மச்சான் ...அன்பு மகனை இழந்து வாடும் இந்த நேரத்தில் எனக்கு எப்படி ஆறுதல் சொல்றது ன்னு தெரியல ....அல்லாஹ்வின் கலா கதருக்கு அனைவரும் கட்டுப்பட கடமைப்பட்டுள்ளோம். அருமை மகனை இழந்து வாடும் பெற்றோரின் மனங்களுக்கு சப்ரன் ஜமீலா வெனும் அழகிய பொறுமையை கொடுத்தருளவும் , தாருல் பகா அளவில் சென்ற அருமை பிள்ளை , பாவப் பிழைகள் பொறுக்கப்பட்ட நல்லடியார்கள் கூட்டத்தில் , நாளை மறுமை நாளில் பெருமானாரின் கரம் பற்றி சுவனம் புகும் அரிய பாக்கியம் பெற்ற பிள்ளையாக ஆக்குவாயாக யா அல்லாஹ் என்று கரம் தூக்கி , கண்ணீர் மல்க துஆ இறைஞ்சுகிறேன். ஆமீன்.
என் அன்பு நண்பர்கள் அஷ்ரப் ,மெய்தீன் மற்றும் குடும்பத்தார்கள் ஸப்ர் செய்யுமாறு அன்போடு வேண்டுகிறேன். அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்.
சொளுக்கு மாமா மர்ஹூம் அவர்களின் பிழை பொறுத்து அருள் புரிவாய் ரஹ்மானே ! posted byk.v.a.t.habib mohamed (qatar)[02 May 2015] IP: 37.*.*.* | Comment Reference Number: 40321
இன்னா லில்லாஹி வ இன்னா இலை ஹி ராஜிஊன்.
சொளுக்கு மாமா அவர்களின் திடீர் மறைவு மிகவும் அதிர்ச்சியாகவும் வேதனையாகவும் இருக்கிறது. அல்லாஹ்வின் கலா கதரின் படி நடந்தமைக்கு அனைவரும் பொறுமை செய்ய கடமை பட்டிருக்கிறோம்.
வல்ல அல்லாஹ் , சொளுக்கு மாமா அவர்களின் நல்ல அமல்களை அங்கீகரித்து , பாவப் பிழைகளை பொறுத்து , கப்ரில் சுவனத்து தென்றலை நுகரவும் , மறுமையில் எம்பெருமானாரின் ஷஃ பா அத்துடன் மேலான ஜன்னத்துல் ஃ பிர்தவ்சில் அஃலா வெனும் உயரிய சுவன பதி அடையவும் , இருகரம் ஏந்தி து ஆ செய்வதோடு , குடும்பத்தார் அனைவர்க்கும் சப்ரன் ஜமீலாவெனும் அழகிய பொறுமையை கொடுத்தருளவும் வல்ல அல்லாஹ்வை வேண்டுகிறோம். அனைவருக்கும் எங்கள் நற் ஸலாத்தை(அஸ்ஸலாமுஅலைக்கும் ) தெரிவித்துக்கொள்கிறோம் ,பொறுமை செய்யும் படி மிகவும் அன்போடு வேண்டுகிறோம்.
வேதனையோடு ,
K.V.A.T. குடும்பத்தினர்
காயல்பட்டணம் மற்றும் கத்தார்.
வாழ வழி வகுத்து கொடு ! நீ வாழ்த்தப்படுவாய் ! posted byK.V.A.T.HABIB MOHAMED (QATAR)[07 November 2014] IP: 176.*.*.* Qatar | Comment Reference Number: 38055
ஏ.எல் .எஸ். மாமா அவர்கள் ஒரு சிறந்த சமூக சிந்தனை வாதி, எழுத்தாளர், ஓவியர், பிள்ளை மனம் கொண்ட வெள்ளை உள்ளத்துக்கு சொந்தக்காரர். சரியோ தவறோ அவர்கள் மனதுக்கு பட்டதை பட்டென்று எடுத்துரைப்பவர் , பொது சேவை செய்வதை ஒரு பொறுப்பாக நினைத்து செயல் படுபவர்.குறிப்பாக தான் சார்ந்த பகுதி மக்களின் மேல் தனிப்பெரும் பாசம் கொண்டவர். இப்படி அடுக்கிகொண்டே போகலாம்.
நமதூரில், ஏ.எல்.எஸ். மாமாவைபோன்றோர் விரல் விட்டு எண்ணும் அளவே இருக்கின்றனர். மாமா அவர்களின் அடிமனதின் தாக்கம் இந்த கட்டுரை மூலம் தெள்ளத்தெளிவாக வெளிப்படுகிறது. உங்கள் ஆசையும் , எண்ணங்களும், நிச்சயம் வெற்றி பெரும். உங்கள் கருத்து ஆக்கங்கள் அனைவரையும் அடைவதற்கு இறைவன் ஏதோ ஒருவகையில் வழி வகுத்து தருவான்.
நீங்கள் செய்யும் பொது சேவை மக்களை சென்றடையும். வசதி யற்றவர்கள் வாழ வழிவகுத்து தர பாடு படும்போது, நீங்கள் ...உங்கள் குடும்பம் வாழும் ! வாழ்த்தப்படுவீர்கள் ! அதன் மூலம் பேரானந்தம் அடைவீர்கள். அல்லாஹ் துணை புரியட்டும் ! ஆமீன்.
மர்ஹூமா அவர்களின் பிழை பொறுப்பாய் யா அல்லாஹ் ! posted byk.v.a.t.habib (qatar)[12 October 2014] IP: 37.*.*.* | Comment Reference Number: 37689
மர்ஹூமா அவர்களின் எல்லா அமல்களையும் அல்லாஹ் அங்கீகரித்து , மேலான சுவன பதி வழங்குவானாக ..ஆமீன் .
அவர்களை பிரிந்து மன வேதனையிலிருக்கும் அன்னாரின் குடும்பத்தாரின் இதயங்களை , சப்ரன் ஜமீலா வெனும் அழகிய பொறுமையை கொண்டும் நிரப்புவானாக ...ஆமீன். சப்ர் செய்து கொள்ளுமாறு அன்போடு வேண்டுகிறேன். அனைவருக்கும் அன்பான அஸ்ஸலாமு அலைக்கும்.
செய்தி: நெசவு ஜமாஅத் முன்னாள் தலைவரின் சகோதரரான ‘அஸ்ஸலாத் அப்பா’ காலமானார்! இன்று அஸ்ர் தொழுகைக்குப் பின் சங்கனாச்சேரியில் நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
தற்காலிக இல்லத்தை விட்டும் நிரந்தர வீட்டை அடைந்தார் ! posted byK.V.A.T.HABIB (QATAR)[27 August 2014] IP: 37.*.*.* | Comment Reference Number: 36769
என் தாயார் அவர்களும் , மர்ஹூம் சாலிஹ் ஹாஜியார் அவர்களும் , சதுக்கைத் தெரு காதர் (சாமுனா லெப்பை )ஹாஜியார் அப்பா (நமதூருக்கு முதன்முதலில் சைக்கிள் ரிக்க்ஷா அறிமுகம் செய்தவர்கள் ) அவர்கள் மற்றும் குடும்பத்தாருடன் ஒரே குரூப்பில் 1972 இல் புனித ஹஜ்ஜுக்கடமை ஆற்றியவர்கள்.
என் தாயாரோடு தன் பெற்ற பிள்ளைக்கு காட்டும் அன்பையும் பாசத்தையும் காட்டியவர்கள். மிகவும் எளிமையான வாழ்வினை இந்த துனியாவில் வாழ்ந்து காட்டியவர்கள். சதாவும் அல்லாஹ்வின் சிந்தனையில் தன்னை முழுமையாக அற்பணித் தவர்கள் .
35 வருடங்கள் கழித்து அவர்களை நான் சந்தித்த போது , அப்பா அவர்களுக்கு என்னை அறிமுகம் செய்து வைத்து , அளவளாவியபோது , கொஞ்சமும் மறவாமல் , என் மகள் தன் தாயார் எப்படி இருக்கிறார்கள் என்று பாசம் பொங்க அவர்கள் என்னிடம் குசலம் விசாரித்ததை எண்ணி வியந்தேன்.
அந்த அளவுக்கு நல்ல நினைவாற்றலோடு , தாங்கள் ஹஜ்ஜின் போது நடந்த சில சம்பவங்களை கூறி , பெருமிதம் கொண்டார்கள் . அந்த அளவுக்கு , பாசம் மிகும் அப்பா சாலிஹ் ஹாஜியார் அவர்களின் வஃபாத்து செய்தி அறிந்து வருத்தம் அடைந்தேன். வல்ல ரஹ்மானின் திருப்பொருத்ததுக்காகவே வாழ்ந்து மறைந்த மாமனிதரைப்போன்று நாமும் வாழ கற்றுக்கொள்ள வேண்டும் .
அவர்களின் நற்பண்புகளை பின்பற்றி , இம்மை மற்றும் மறுமை வாழ்வை செப்பனிட வல்ல அல்லாஹ். நமக்கு தவ்ஃ பீக் செய்தருள் புரிவானாகவும். ஆமீன் . மர்ஹூம் சாலிஹ் ஹாஜியார் அப்பா அவர்களின் மண்ணறையை சுவனத்து பூங்காவாக ஆக்கி , மறுமையில் மேலான ஜன்னதுல் ஃ பிர்தவ்சில் அஃ லா வெனும் சுவன பதி அடையச் செய்வானாக ..ஆமீன்.
அன்னாரின் குடும்பத்தார் அனைவருக்கும் அல்லாஹ் , அழகிய பொறுமையை வழங்குவானாக , ஆமீன். அனைவர்க்கும் எங்களின் அன்பான அஸ்ஸலாமு அலைக்கும் .
மாறாத அன்புடன் ,
K.V. A.T. குடும்பத்தினர்
முத்து மஹால்
குறுக்குத்தெரு
காயல்பட்டணம்.
எங்கள் பாச மிகு விளக்கு மாமா அவர்களின் அருமை த்துணைவியார் எங்கள் சித்தி மாமி அவர்களின் வ ஃ பாத்து செய்தி அறிந்து, மிகவும் அதிர்ச்சி அடைந்தேன்.
விளக்கு மாமா அவர்கள் எங்கள் தாய் மாமாவுக்கு நிகரானவர்கள். நாங்கள் சிறு பிள்ளை பிராயத்தில் , அவர்கள் எங்கள் முடுக்கில் , வீட்டிற்கு பின்புறத்தில் வசித்து வந்த காலங்கள் தான் இப்போது என் கண் முன்னே நிழலாடுகிறது . எப்பொவும் சிரித்த முகம் , சதாவும் நிதான குணம் , பொறுமையான , சாந்த செயல்பாடுகள். பேச்சிலும் கூட அவ்வளவு மென்மை. நற்குணங்களே கொண்ட சித்தி மாமி அவர்களின் நற் செயல்களை வல்ல ரஹ்மான் ஏற்று , பாவங்களை மன்னித்து , கப்ரை பிரகாசமாக்கி , விசாலமாகவும் கொடுத்து , மறுமையில் சுவனத்தை பெற்றவர்களாக ஜெயம் பெற , இருகரம் ஏந்தி இறைஞ்சுகிறேன் .ஆமீன்.
மர்ஹூமா சித்தி மாமி அவர்களை இழந்து துயருற்றிருக்கும் எங்கள் பாசமிகு விளக்கு மாமா அவர்களுக்கும் , எங்கள் அருமை மச்சான்மார்கள் , மச்சி , தம்பி மக்பூல் , மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் அல்லாஹ் , அழகிய பொறுமையை வழங்குவானாக , ஆமீன். ஸப்ர் செய்யுமாறு அனைவரையும் அன்போடு வேண்டுகிறோம். அனைவருக்கும் எங்களின் அன்பான அஸ்ஸலாமு அலைக்கும்.
வருத்ததுடன் ,
K.V.A.T. கபீர்
K.V.A.T.ஹபீப்
K.V..A.T. குடும்பத்தினர்
குறுக்குத்தெரு
காயல்பட்டணம் &கத்தார்.
செய்தி: காயல்பட்டினம் - திருச்செந்தூர் நெடுஞ்சாலையோரத்தில் அமைந்துள்ள கோவில் குறித்து பதட்டம்! ஆக்கிரமிப்பிலுள்ள கோயில், கோட்டைச் சுவரை அகற்ற இரு தரப்பினரும் ஒப்புதல்!! (இறுதிச் செய்தி) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
அனைவரும் அமைதியாக வாழ வழி வகுப்போம் ! posted byK.V.A.T.HABIB (Qatar)[23 August 2014] IP: 37.*.*.* | Comment Reference Number: 36565
காயல்பட்டணத்தில் ஒரு சிலரால் திட்டமிட்டு இரண்டு சமுதாய மக்களையும் சதி வலையில் சிக்க வைத்து , பெரும் கலவர பூமியாக்க மாற்ற நினைத்த அனைத்து செயல் களையும் கண்டுபிடித்து ,களைந்து , அமைதிக்கு வழி வகுத்து , இரண்டு தரப்பினருக்கும் சுமூகமான நல்லிணக்கத்தை உருவாக்கி தந்த அரசு தரப்பு அதிகாரிகள் , மாவட்ட நிர்வாகம் . வட்ட நிர்வாகம் , முஸ்லிம் லீக் மாநில தலைமை , அதன் பொதுச்செயலாளர் மற்றும் அவர்களோடு ஒற்றுமையாக நின்ற ஊர் பொது மக்கள் மற்றும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் , இறைவனுக்கும் எண்ணிலடங்கா நன்றி....அல்ஹம்துலில்லாஹ்
இணங்கி வாழ்வோம்...
இல்லாதவருக்கு வழங்கி வாழ்வோம்....
இறை ஒருவனையே வணங்கி வாழ்வோம் !!!
பிழை பொறுத்து சுவனம் சேர்ப்பாய் யா அல்லாஹ் ! posted byK.V.A.T.HABIB (Qatar)[17 August 2014] IP: 176.*.*.* Qatar | Comment Reference Number: 36488
மர்ஹூம் M.K.P. முஹம்மது உமர் அவர்கள் வபாத்து செய்தி மிகவும் வேதனையளிக்கிறது . அல்லாஹ்வின் கழா கத்றுக்கு நாம் அனைவரும் சப்ர் செய்ய கடமைப்பட்டுள்ளோம் . மர்ஹூம் அவர்களின் நல்ல அமல்களை வல்ல அல்லாஹ் ஏற்று , கப்ரை பிரகாசமாக்கி , விசாலமாக கொடுத்து , மறுமையில் , ஜன்னத்தை நசீபாக்கி வைப்பானாக , ஆமீன்.
அன்னாரை பிரிந்து துயருற்றிக்கும் தம்பி ஜியாவுதீன் மற்றும் அன்னாரின் குடும்பத்தார் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் அழகிய பொறுமையை வழங்குவானாக , ஆமீன். அனைவர்க்கும் எண்களின் அன்பான அஸ்ஸலாமு அலைக்கும்.
துயரத்தில் பங்கு கொள்ளும் ,
K.V.A.T.கபீர் ,ஹபீப் , கவுன்சிலர் முத்து ஹாஜரா ,
மற்றும் K.V.A.T. குடும்பத்தினர்
குறுக்குத்தெரு ,
காயல்பட்டணம் மற்றும் கத்தார்.
அல்லாஹ் உன் அழைப்பை ஏற்றார் !அவர் மீது அருள்மாறி பொழிந்திடுவாய் ! posted byK.V.A.T.HABIB (Qatar)[14 August 2014] IP: 176.*.*.* Qatar | Comment Reference Number: 36402
எங்கள் தாயாரின் தாயார் (மர்ஹூமா ஹாஜர் முத்து கண்ணுமா) மூலம் எனக்கு கிடைத்த தாய்மார்கள் விரல் விட்டு என்னும் அளவு தான். அதில் ஓரோர் இடமும் ஒருசில வளர்ப்பு முறையில் என்னை என் சிறுவயது பிராயத்தில் என்னை செப்பணிட்டார்கள் என்றே சொல்லி ஆகணும். அந்த அளவுக்கு என்னை பெற்ற புள்ளையாகவே கருதி , செய்யது அஹமது கபீர் காக்கா (கானா அப்பா ) , தம்பி ஷுஐப் நூஹு ஆலிம் அவர்களோடு என்னையும் தன் புள்ளையாகவே கருதினார்கள்.
அந்த காலத்து அழகிய தரையோடு தரையாக இருக்கிற வண்ணம் புனைந்த ஜன்னல் வைத்த பழைய வீடு . நான் ஒடி ஆடி விளையாடிய அந்த அழகிய இரண்டு பெரிய வீட்டில் மர்ஹூம கதிஜா பெருமாவும் , முத்தாசிமா பெருமாவும் என்னை தனி கவனம் கொண்டு, சோறு வூட்டி விட்டு, வேலா வேலைக்கி மார்க்கம் சம்பந்தமான படிப்பினையை தந்து, சபையில் கூச்சம் இல்லாமல் ஓதுவதற்கும் பயிற்சி தந்து (வீட்டில் நடக்கும் பெண்கள் ஹல்க்காகளில் வைபவங்களில் சிறிய புள்ளையாகிய என்னையும் இருத்தி ஓத வைத்து) அழகு பார்த்தவர்கள்.
இதுவெல்லாம் அவர்களின் இயற்கையான குணத்தின் வெளிப்பாடு. இன்றைக்கு அல்லாஹ்வின் திருப்பொருத்தம் பெற நாம் செய்கின்ற நற்காரியங்களுக்கு அவர்களும் இட்ட உரம் தான் , இன்று நற்காரியங்களின் செயலாக உருவெடுத்து இருக்கிறது .அந்த பசுமையான நினைவுகள் என் மனதில் நிழலாக வந்து என்னை கண்களால் கசிய வைக்கிறது. ஊர் வந்தும் அவர்களை பார்க்காமல் வந்து விட்டேனே என்று என் மனது வருந்துகிறது.
யா அல்லாஹ்...மர்ஹூமா தாய் முத்தாசிமா அவர்களை உன் ரஹ்மாத்தால் பொருந்திக்கொள்! அவர்களின் மண்ணறையை விசாலமாக , குரானின் நூரைக்கொண்டும் பிரகாசமாக ஆக்கிக்கொடு ! அவர்களின் நல் அமல்களை மறுமையில் மீஜானில் அதிக பாரமாக ஆக்கி , அதன் பொருட்டால் பெருமானார் ஸல் லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் திருக்கரம் பற்றியவர்களாக , மேலான சுவனபதி அடையச் செய் ரஹ்மானே !
யா அல்லாஹ் ...அவர்களை பிரிந்து வாடும் அருமை காக்கா, தம்பி மற்றும் அன்பு குடும்பத்தினர் அனைவருக்கும் சப்ரன் ஜமீலா வெனும் அழகிய பொறுமையை வழங்குவாயாக ! அனைவரும் சப்ர் செய்யுமாறு அன்போடு வேண்டுவதோடு , எங்களின் அன்பான அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் அனைவர்க்கும் உண்டாவதாக.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross