனித்தேர்வர்கள் (Private Candidates), தாங்கள் தேர்வெழுதிய பள்ளியில் இருந்து மதிப்பெண் பெற்றுக் கொள்ளலாம் என்றும்
அறிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
www.ChennaiOnline.com
|