Re:...சொத்துக்குவிப்பு வழக்குகள் சொதப்பல்கள் குவிப்பு வழக்குகள் posted bymackie noohuthambi (kayalpatnam)[14 November 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 31435
அரசியலில் இதெல்லாம் சகஜம். இதற்கு போய் அலட்டி கொள்வதா தண்டுபத்து சிங்கம்!
முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மீது திமுக அரசு தொடர்ந்த வழக்கு தின தந்தியில் வரும் சிந்துபாத் கதைபோல் தொடர்ந்து கொண்டிருக்கிறது,
ராஜீவ் காந்தி போபோர்ஸ் பீரங்கி ஊழல் வழக்கு,அவரை கொலை செய்த வழக்குகள், இந்திரா காந்தியை கருணாநிதி கொலை செய்ய முயன்றார் என்ற வழக்கு இவை எல்லாம் நிலுவையில் உள்ளது.
அண்ணன் அவர்கள் உடனடியாக போயஸ் தோட்டம் சென்று புரட்சி தலைவி அவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து அதிமுக வில் தன்னை இணைத்துக் கொண்டால் கறைபடாத கரங்களுக்கு சொந்தக்காரராக ஆகிவிடலாம்.இது புரியாதா அண்ணனுக்கு, நான் யாரென்று புரிகிறதா, நான் தீயென்று தெரிகிறதா?
அண்ணா நாமம் வாழ்க புரட்சி தலைவர் நாமம் வாழ்க, அண்ணாச்சி வாழ்க.
Re:...பிறை, அது முடிந்த கதை posted bymackie noohuthambi (kayalpatnam)[10 November 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 31331
ஆசிரியரின் ஒற்றுமை தாகம் இந்த மண்ணின் மைந்தர்கள் எல்லோருக்கும் இருக்கிறது. ஆனால் அது கானல் நீராக இருக்கிறது என்பதுதான் நிதர்சன உண்மை.
நபிமார்களின் வாரிசுகள் என்று போற்றப்படும் உலமாக்கள் பல அணிகளாக பிரிந்து நின்று நபி வழியை போதிக்கிறார்கள். இவர்களை பின்பற்றுபவர்களும் பல ஜமா அத்களாக பிரிந்து செயல்படுகிறார்கள்.ஒவ்வொரு தனிமனிதனும் கூட இங்கு ஒரு மார்க்க அறிஞனாக தன்னை முன்னிலைபடுத்தி பேசியும் எழுதியும் வருகிறார்கள்.
தமிழிலே ஒன்று சொல்வார்கள்.
"மங்கை சூதகமானால் கங்கையில் நீராடலாம். கங்கை சூதகமானால் எங்கே நீராடுவது?". ஆசிரியருக்கும் எனக்கும் ஒரு சந்தேகம் வந்தால் உலமாக்களிடம் போய் கேட்போம். ஆலிம்களே சந்தேகத்தின் ஊற்று கண்ணாக இருந்தால் என்ன செய்ய முடியும்.
சூரா பனி இஸ்ராயீல் 83 வது வசனம் அல்லாஹ் மிக அழகாக சொல்கிறான். "நபியே நீங்கள் சொல்லுங்கள்.ஒவ்வொருவரும் தன் வழியிலேயே செயல்படுகிறார்.ஆகவே, நேர் வழியில் செல்பவர் யார் என்பதை உங்கள் இரட்சகன்தான் மிக்க அறிந்தவன்!"
பிறை விஷயம் முடிவுக்கு வந்து விட்டது. ஒரு இறை, ஒரு மறை, ஒரு நபி என்பதோடு நிறுத்திக் கொண்டு, ஒரு பிறை என்ற வாதம் இப்போது எடுபடாது. இது அகீதா சம்பந்தப்பட்டது அல்ல. உலமாக்கள் கூடிப் பேசி மக்களுக்கு இசைவான தீர்ப்பை வழங்கலாம். அவர்கள் பிரிந்து நிற்கும் வரை, பிறை ஒரு குறை இல்லை, பெரிதுபடுத்த வேண்டாம். எல்லோரும் இந்த விஷயத்தை ஜீரணித்துக் கொண்டு வாழ்க்கையை ஓட்ட ஆரம்பித்து விட்டோம். ஆசிரியர் அவர்களும் அந்த வட்டத்துக்குள் வந்து அமைதி அடையுங்கள்.
"கொழுந்து விட்டு எரியும் நெருப்பு வளையத்துக்குள் கொளுத்தப்படாத கற்பூரமாக எத்தனை நாள் நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்?".
Re:...சந்தியுங்கள் நிகழ்ச்சிபற்றி சிந்தியுங்கள் posted bymackie noohuthambi (kayalpatnam)[09 November 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 31312
பார்க்கவும் படிக்கவும் சந்தோஷமான செய்திக் கோர்வை. சந்தியுங்கள் மாநிலத்தில் முதல் மாணவ மாணவிகளை நிகழ்ச்சிக்கு செலவிடும் தொகை வேறு ஒரு பயனுள்ள விஷயத்துக்கு திருப்பி விடலாமே, ஆற்று நீரும் அருவி நீரும் அத்து மீறி ஒலித்து ஓடினாலும் அதில் ஒழு செய்பவர்கள் மூன்று முறைக்கு மேல் செய்வது இஸ்ராப் என்று நபிகள் நாயகம் சொல்வதாக உலமாக்கள் சொல்கிறார்கள்.
திருமண வைபவங்களில் வான வேடிக்கைகள் ஹராம் என்றும் சொல்கிறார்கள். இந்த செலவினங்களையும் கல்வி பணிக்கு செலவிடலாமே, மாற்றி யோசியுங்கள். மாற்றம் ஒன்றுதான் உலகில் மாறாதது. வாழ்த்துக்கள்.
Re:...நோய் இல்லா உடலிருந்தால்... posted bymackie noohuthambi (COLOMBO)[25 October 2013] IP: 203.*.*.* Sri Lanka | Comment Reference Number: 30972
காயிலே இனிப்பதில்லை, கனிந்ததும் கசப்பதில்லை. நோய் இல்லா உடலிருந்தால் நூறு வரை காதல் வரும்
என்று ஒரு கவிஞன் பாடுவான்.
ஆலிம்களும் மனிதர்கள்தான். எல்லா ஆசா பாசங்களும் அவர்களுக்கும் உண்டு என்ற உண்மை இங்கே ஆலிம்கள் ஊஞ்சல் ஆடும் போது பார்க்க முடிகிறது.
உனக்கு தான் வயதாகி விட்டதே பள்ளி வாசல் வீடு என்று இருக்க வேண்டியதுதானே என்று என்னை ஒரு நண்பர் சொல்வார். நான் அவருக்கு சொல்வேன் அப்படியானால், வயதாகுமுன் பள்ளி வாசல்பக்கமே நீ போகமாட்டாயா....கருவறையில் இருந்து வெளி வந்து உணர்வுகள் தெரிந்த காலம் முதல் மண்ணறை செல்லும் வரை ஒவ்வொரு முஸ்லிமும் பள்ளிவாசலில் பர்லானா தொழுகை தொழுக போவதும் வீட்டில் சுன்னத்தான தொழுகைகள் தொழுவதும் கட்டாயம் என்ற உண்மை உனக்கு தெரியாதா என்று கேட்பேன்.
எனவே, தொழில், தொழுகை, சந்தோஷம், உறவுகள் நட்புகள் எல்லாம் ஒன்று சேர்ந்து கொண்டாடப்பட வேண்டிய முறைப்படி எல்லாம் இங்கே நடந்தேறுவது வாழ்வியல் தத்துவங்களை நமக்கு உணர்த்துகிறது. அல்ஹம்து லில்லாஹ்.
Re:...HE ALONE LIVES.... posted bymackie noohuthambi (colombo)[25 October 2013] IP: 203.*.*.* Sri Lanka | Comment Reference Number: 30971
HE ALONE LIVES WHO LIVES FOR OTHERS. OTHERS ARE MORE DEAD THAN ALIVE.
பிறருக்காக கண்ணீரும் ஏழைக்காக செந்நீரும் சிந்துபவன் எவனோ அவனே மனிதன் மனிதன். .
ஆடிட்டர் புகாரி காக்கா அவர்கள் வாழும் காலத்தில் மக்கள் மனங்களில் நிலைத்து நின்றார்கள். ஆனால் அவர்கள் தலைமுறை காலமெல்லாம் ஆடிட்டர் அவர்கள் வாழும் நினைவு சின்னமாக இப்படி ஒரு சேவையை செய்திருப்பது பாராட்டுக்குரியது. சதகதுன் ஜாரியா என்பதன் அடையாளமாக மாநிலம் தாண்டி அதுவும் தமிழகத்து தண்ணீர் தர மறுக்கின்ற ஒரு மாநிலத்தில் காயலர்களுக்கு தண்ணீரும் உறங்க இடமும் உறைவிடமும் தந்து அவர்களுக்கு வாழ்வாதாரமாக நல்ல வேலைகளும் பெற்றுத்தர முயற்சிகள் நடந்திருப்பது பாராட்டுக்குரியது.
அங்கு தங்கும் இளைஞர்கள் இந்த சந்தர்பத்தை நன்கு பயன்படுத்திக் கொண்டு, ஒவ்வொருவரும் இப்படி பிறருக்கு உதவி செய்வேன், நான் நமதூரில் ஒருவனுக்காவது வேலை வங்கி தருவேன் என்று இந்த நல்ல நாளில் சபதம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பெங்களூரு ஒரு குளிரூட்டப்பட்ட நகர். AIR CONDITIONED CITY . பொழுது போக்குகள் நம்மை மிக திசை திருப்பும் வாய்ப்புக்கள் உள்ள நகர். இளமை இனிமை புதுமை இவைகள் ஒன்று சேர நம்மை களிப்பூட்டும் நகர். இந்த சபலங்களுக்கு இளைஞர்கள் அடிமைப் பட்டு விடக்கூடாதே என்ற பயமும் எனக்கு உள்ளது. என்றாலும் இந்த மன்றத்தின் ஆளுநர்கள் கண்காணிப்பில் இருப்பதால் கூடிய விரைவில் இங்கு வருபவர்கள் வேலை வாய்ப்பு பெற்று, இனி வருபவர்களுக்கு இடம் கொடுத்து அவர்களையும் வாழ வைப்பார்கள் என்ற நம்பிக்கையும் உள்ளது.
ஆடிட்டர் புகாரி அவர்கள் மண்ணறையை அல்லாஹ் வெளிச்சமாக்குவானாக, அவர்கள் பாவங்களை மன்னித்து மேலான சொர்க்க வாழ்வை கொடுத்து அருள்வானாக. அவர்கள் சந்ததிகளுக்கு தொடர்ந்து பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மையை கொடுத்தருள்வானாக.
கொழும்பிலே சீனங்கோட்டையில் நளீம் ஹாஜியார் என்று ஒரு பெரிய மாணிக்க வியாபாரி எல்லோருக்கும் தெரியும். அவர்களை ஒரு உதவிக்காக நம்மவர்கள் நாடி சென்றார்கள். ஹஜ்ஜு கமிட்டி கட்டுவதற்கு. சுமார் 25 ஆயிரம் எதிர்பார்த்து சென்றார்கள். அவர் கேட்டாராம் இந்த கட்டடம் கட்ட என்ன செலவாகும் என்று. அந்த தொகையை சொன்னபோது, முழு தொகைக்கும் ஒரு காசோலை எழுதிக் கொடுத்தாராம். இது கூட ஆச்சரியம் இல்லை. வந்த நபர்களிடம் அவர் சொன்னாராம். "அல்லாஹ் எனக்கு பணத்தை தந்துள்ளான், உதவுவதற்கு நல்ல மனதையும் தந்துள்ளான். இந்த மனம் மாறி விடாமல் இருக்க நீங்கள் எல்லாம் து ஆ செய்யுங்கள்" என்றாராம். கேட்கும் போது புல்லரிக்கிறது.
அந்த வரிசையில் நாம் எல்லோரும் நளீம் ஹாஜியாராக, ஆடிட்டர் புகாரிகளாக ஆக அல்லாஹ் அருள்புரிவானாக.
பணம் இருப்பவர்களா கொடுக்கிறார்கள். இல்லை,
மனம் இருப்பவர்களே கொடுக்கிறார்கள்.
ஈதல் இசைபட வாழ்தல் இவை அல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு.
Re:...காட்டில் நிலவாய் கடலில் மழையாய்.. posted bymackie noohuthambi (galaha srilanka)[18 October 2013] IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 30850
காட்டில் நிலவாய் கடலில் மழையாய் விழுந்தால் யாருக்கு லாபம். நமதூரில் பெய்யும் மழையும் அப்படித்தான். விவசாயத்துக்கு உதவுமே என்று நினைக்க நமதூரில் விவசாயம் இல்லை. மாறாக தண்ணீர் ஆறாக ஓடுவதும் தெருக்களில் நீர் கட்டி நிற்பதும் ஒரு தெருவில் இருந்து இன்னொரு தெருவை கடக்க பாடாக படவேண்டியுள்ளது. தெருக்கள் குன்றும் குழியுமாக இருப்பதால் தண்ணீர் கட்டி நிற்கும் இடங்களில் கால் தடுக்கி விழுபவர்கள் இப்படி பலரும் மழை வருவதை நினைத்து கவலைப்படுகிறார்கள். அல்லாஹ்வை நன்றியுணர்வுடன் ஷுக்ர் செய்பவர்கள் வெயிலின் கொடுமையால் அவதிப்படும் முதியவர்கள்தானே தவிர இளைஞர்கள் இல்லை.
எனவே அல்லாஹ் அவர்களின் மனதிருப்திக்குதான் மழையை அவ்வப்போது அனுப்புகிறான். எனவே பெய்கின்ற மழை போதும் நமக்கு இது போதும் என்று அல்லாஹ் நினைப்பதால் அவ்வப்போது மழை வந்து போகிறது. இதில் கவலைப் படுவதில் என்ன இருக்கிறது. மழை வேண்டி தொழுக போகிறவர்கள் கூட தங்களுடன் குடை எடுத்து செல்வதில்லை. நாம் கேட்டால் அல்லாஹ் நிச்சயம் தருவான் என்று நினைப்பவர்கள் எல்லோரும் குடையை கையில் கொண்டுபோய் இருப்பார்கள். ஈமானில் பலகீனம்.
Re:...அல்லாஹ் பெரியவன் posted bymackie noohuthambi (colombo)[18 October 2013] IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 30847
இல்லை இல்லை என்றவனும் எதனை இல்லை என்றான், இல்லை ஒரு தெய்வம் என்று சொல்லவில்லை என்றான்.
இறைவன் என்பவன் இனி அல்லாஹ் இல்லை என்று ஒரு நாட்டு நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. ஆம் இறைவன் வேறு அல்லாஹ் வேறு. அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன. அவற்றை மட்டுமே சொல்லி அல்லாஹ்வை புகழ்வோம் மேன்மை படுத்துவோம்.
காதலன் கணவன் இவர்களுக்கும் இறைவன் என்றே தமிழில் சொல்லப்படுவதால் இனிமேலும் நாம் அல்லாஹ்வை இறைவன் என்று அழைப்பதை தவிர்ப்போம். அல்லாஹ் என்ற திருநாமம் வேறு எந்த இணை பெயராலும் துணை பெயராலும் அழைக்கப்படக் கூடாது என்று இந்த நல்ல நாளில் சபதம் ஏற்போம்.
அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் கபீரா வல் ஹம்து லில்லாஹி கதீரா.சுபுஹானல்லாஹி புக்ரதன் வ அஸீலா....
செய்தி: ஹஜ் பெருநாள் 1434: சென்னையில் காயல்பட்டினம் - சென்னை வழிகாட்டு மையம் (KCGC) ஏற்பாட்டில் ஹஜ் பெருநாள் ஒன்றுகூடல்! திரளானோர் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...தமிழ் மணக்கும் சோலை எல்லாம்,, posted bymackie noohuthambi (colombo)[18 October 2013] IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 30845
தமிழ் மணக்கும் சோலை எல்லாம் தேடினேன் உன்னை சான்றோர் தம் அவை எல்லாம் அலையவிட்டேன் கண்ணை எங்கு சென்றாலும் காயலர்கள் கூடியிருக்கும் கூட்டமாக அது இருந்ததை கண்டு மனம் குளிர்ந்தேன். பெருநாள் வந்ததும் வந்தது, நமதூர் இனைய தளங்கள் நிலைப்படங்களாக உலகம் முழுவதும் உள்ள காயலர்களை பல கோணங்களில் படம் பிடித்து காட்டுகிறார்கள்.
ஆம்ஸ்ட்ராங் நிலவில் முதல் மனிதனாக கால் எடுத்து வைத்தோம் என்ற பெருமையுடன் உள்ளே சென்றானாம். அங்கு மஞ்ச வாடா, கஞ்சி என்று ஒருவன் கூறி விற்றுக் கொண்டு சென்றானாம், அருகில் போய் விசாரித்தபோது அது ஒரு காயல்பட்டினத்து ஆள் என்று கேட்டு தெரிந்ததும் அசந்து விட்டானாம். கற்பனையாக சொல்லப்பட்ட கதை என்றாலும் அதை உண்மைபடுத்தும் விதமாக இந்த திருநாள் அமைந்திருப்பது மனதுக்கு ரம்மியமாக இருக்கிறது.
என்னதான் வேற்றுமைகள் ஊரில் பேசிக் கொண்டாலும் அது இருந்த இடம் தெரியாமல் போய்விடுகிறது வெளிநாடுகளில்.ஆயிரம் உண்டிங்கு ஜாதி எனில் அன்னியர் இங்கு வந்து புகல் என்ன நீதி. வாழ்க காயலர் பண்பாடு.
Re:...பெருநாள் வாழ்த்துக்கள் posted bymackie noohuthambi (colombo)[18 October 2013] IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 30843
இலங்கையில் வாழ்வது ஒரு சுகம். அதுவும் நம்மவர்களுடன் கலந்து வாழ்வது இன்னொரு சுகம். பெருநாளில் உறவுகள் இல்லாமல் ஊர் நண்பர்களையே உறவாக நினைத்து பார்த்து மகிழ்ந்து அவர்களுடன் உறவாடி உணவருந்தி வாழ்வது இன்னும் சுகம்.
"நேற்றிரவு நல்ல சுகமா, இன்றிரவு இன்னும் சுகமா சொர்க்கமே சுகமா, சுகமே சுகமா" என்ற வைரமுத்துவின் வைர வரிகள் நினைவுக்கு வருகின்றன.
விருந்தளித்து கௌரவித்தவர்களுக்கு நன்றி.இந்த நாள் இனிய நாள்.
செல் விருந்து ஓம்பி வரு விருந்து பார்த்திருப்போர் நல் விருந்து வானத்தவர்க்கு என்று வள்ளுவம் சொல்கிறது. இது போல் என்றும் நாம் ஒற்றுமையாகவும் சந்தோஷமாகவும் வாழ அல்லாஹ் நல்லருள் புரிவானாக. ஆமீன்.
Re:...விளையாட்டாக கூட பொய் சொல்லாதீர்கள் posted bymackie noohuthambi (colombo)[15 October 2013] IP: 124.*.*.* Sri Lanka | Comment Reference Number: 30789
தலைப்பை படித்ததும் அடிவயிற்றில் அமிலம் சுரந்தது. பெருநாள் தினத்தில் அல்லது அரபா தினத்தில் இப்படி ஒரு சோகமா என்று உள்ளம் அதிர்ந்தது. படிக்க படிக்க மூச்சு முட்டியது. இறுதியில் இது நிஜமல்ல கதை என்று நீங்கள் சொன்ன போது உங்கள் மீது இருந்த நம்பக தன்மை பொசுங்கி சாம்பலாகியது.
விளையாட்டாக கூட சிறுவர்களை திருப்தி படுத்துவதற்காக கூட பொய் சொல்லாதவர்களுக்கு சொர்க்கத்தில் ஒரு மாளிகை கட்டி தர நான் உத்தரவாதம் தருகிறேன் என்று நபிகள் நாயகம் அவர்கள் சொல்வதாக அபூ தாவூதிலே ஒரு செய்தி வருகிறது.
இத்தனை கோர விபத்துக்கள் நாட்டில் நடப்பது என்பது உண்மைதான். நாம் கவனமாக இருக்க வேண்டும் என்பதும் உண்மைதான். ஆட்டோவில் இதனை பேரை ஏற்றிக்கொண்டு செல்வது சரி இல்லை என்பதும் உண்மைதான். இதைப்பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதும் உண்மைதான். எதையும் மறுப்பதற்கில்லை. ஆனால் நீங்கள் அந்த எச்சரிக்கையை விடுவதற்கு எடுத்தாண்டு இருக்கும் முறை, தேர்ந்தெடுத்து இருக்கும் புனித தினங்கள் யார் மனதிலும் ஒரு பதட்டத்தை ஏற்படுத்தியே இருக்கும். இந்த நிலைமைகள் ஏற்படாமல் அல்லாஹ் காப்பாற்றுவானாக.
சீரிய சிந்தனை உடைய மஹ்மூத் அவர்களுக்கு இப்படி ஒரு கற்பனை கதை எழுத எப்படி மனம் வந்தது. திகில் கதை எழுதும் ஹிட்ச்காக் கூட உங்களிடம் தோற்றுப்போவார். ஆனால் ஓரிறை நம்பிக்கை உள்ளவர்கள் நபி வழி நடப்பவர்கள் அதில் உடன்பட முடியாது என்பது எனது தாழ்மையான கருத்து. மாமா அவர்கள் என்னை மன்னிக்க வேண்டும்.
எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும் என்பதன்றி வேறொன்று அறியேன் பரா பரனே....
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross