செய்தி: காயல்பட்டணம்.காம் எழுத்து மேடை மூத்த ஆசிரியர் ஏ.லெப்பை ஸாஹிப் என்ற ஏ.எல்.எஸ்.மாமா காலமானார்! செப். 23 காலை 10.30 மணிக்கு நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...நட்பு – நட்புக்கு ஏது பிரிவு posted byAnbinalA (Jaipur)[24 September 2016] IP: 59.*.*.* India | Comment Reference Number: 44702
நேசிப்போமா ALS மாமாவின்
எழுத்துக்களை சுவாசம் போல…
பூமியில் வாழ – நாம்
தருகின்ற வாடகை சேவை!
ஏன்ற மனம் கொண்டு
காயல் மக்களுக்கு
ஓவியத்தையும்,
எழுத்தையும் கருவாக, கண்ணாக
எப்போதுமே பிரசவித்து கொண்டிருந்தார்கள்…
புத்தகத்தின் நடுவில்
புதைத்து வைத்த மயிலிறகு
குட்டி போடவில்லை இன்னும்…
ஆனால்..!
நீங்கள் கொடுத்த - அந்த
புத்தகத்தின் வழியாக படித்த
நற்செய்திகாலம் உள்ளவரை
குட்டி போட்டுக் கொண்டிருக்கும்…
காயல்பட்டணத்தில்
நீங்கள் வாழ்ந்தாலும்
காயல்பட்டணமாகவே
வாழ்ந்தீர்கள்… வாழ்வீர்கள்…
பழகிய நெஞ்சம்
பிரிகின்ற நேரம் - அவர்
எண்ணமும், எழுத்தும்
எங்கள் நெஞ்சத்தில்
எண்ணற்ற பாரம்…
ஓவியமும், கையெழுத்தும்
நீங்காத இடம் பிடிக்கும்
காகிதத்தில் மட்டுமல்ல
எங்கள் நெஞ்சத்திலும்…
கல்லான நெஞ்சமும்
கண்ணீர் கசியும்
இதோ! புpரிவான நேரம்
உடலுக்கு மட்டுமே – நம்
நட்புக்கல்ல…
ALS இப்னு அப்பாஸ் மாமாவின்
மறுமை வாழ்வுக்கு நம்மனைவர்களும்
துஆச் செய்வோம்…ஆமீன்..!
செய்தி: “THE ALCHEMIST“ நூலாய்வு நிகழ்ச்சி! எழுத்து மேடை மையம், தமிழ் நாடு சார்பில் ஏற்பாடு!! ஜூலை 14 அன்று நடைபெறுகிறது!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...நேசிப்போமா..? வாசிப்பதை..! சுவாசம் போல... posted byAnbinalA (jaipur)[13 July 2016] IP: 115.*.*.* India | Comment Reference Number: 44239
அனைத்தும் இருந்தும்
அறிவு பெற வருவோர்
அதிகமில்லை காயலில் - பொது நூலகம் -
ஏனெனில்...
அணைத்துக் கொண்டிருப்பது
வாட்சப்,முகநூல் அல்லவா..?
மார்க்க கல்வியும்,உலக கல்வியும் போல மூன்றாம் " பொது அறிவு கல்வி " பெற நமது அரசுநூலகத்திற்கு நாம் நமது பிள்ளைகளை இளமையிலேயே அனுப்பி கற்ற செய்தால் பல நல்லொழுக்கம்,நுண்ணறிவு,முன்மாதிரி இன்னும் பல நல்ல அறிய வாய்ப்புகள் மற்றும் உலக அரங்கில் ஏதேனும் நல்ல அரசு துறையில் தலைமை வகிக்க வழிவகை செய்ய எண்ணத்திலும்,செயலிலும் நல் ஊன்றுகோலாக...தூண்டுகோலாக இந்நிகழ்ச்சி அமையும் என்பது நிதர்சனம்...
எனவே பெற்றோர்கள் தாங்களும் கலந்து கொள்வதோடு,பிள்ளைகளையும் கலந்து நற்பயன் அடைய முன்னோடிகளாக முன்கூட்டியே வருகை தாருங்கள் என அழைக்கிறேன்...நன்றி..!
Re:...மனிதன் அறிவாள் கலாச்சாரத்தில் இருந்து அரிவாள் கலாச்சாரத்திற்கு மாறிவிட்டான்..! posted byAnbinalA (jaipur)[09 July 2016] IP: 115.*.*.* India | Comment Reference Number: 44232
அன்று ஒருதலை காதல்
வாழும் வரை மனதிலே இருந்தது
இன்று "ஒரு 'தறுதலை" காதல்
வாளுடன் மரணத்தில் முடிந்தது..!
சகோதரர்.சுப.வீரபாண்டியன் உண்மையை அழகாகவே சொன்னார்...!
வாள் ஒருமுறை தான் சுவாதியை வெட்டியது..?ஆனால்..! உயர்ஜாதி என்ற போர்வையில் "அவ் 'வாள்" மத நல்உணர்வுகளை துண்டு துண்டாய் கூறுபோட்டது.!! மனித நாவுகள் கொடுவாள் கொண்டு தாக்கியதுதான் சோகத்திலும் சொல்ல முடியா உச்ச சோகம்!!!
Re:.பெண்வீட்டு கலாசாரத்தை காயலில் திருத்தப்போவது யார்..? திருந்தப்போவது யார்..? posted byAnbinalA (jaipur)[16 June 2016] IP: 101.*.*.* India | Comment Reference Number: 44043
கைக்கு கைமாறும் பணமே - உன்னை
கைபற்ற நினைக்குது மனமே...
சொந்தத்தை விட சொத்துக்குத் தான் மதிப்பு
பந்தத்தை விட பணத்துக்குத் தான் முதல்விரிப்பு...
அட...வாப்பா எங்கீந்து வாரா..?
பொண்டாட்டி வீட்டில் இருந்து - இப்போ
எங்கே போரா..? - உம்மா வீட்டுக்கு - ஆக..!
காயலில் ஆண்மகனுக்கு வீடில்லை..? ஆனால்..!
ஆண்களின் உழைப்பு மட்டும் கல்லிலும், மண்ணிலும் கலங்காலமாய்...
எல்லாத்துக்கும் இஸ்லாத்தை தூக்கிப்பிடிக்கும் காயலில் பெரும்பகுதி மக்கள் ஏன்..? இந்த பெண்வீட்டில் இருக்கும் கலாசாரத்தை வெக்கம்யின்றி தூக்கிப்பிடிக்கிறார்கள் என்பது இன்னும், இன்றும் திருத்தப்போவது யார்..? திருந்தப்போவது யார்..? என்ற கேள்வி வளைந்தே வனுயர எழுந்து நிற்கிறது...17
Re:...நடுநிலையாளர்கள்,நல்லவர்கள் நோட்டாக்கு 1.3% வாக்களித்தார்கள்... posted byAnbinalA (Jaipur)[22 May 2016] IP: 101.*.*.* India | Comment Reference Number: 43900
நோட்டா காயலில் 338
திருச்செந்தூர் தொகுதி நோட்டா 1814
தமிழக நோட்டா 5,56000
தற்போது நடைபெற்ற ஐந்து மாநில நோட்டா சுமர் 17,0000 லட்சம்
இவர்கள்தான் இந்தியாவின் உண்மையான ஆட்சி மாற்றத்தை வரும் காலங்களில் கொண்டுவருபவர்கள், மற்றவர்கள் எல்லோர்களும் அடுத்த தேர்தலில் நோட்டாவுக்கு வாக்களிக்க சிந்திக்க அவகாசம் எடுத்துக்கொண்டவர்களே...!
காயலில் நோட்டா நான்காம் இடம் கொடுத்தது அறிவாளிகளே...!
செய்தி: பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொது தேர்வு முடிவுகள்: எல்.கே. மெட்ரிகுலேசன் மாணவி முஹம்மது ஷாகியா நகரளவில் முதல் மதிப்பெண் - 1155! நகர தேர்ச்சி சதவீதம் - 97.29%!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...இளமையில் கல் ; முதுமையில் இனிக்கும்... posted byAnbinalA (Jaipur)[17 May 2016] IP: 101.*.*.* India | Comment Reference Number: 43808
"இளமையில் கல்" என்பதை
திறம்பட கற்றுக்கொண்ட
மாணவ,மாணவிகளுக்கு
ஆகாயம் உள்ள வரை
அழியாமல் வாழ பிராத்திப்போம்...ஆமீன்..!
படிப்பதற்காக
வீட்டைவிட்டு வெளியேறுகிறோம்,
கொஞ்சம் அதிகம் படித்தால்
கிராமத்தை,மாநிலத்தை விட்டு வெளியேறுகிறோம்,
ரொம்பப் படித்தால்
நாட்டைவிட்டே வெளியேறுகிறோம்...
எப்படியோ..!
நல்லா படியுங்கள்
சாதனை பல புரியுங்கள்...
நன்றியும்...வாழ்த்துக்களும்...
Re:...வாய்விட்டு பேசுங்கள் ; நோய்விட்டு போகும்..! posted byAnbinalA (Jaipur)[19 March 2016] IP: 115.*.*.* India | Comment Reference Number: 43359
மனிதன் தானாக பிறக்கவுமில்லை
தனக்காக மட்டும் பிறக்கவுமில்லை
சுயநலம் இல்லாமல் பொதுநலமில்லை
பொதுநலம் கொண்ட சுயநலம் வேண்டும் . -பெரியார்-
அறிவற்ற சினேகிதனிடம்
சேர்வதை விட - நல்ல
புத்திசாலியான விரோதியை
நண்பனாக்கி கொள்வதே மேல்... -பெர்னாட்ஷா-
உனது அறிவையும்,ஆற்றலையும்
மற்றவர்களுடன் பகிர்ந்துக் கொள் ;
அவற்றை நீ பகிர்ந்துக் கொள்ளாவிட்டால்
என்றாவது ஒருநாள் - அவைகள்
உன்னையே அழித்துவிடும்... -சாக்ரடீஸ்-
விழியிலந்தோருக்கு
மனம் தைரியமாக இருபதால்
வழி இருக்கிறது
விழியுல்லோருக்கு
மனம் இல்லாததால்
வழி தெரிவதில்லை - மாறாக
வ லி யே தெரிகிறது...! -அன்பின்-
எல்லா பிரச்சனைக்கும்
தீர்வும்,தீர்ப்பும் - அவரவர்
எண்ணத்திலும்,செயலிலுமே உள்ளது...
செய்தி: அனைத்து ஜமாஅத், புறநகர் ஊர் நலக் கமிட்டிகள், அரசியல் கட்சிகள் கூட்டத்தில் DCW தொழிற்சாலை குறித்த முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்! கோரிக்கைகள் ஏற்கப்படாவிடில், தேர்தல் புறக்கணிப்பு உள்ளிட்ட போராட்டங்களை நடத்த விரைவில் முடிவு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...நீதியில்லா மனிதநேய மன்றங்கள் நிதியில் வாழ்கிறது..! posted byAnbinalA (Jaipur)[09 March 2016] IP: 115.*.*.* India | Comment Reference Number: 43331
உயர் நீதிமன்றமோ
உச்ச நீதிமன்றமோ
உண்மையில்லா நிலுவை முள்
நீதியில் வாழவைப்பதற்கு - அது
நிதியில் வாழ்கிறது...
மறந்தான்
மறந்தான் - மனிதநேயத்தை
மறந்தான்...
பணம்தான்
பணம்தான் - எல்லாம்
பணம்தான்...
தேர்தல் பறக்கணிப்பு
போராட்டம்
உண்ணாவிரதம் - இதுக்கு
தீர்வு,தீர்ப்பு பெற்றுதரும்...
சென்ற தேர்தலை புறக்கணியுங்கள்
என்று எழுதினேன்,சொன்னேன்
செவிடன் காதில் " ச ங் கு "
இப்போது தான் கேட்கிறது...
செய்தி: DCW விரிவாக்கம் வழக்கு: KEPA தொடர்ந்த வழக்கு தள்ளுபடி! தொழிற்சாலைக்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்ய இயலாது என தீர்ப்பு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...இது ஜனநாயக நாடா..? பணநாயக நாடா..? posted byAnbinalA (Jaipur)[16 February 2016] IP: 115.*.*.* India | Comment Reference Number: 43131
சென்னை உயர் நீதிமன்ற
150-ம் ஆண்டு விழாவில்
கவிஞர் வைரமுத்து
இரண்டு வரி கவிதை எழுதினார்,
"நீதியின் உயரம்
உயர் நீதிமன்றம்" - என்று.
இன்று நான் எழுதுகிறேன்,
"ஊழலின் உயரம்
உச்ச நீதிமன்றம்" - என்று...
"திருந்த சொல்கிறவர்கள்
தீர்ப்பு கொடுப்பவர்கள்
திருந்துவார்களா..?
இந்த நாட்டின்
இறுதி நம்பிக்கை
இறந்து கொண்டே
இருக்கிறது...
Re:...காணவில்லை குளங்களை..? அகற்றுங்கள் ஆக்கிரமிப்புகளை..? posted byAnbinalA (Jaipur)[03 January 2016] IP: 115.*.*.* India | Comment Reference Number: 42736
காயலில் இரட்டைக்குளம், கற்புடையார் குளம், தருவைக்குளம், மாளாக்குளம், கீரிக்குளம், பச்சிரான் குளம், மாட்டுக்குளம் மற்றும் எண்ணற்ற குளங்களையும், அதிக ஓடைகளையும் காணவில்லை...
அதில் மூப்பனார் ஓடை மட்டும் பாதி சுருங்கி வாழ்கிறது; மீதி வீட்டுமனைகளாக வாழ்கிது..?
இன்னும் மற்ற தெருக்களிலும் ஆக்கிரமிப்புகள் அதிகம் இருப்பதாக அதிகாரிகள் பேசிக்கொண்டது பரவலாக ஊர்மக்கள் ஊதுவது நமது காதுகளில் கேட்கிறது.! ஆகவே ஊர்ப் பெருமையும்,குளப்பெருமையும் பேசுவது எந்த நன்மையும் இந்த மண்ணுக்கு தரப்போவதில்லை..!
நமதூரும் எப்போதுமில்லாத அளவுக்கு சென்றாண்டும், இந்தாண்டும் மழைவெள்ளத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.! இதை கவனத்தில் கொண்டு தன்னார்வமாக ஆக்கிரமிப்புகளை அகற்றி நமக்கு நாமே நன்மைகளை செய்துக் கொள்ளவில்லை என்றால் வரும் காலங்களில் நமது பிள்ளைகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக எழுவதற்கு நாமே துணை போனவர்களாகிய குற்றத்திற்கு தள்ளப்படுவோம்..? என்ற சிந்தனையை இதுபோன்ற சீற்றத்தைக் கண்டும் திருந்த வில்லையெனில்! நாம் அறிவாளிகள் இல்லை என்பதை இன்றும்,இன்னும் நிரூபித்துக் கொண்டிருக்கிறோம் என்பதே நிதர்சனம்..!
திருடனாய் பார்த்து திருந்தா விட்டால்
திருட்டை ஒழிக்க முடியாது..?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross