செய்தி: சென்ட்ரல் மேனிலைப் பள்ளியின் ஆசிரியர் அப்துல் காதர் கான் (கான் சார்) காலமானார்! மார்ச் 24 வெள்ளி அஸ்ர் தொழுகைக்குப் பின் நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். எல்.கே பள்ளியில் எங்களுக்கு 10th Chemistry subject எடுத்த பண்பாளர்.
மாணவர்கள் அனைவரும் Chemistryல் 33 out of 33க்கு ஒரு மார்க் குறைந்தாலும் விடமாட்டார். மிகுந்த கண்டிப்புக்கு பேர்போனவர் என்றாலும் கலகலப்பிற்கு பஞ்சமில்லாதவர்.
நானும் பல தடவை ஊர் வந்த சமயம் அவரை சந்தித்து பேசியிருக்கிறேன், அன்பாக பேசுவார்.
அல்லாஹ் ஜல்ல ஜலாலஹூ கான் சார் அவர்களின் பாவப் பிழைகளை மன்னித்து மேலான சுவனப்பதியில் சேர்ப்பானாகவும் ஆமீன்.
செய்தி: மழலையர், பெரியோருக்கான பல்சுவைப் போட்டிகள், களறி விருந்துடன் நடந்தேறியது பெங்களூரு கா.ந.மன்றப் பொதுக்குழு! 80 காயலர்கள் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
பெங்களூரு காயல் நற்பணி மன்ற ஆரம்ப கால உறுப்பினர் என்ற முறையில் அகங்கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மன்ற பணிகள் தொய்வின்றி தொடர உளமார வல்லோன் அல்லாஹ்விடம் துஆ செய்கிறேன்.
இயற்கை உணவே சிறந்தது posted byW.S.S. முஹம்மது முஹிய்யத்தீன் (சென்னை)[23 September 2014] IP: 14.*.*.* India | Comment Reference Number: 37457
உணவே மருந்தாயிருந்த அன்றைய பொற்காலத்தில் நம் முன்னோர்கள் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட உணவுகளை உண்டு நோயின்றி ஆரோக்கியமானவர்களாக திகழ்ந்தார்கள், ஆனால் மருந்தே உணவாயிருக்கும் இந்நவீன பொறுமையில்லா வியாபார யுகத்தில் உடனடி விளைச்சலையும் அணுகூலங்களையும் கருத்தில் கொண்டு இயற்கை விவசாய முறைகளை மறந்து அல்லது மறக்கடிக்கப்பட்டு, கண்ட கண்ட பூச்சிக்கொல்லி மருந்துகளையும், உரங்களையும் இடுவதால் நஞ்சாகிப் போன சத்தற்ற உணவுகளை உண்பதால் பற்பல வியாதிகளுக்கு ஆட்பட்டு வருந்துகிறோம்.
இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் போன்ற சுயநலமில்லா இயற்கை நல ஆர்வலர்களின் தொடர் பரப்புரையினால் இன்றைய சமூக மக்கள் சிறிது சிறிதாக விழிப்படைந்து இயற்கை முறையில் விளைந்த பொருள்களை நாடத் துவங்கியுள்ளனர். இத்தருணத்தில் நண்பர் எஸ்.கே. ஸாலிஹ் உடைய உந்துதலால் எங்கள் தெருவில் இயற்கை அங்காடி அமைத்துள்ள NSE மாமா அவர்கள் பாராட்டுக்குாியவர். நம் நகர மக்கள் இயற்கை உணவுகளை உண்டு நல்வாழ்வு வாழ அல்லாஹ் அருள்புாிவானாகவும். ஆமீன்.
செய்தி: ஊண்டி ஆலிம் காலமானார்! ஜன. 11 காலை 11.30 மணிக்கு சிறுநெய்னார் பள்ளியில் நல்லடக்கம்!! திரளானோர் பங்கேற்பு!!! (திருத்தப்பட்ட செய்தி!) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
பேரொளி மறைந்தது posted byW.S.S. முஹம்மது முஹிய்யத்தீன் (காயல்பட்டணம் )[11 January 2014] IP: 117.*.*.* India | Comment Reference Number: 32407
மிகுந்த கண்ணியத்திற்கும், பெரும் மதிப்பிற்குமுரிய எங்களின் பெரிய தந்தையாரும், காமிலான ஷெய்குமாகிய ஊண்டி ஆலிம் என அனைவராலும் அன்புடன் அழைக்கப்பெற்ற அஷ்ஷெய்கு ஊண்டி செய்யது முஹம்மது ஆலிம் பாகவி கலீபதுல் காதிரி சூபி அன்னவர்களின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.
மார்க்க ஞானத்தில் தெளிந்த ஆழிய அறிவும், கேட்கக் கேட்க திகட்டாத எளிய நடையில் அனைவருக்கும் புரியும் விதத்தில் நிதானமாக சொற்பொழிவாற்றும் பாங்கும், எப்பொழுதும் புன்னகை தவழும் முகமும் இப்பெருமகனாரின் தனிச்சிறப்புகளாக திகழ்ந்தவை.
வல்ல நாயன் அல்லாஹ் ஜல்ல ஜலாலஹு நம் கண்மணி நாயகம் ஒளிவாம் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அருகாமையிலே ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனபதியிலே இருக்க செய்வானாகவும் ஆமீன்.
கண்ணியமிகு பெருந்தகையாளர் மறைவு posted byW.S.S. முஹம்மது முஹிய்யத்தீன் (காயல்பட்டணம்)[17 December 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 32035
'என் கடன் பணிசெய்து கிடப்பதே' என்ற மூதுரைக்கேற்ப ஊர் நலனில் மிகுந்த அக்கறையோடு, தனது பழுத்த அனுபவ அறிவு முதிர்ச்சி மற்றும் நிர்வாகத் திறமையோடும் நமதூரின் பல்வேறு பொதுநல அமைப்புக்களின் சிறப்பான தலைமையேற்று நடத்தியும், அரிய பல நல் ஆலோசனைகளை வழங்கியும் வாழ்ந்த பெருந்தகையாளர். அன்னாரின் மறைவு பேரிழப்பாகும். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை பொருத்து மேலான ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவனபதியில் சேர்த்தருள்வானாகவும் ஆமீன்.
W.S.S. முஹம்மது முஹிய்யத்தீன் மற்றும் குடும்பத்தினர்கள்
மாஷா அல்லாஹ் நல்ல முயற்சி posted byW.S.S. முஹம்மது முஹிய்யத்தீன் (சென்னை )[29 August 2013] IP: 101.*.*.* India | Comment Reference Number: 29842
அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கை கோட்பாடுகளை கிஞ்சிற்றும் பிரளாது வாழ்நாள் முழுவதும் பின்பற்றி நடந்திட, இளம்பிஞ்சு உள்ளங்களில் வஞ்சகர்களின் நஞ்சு விதை தூவப் படாமல் பாதுகாத்திட 'மக்தப் சுபுஹானிய்யா' எங்கள் பள்ளி ஜமாஅத்தினர்களால் துவக்கப்பட்ட செய்தி உள்ளங்களை குளிர்வித்தது அல்ஹம்துலில்லாஹ். இன்ஷா அல்லாஹ் எவ்வித தொய்வுமின்றி கியாம நாள் வரை நனிசிறப்புடன் நடந்தேறிட உளம் கனிந்து துஆ செய்கிறேன்.
செய்தி: எல்.கே.மேனிலைப்பள்ளி தலைமையாசிரியர் எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா பணி நிறைவு! பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்களிடையே கண்ணீர் மல்க ஏற்புரை வழங்கி பிரியாவிடை!! புதிய தலைமையாசிரியராக எம்.ஏ.எஃப்.செய்யித் அஹ்மத் பொறுப்பேற்பு!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
நல்லாசிரியருக்கு நல்வாழ்த்து posted byW.S.S. முஹம்மது முஹிய்யத்தீன் (சென்னை)[08 June 2013] IP: 223.*.*.* India | Comment Reference Number: 27838
எல்.கே. மேல்நிலை பள்ளியின் மிகச் சிறந்த ஆசிரியர் ஹனீபா சார் அவர்கள் 1994 ம் ஆண்டு +2 வில் எனது வகுப்பு மற்றும் அறிவியல் ஆசிரியராகவும் இருந்த நல்லாசிரியர்.
எவ்வித குறிப்பும் இன்றி மடை திறந்த வெள்ளம் போல் விளக்கப் படங்களுடன் அனைவரும் புரியும் வண்ணம் உயிரியல் பாடங்களை நடத்தும் பாங்கே அலாதியானது. கனிவும் கண்டிப்பும் ஒருங்கே அமையப்பெற்றவர்.
பல வருடங்கள் கழித்து அரசுத்துறை சார்ந்த Attestation காக நான் அவர்களை சந்திக்க சென்ற போது மிகவும் கனிவுடன் வரவேற்று அமர வைத்து அளவளாவி எவ்வித மறுப்புமின்றி உடனடியாக கையொப்பமிட்டு தந்தார்கள். அப்பொழுது ஹனீபா சாரின் கனிவான மறுபக்கத்தை உணர்ந்தேன்.
ஹனீபா சார் அவர்களின் ஓய்வு வாழ்க்கை சந்தோஷமாகவும் நமதூர் மாணவர்களுக்கு பிரயோஜனமாகவும் அமைய மனமுவந்து துஆ செய்கிறோம்.
எல்.கே. பள்ளியின் முன்னாள் மாணவர்கள்
W.S.S. முஹம்மது முஹிய்யத்தீன் (1993-94)
W.S.S. மரைக்கார் (1997-98)
புலிக்குப் பிறந்தது பூனையாகுமா? என்ற பழமொழிக்கேற்ப, படிப்பிலும் அறிவிலும் சிறந்து விளங்கிய என் அன்பு நண்பன் தவ்பீக் சாலிஹின் அருமை மகள் கட்டுரை போட்டியில் முதலிடம் பெற்றிருப்பது மிகவும் பாராட்டத்தக்கது. இன்ஷா அல்லாஹ், பிள்ளை மென்மேலும் பற்பல சாதனைகளைப் புரிந்து பெற்றோருக்கும், நமதூருக்கும், நம் நாட்டிற்கும் பெருமைகள் தேடித் தர உள்ளன்புடன் வாழ்த்துகிறேன்.
பெருந்தகையாளர் சிவந்தி ஆதித்தனார் அவர்களின் சீர்மிகு நிர்வாகத் திறமையினால் கல்வித்தரத்தில் சிறப்பிடம் பெற்றுத் திகழும் ஆதித்தனார் கல்லூரியின் முன்னாள் மாணவன் (1994-1997) என்ற முறையில் அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன்.
எப்பொழுதும் புன்னகை சிந்தும் முகம், தெளிவான பேச்சு, கம்பீர நடை, தொலைநோக்குப் பார்வை, தயாள குணம் ஆகியவற்றிக்கு சொந்தக்காரர். கல்வி நகரமாக திருச்செந்தூரை மாற்றி அமைத்தவர். நான் பயிலும் காலத்தில் நடைபெற்ற கல்லூரி ஆண்டு விழாவில் அவர் ஆற்றிய உரையில் "நிச்சயமாக திருச்செந்தூரில் ஆதித்தனார் பல்கலைக்கழகம் அமைத்தே தீருவேன்" என்று பலத்த கரவொலிக்கிடையில் முழங்கியது, பட்டமளிப்பு விழாவில் என் முதுகை தட்டிக் கொடுத்து வாழ்த்தியது இன்றும், என்றும் பசுமை மாறா நினைவலைகள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross