செய்தி: திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து காயல்பட்டினத்தில் அமைதிப் பேரணி & இரங்கல் கூட்டம்! பெருந்திரளானோர் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:..நீ போராடியது போதும் அமைதிபெறு! அமைதிபெறு! RIP. posted byA.R.Refaye (Abudhabi)[13 August 2018] IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 46251
அன்னைத்தமிழை "செம்மொழியாக்கிய" தலைவனே!
தமிழ் உள்ளவரை உந்தன் வரலாறு நிலைக்கும்!
தகமைசால் உம் தலைமையை என்றும் நினைக்கும்!
நீ ஒலிக்கும் உடன்பிறப்பில் திளைத்தோம்!
உம் காலத்தில் நாங்களும் வாழ்ந்தோம்!
என பெருமை முரசொலிப்போம்!
நீ போராடியது போதும் அமைதிபெறு! அமைதிபெறு! RIP
இனி உன் தனயன் துணைகொண்டு , வென்றெடுப்போம் என உறுதிமொழியேற்போம்!
Re:..மரணம்_தரும்_படிப்பினை-சிந்தனை அரும்புகள். posted byA.R.Refaye (Abudhabi)[04 February 2018] IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 45996
சிந்தனை அரும்புகள்.....
#மரணம்_தரும்_படிப்பினை..
.
நேற்றைய தினம் ஒரு பச்சிளம் குருத்து மரணத்தைத் தழுவிக் கொண்டது.
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹிராஜிவூன்.
அந்த குழந்தையின் புகைப்படத்தைப் பார்த்து உருகாத நெஞ்சம் கிடையாது.ஏற்கனவே இரு மகன்களைபறி கொடுத்த நிலையில், இப்போது அறிவும், அழகும் நிறைந்த ஆறு வயது மகளையும் பறி கொடுத்து பரிதவித்து நிற்கின்றனர் அந்த பெற்றோர்கள்.
ஆயினும்அல்லாஹ்வின் நாட்டம் என்பதை புரிந்து, பொறுமையைக் கைகொண்டு, அந்த பிள்ளையின் தந்தையே ஜனாஸா தொழுகையும் நடத்தி, பயானும் தந்தது,வந்தவர்களின் நெஞ்சத்தைக் குலுங்கச்செய்தது என்றால் அது மிகையில்லை.
அவர் புனித தீனை புதிதாய் ஏற்று வந்தவர் என்று சொல்லப்பட்டது..
அவரது ஈமானையும், தக்வாவையும், அவரது பொறுமையையும் பார்த்தபோது, ஓ.... #நாங்கள்_பரம்பரை_முஸ்லிம்கள் என்று சொல்லி பெருமையடித்துத் திரிபவர்கள் வெட்கப்பட வேண்டும்.
வசதி படைத்தவர் மரணித்தால் உடனே ஓடிச் சென்று தன் வருகையைப் பதிவு செய்யும் இந்த சமூகம்,வறியோரின் வீட்டு மரணத்தை கண்டு கொள்ளாததை பல இடங்களில் நாம் பார்க்கிறோம். அந்த அளவுக்கு, நம் இதயம் பெருமையில் மூழ்கிக் கிடப்பதை, யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.
திரளான மக்கள் ஜனாஸாவுக்கு வந்திருந்தபோதிலும், எந்த ஜனாஸாவிலும் கலந்து கொள்ளாமல் இருக்கக்கூடியவர்களும் நம்மில் இல்லாமல் இல்லை. இப்படிப்பட்டவர்கள்,.
நாம் இப்படி எந்த ஒரு மைய்யத்திலும் கலந்து கொள்ளாமல், ஜனாஸா தொழுகை தொழாமல், அந்த மைய்யத்தின் மண்ணறை மற்றும் மறுமை வாழ்விற்காக, அவரின் மண்ணறையின் முன்னின்று இறையிடம் துஆ செய்யாமல் இருக்கிறோமே... நம்மைப் போலவே பிறரும் இருந்து விட்டால்..? அப்படியானால் நாம் மரணித்தப் பின்பு, நம்மை தூக்கிச் செல்ல, நமக்காக ஜனாஸா தொழ, நமக்காக பிரார்த்திக்க யார் வருவார்கள்? என்று ஒரு நிமிட நேரம் சிந்திப்பார்களேயானால்?...
எந்தவொரு ஜனாஸாவையும் தவற விட மாட்டார்கள்.
அன்பானவர்களே... அந்த சிறுமியின் மரணம் நமக்குத் தருகின்ற பாடம் என்ன.? மரணம் என்பது வயது வித்தியாசமின்றி
யாவரையும் பீடிக்கும் என்பதுதானே....?
டெங்கும், காச நோயும், தொண்டை_அடைப்பான் நோயும் உலா வந்துகொண்டிருக்கும் இந்நேரத்தில்,உள்ளூர் வெளியூர் மருத்துவமனைகளில் நம் மக்கள் சிகிச்சைப்பெற்று வரும் நிலையில் நமது தொண்டை எப்போது அடைக்கும் என்பது யாருக்குத் தெரியும்....?
ஆகவே..நிலையில்லாத இந்த அற்பஉலக வாழ்வின் மாயைகளில் நீங்குவோம்.
இறைவா! உன்னிடம் அழைத்துக்கொண்ட அந்த குழந்தையின் மறுமை
வாழ்வை சிறப்பாக்கி வைப்பாயாக. ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் உனது உயர்வான சுவனத்தில் புகச் செய்வாயாக. பெற்றோருக்காக இறையிடம் துஆ செய்யும் பாக்கியத்தை அந்த குழந்தைக்கு நீ கொடுப்பாயாக.
செய்தி: நூல் வாசிப்பை ஊக்கப்படுத்த, ‘புன்னகை மன்றம்’ சமூக ஊடகம் சார்பில், அரசு நூலகத்திற்கு பள்ளி மாணவ-மாணவியர் அழைத்துச் செல்லப்பட்டனர்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:புன்னகை மன்றம்” சமூக ஊடகத்தின் சேவைகள் தொடரட்டும்.... posted byA..R.Refaye (Abudhabi)[18 December 2017] IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 45945
விளையாட்டு பூங்காக்களுக்கு மாணவர்களை அழைத்துச்செல்லும் நிகழ்வுகள் காண்பதுண்டு ஆனால்
“புன்னகை மன்றம்” சமூக ஊடகம் முதல் முதலாய் வருங்கால தலைவர்களை அறிவுப்பூங்காவிற்கு அழைத்து வந்திருப்பது அறிவுடமை என்பதை விட ஆக்கப்பூர்வ கடமையாக கருதுகிறேன்.
பாடசாலை அறங்காவலர்கள் ஒரு செய்முறை பயிற்சியாய் மாணவ பாலகர்களை நூலகத்தோடு தொடர்பு ஏற்படுத்துவது காலத்தின் கட்டாயம் கூடவே அவர்களின் அறிவு அடித்தளம் சிறக்கும் என்பதை கவனித்தில் கொள்க.
புன்னகை மன்றம்’ சமூக ஊடகக் குழும அட்மின் ஏ.எல்.முஹம்மத் நிஜார் மற்றும் அல்அமீன் பள்ளி ஆசிரியர்கள் அனைவர்களுக்கும் நன்றியும் வாழ்த்துக்களும்.
“புன்னகை மன்றம்” சமூக ஊடகத்தின் சேவைகள் தொடரட்டும்.
செய்தி: நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற அரபு வனப்பெழுத்து வரைகலை (Arabic Calligraphy) பயிற்சி: “குறைந்தது ஐந்து கலைஞர்களாவது காயலில் உருவாக வேண்டும்!” பயிற்சியாளர் முஹ்தார் அஹ்மத் விருப்பம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:..கல் செதுக்குக்கலை வல்லுநர் அரபி ஹாஜிக்கு விருது . posted byA.R.Refaye (Abudhabi)[29 October 2017] IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 45874
கல் செதுக்குக்கலை வல்லுநர் அரபி ஹாஜிக்கு விருது
முஹம்மத் முஹ்யித்தீன் எனும் அரபி ஹாஜியார், நமதூரின் எண்ணற்ற வீடுகளது முகப்புகளிலும், பள்ளிவாசல்களிலும், பலகைகளிலும் அரபு எழுத்துக்களை அழகுற பதிக்கும், நவீன காயலின் ஒரே “கல் செதுக்குக்கலை வல்லுநர் (Stone Carving Expert)” ஆவார்.
அந்த பெருத்தகைக்கு விருது வழங்கியதன் மூலம் விருது மகத்துவம் பெற்றுள்ளது.
அவர்களை கவனப்படுத்தாமல், பயன்படுத்தாமல் போனது நமது துரதிர்ஷ்டம்.ஆர்வமுள்ளவர்களுக்கு இவர்கள் தமது கல் செதுக்குக்கலை பயிற்றுவிக்கும் வாய்ப்பினை உலக மன்றங்கள் மூலம் நடைமுறைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுமா?
காயலில் அரபு வனப்பெழுத்து வரைகலை கலைஞர்களை உருவாக்கிட வழிவகை செய்ய திட்டமிடுதல் அவசியம்.
சிறப்பான இந்நிகழ்வை ஏற்பாடு செய்த நல்லுள்ளங்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களும்,பாராட்டுக்களும்.நன்றி
Re:..ஊர்ப் பெயருக்கான சரியான எழுத்தாக்கம் . posted byA.R.Refaye (Abudhabi)[12 September 2017] IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 45802
ஊர்ப் பெயருக்கான சரியான எழுத்தாக்கம் பற்றிய ஆய்வுகள் அவசியம் என்றாலும் தற்போது உள்ள சூழ்நிலையில்,அரசின் பொறுப்பற்ற தன்மையால் ஏற்க்கனவே நமது அனைத்து ஆவணங்களிலும் எதாவது எழுத்துப்பிழைகள். குளறு படிகள் இருந்து வருவதை நாம் அறிவோம் குறிப்பாக வெளிநாடுகளை வாழ்வியலாகக் கொண்ட மக்களுக்கு அவர்களின் பாஸ்போர்ட் மற்றும்,பிறப்பு சான்றிதழ் போன்ற அனைத்து ஆவணங்களிலும் மாற்றங்களைத் திருத்தங்களை செய்ய முற்படும்போது எந்த அளவுக்குச் சாத்தியப்படும் என்பதை முதலில் நாம் ஆராயவேண்டும்,தற்போது நடைமுறையில் உள்ளபடியே செல்வது தான் நல்லது என்பது என் தனிப்பட்ட கருத்து.
நன்றி
செய்தி: ஐக்கிய விளையாட்டு சங்கம் / துபை கா.ந.மன்ற செயற்குழு உறுப்பினரின் தந்தை காலமானார்! இன்று இஷா தொழுகைக்குப் பின் நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:.இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் .. posted byA.R.Refaye (Abudhabi)[11 September 2017] IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 45794
Re:..வியாபாரியையும்,குத்தகை காரர்களையும் பாதிக்காமல் நகராட்சி நடவடிக்கை எடுத்திடுக . posted byA.R.Refaye (Abudhabi)[20 June 2017] IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 45611
இப்படிப்பட்ட கறாரான குத்தகை காரர்களால் நம் நகரை சுற்றியுள்ள பகுதிகளில் புல் கூட முளைக்காமல் போகலாம் ,
தயவாய் இது போன்ற மிகச்சிறிய வியாபாரிகளிடம் இவர்கள் கடுமை காட்டினாள் இந்த தொகையை விலையில் கூட்டி சரிசெய்யும் வாய்ப்பு ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கபடலாம்
எனவே வியாபாரியையும்,குத்தகை காரர்களையும் பாதிக்காமல் நகராட்சி நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம்.
செய்தி: ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள்: எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளி நகரளவில் முதல் மூன்றிடங்களைப் பெற்று சாதனை! இரண்டு பள்ளிகள் 100 சதவிகித தேர்ச்சி!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byA.R.Refaye (Abudhabi)[12 May 2017] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 45519
இந்த அளவிற்கு நம் மக்கள் தேர்ச்சி அடைந்திருப்பது மனதிற்கு மிக சந்தோஷமாக உள்ளது அல்ஹம்துலில்லாஹ் மாநில இடத்தை பெற சில மதிப்பெண்கள் தான் கிட்டத்தட்ட வித்தியாசம்.
நல்ல மதிப்பெண் பெற்றவர்களுக்கும்,அவரின் பெற்றோர்களுக்கும்,நகரின் கல்வி நிர்வாகத்தினர், ஆசிரிய பெருமக்களுக்கும் ,ஊக்கமளித்தது மட்டுமல்லாது ஊர்மக்களின் கல்வி மேம்பட அயராது பாடுபடும் உலக காயல் நல மன்றங்களின் கூட்டமைப்பான **
Re:...நகரில் சிறந்த கல்விக்கூடமாக திகழ இறைவனை வேண்டுகிறேன். posted byA.R.Refaye (Abudhabi)[03 April 2017] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 45418
ஒலிம்பியாட்ஸ் கல்வித் திறனாய்வுத் தேர்வில் தங்கம், வெள்ளி,மற்றும் வெண்கலப் பதக்கங்களையும், மாநில அளவில் முதலிடத்தைப் பெற்ற மாணவி A .M. நபீஸா அவர்களுக்கும் மற்றும் என் இளைய மகள் R.S நஜ்லாவுக்கும் மேலும் வெற்றிக்கு முனைந்த விஸ்டம் பப்ளிக் பள்ளி மாணவ மாணவியர் அனைவர்களுக்கும் என் உள்ளம் நிறைந்த வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் இன்னும் பல வெற்றிகளை பல துறைகளில் இப்பாடசாலை பெற்று நகரில் சிறந்த கல்விக்கூடமாக திகழ இறைவனை வேண்டுகிறேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross