இறைவனின் பயம் ... posted byN.S.E.மஹ்மூது (காயல்பட்டணம்)[25 July 2017] IP: 117.*.*.* India | Comment Reference Number: 45689
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
தெருக்களின் திருப்பங்களில் தீயணைப்பு வாகனம் செல்ல திண்டாடுவது ஒருபக்கமிருக்க - தெருக்களில் பெரிய வாகனங்கள் செல்லவே மிகவும் கஷ்டமாக இருக்கிறது.
நம் மக்களிலே பலரும், வீடுகள் கட்டும்பொழுது தெருக்களை ஆக்கிரமித்து இருக்கின்றனர் – இன்னும் ஆக்கிரமித்து வருகின்றனர். ஆக்கிரமிப்பதிலே ஒவ்வொருவரும் ஆனந்தபடுகின்றனரே தவிர – இறைவனுக்கு பயப்படுகிறதாக தெரியவில்லை.
------------------------------------
ஆக்கிரமிப்பவர்கள் அனைவருமே ஹலால் – ஹராம் பார்க்காது பணத்தை சேர்த்தவர்களே! உண்மையாக , நேர்மையாக பணம் சம்பாதித்திருந்தால் ஆக்கிரமிப்பது இருக்காது – அவர்களிடம் இறைவனின் பயம் இருக்கும்.
ஒருவர் வீடு கட்டுகிறபோது பொதுபாதையிலிருந்து ஓர் அடி எடுத்தால் அடுத்தவர் வீடு கட்டுகிறபோது இரண்டு அடி எடுக்கிறார் - குறைந்தது ஒன்றரை அடி எடுக்கிறார் – அப்படி எடுக்காதிருந்தால் அது அவருக்கு கெளரவ குறைச்சல் – இதுதான் இன்றைய மக்களின் நிலை.
அல்லாஹ் நம் மக்கள் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக ஆமீன். வஸ்ஸலாம்.
செய்தி: காயல்பட்டினம் கடற்கரையோரம் கட்டப்பட்டு வரும் வணக்கஸ்தலம்: தமிழக முதல்வர், மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் நகராட்சி ஆணையர் ஆகியோர் கவனத்திற்கு நடப்பது என்ன? குழுமம் எடுத்துசென்றுள்ளது! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
சகோதரத்துவத்தை வலுப்படுத்த வேண்டுகிறேன் posted byN.S.E.மஹ்மூது (சென்னை)[13 March 2017] IP: 182.*.*.* India | Comment Reference Number: 45348
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
வணக்க வழிபாடுகள் நடைபெறக்கூடிய இடங்களை அமைப்பதற்கு முன்பு அந்த இடம் எந்த ஒரு பிரச்சனையையும் , வில்லங்கத்தைம், ஏற்படுத்தாத - மக்களுடைய அன்பை பரிமாரிக்கொள்ளக்கூடிய இடமாக தேர்ந்தெடுத்து - முறையான அனுமதியை அரசு நிர்வாகத்திடமிருந்து பெற்று கட்ட வேண்டும்.
அதல்லாது திடுதிப்பென ஓர் இடத்தை தேர்ந்தெடுத்து, கட்டிடம் கட்டி, அதை வழிபாட்டு தலமாக்கிக்கொண்டால் அது ஒற்றுமையான வாழ்வுக்கு வழி வகுக்காது – அந்த வழிபாட்டு தலத்தினுடைய புனிதமும் கேலிக்கூத்தாகிவிடும்.
எனவே அந்த கட்டிடத்தை கட்டியவர்கள், அதை கட்ட தூண்டியவர்கள் உண்மையை உணர்ந்து செயளாற்றவும் – நம்மக்களுக்குள் சகோதரத்துவத்தை வழுப்படுத்தவும் வேண்டுகிறேன்.
---------------------------------------
இது விசயமாக, நடப்பது என்ன? குழுமம், அரசு துறைகள் மூலம் கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, சட்டத்திற்கு புறம்பான அனைத்து கட்டுமானங்களையும் அப்புறப்படுத்த கோரியிருப்பது முறையான, பாராட்டப்பட வேண்டிய நடவடிக்கையாகும்.
இதற்கு இறைவனின் துணை நிச்சயம் கிடைக்கும்.
வஸ்ஸலாம்.
செய்தி: காயல்பட்டினம் இரண்டாம் குடிநீர் திட்டம்: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நெல்லையில் இன்று துவக்கி வைத்தார்! பொன்னன்குறிச்சியில் நடந்த நிகழ்ச்சியில் நகர பொதுமக்கள் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
குடிநீர் கட்டணம் நிலுவை உள்ளவர்களுக்கு புதிய இணைப்புகள் கொடுக்க வேண்டாம். posted byN.S.E.மஹ்மூது (சென்னை)[09 March 2017] IP: 106.*.*.* India | Comment Reference Number: 45333
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
இத்திட்டப்படி, வீடுகளில் உள்ள பழைய இணைப்புகள் அகற்றப்பட்டு, புதிய இணைப்புகள் மூலமாகக் குடிநீர் வழங்கப்பட வேண்டுமா!!!???. - அப்படியானால் – அது நிறைவு அடைய ஒரு மகாமகம் ஆகுமே!
-------------------------------------
ஒரு வேளை பழைய இணைப்புகளை அகற்றிவிட்டு புதிய இணைப்புகள் கொடுக்கப்பட வேண்டும் என்று காண்ட்ராக்டில் இருந்தால் , அதன்படி அவர்கள் செயல்படுத்தும்போது அவற்றை, ”நேர்மையான பொதுமக்கள்” உஷாராக இருந்து கண்கானிக்க வேண்டும் - கள்ளத்தனமான இணைப்புகள் கொடுக்கப்படுவதை தடுக்க வேண்டும்.
-------------------------------------
நம் மக்கள்களிலேயே பல பிரிவுகளாக இருந்து, ஒருவருக்கொருவர் அவசியமற்ற கருத்துக்களை பதிவதில் எவரும் எவருக்கும் சளைத்தவரில்லை என்று மார்தட்டுவதை விட்டுவிட்டு , பொதுவான விசயங்களில், வீரியத்தை காட்டுவதைவிட காரியத்தை சாதிப்பதில் நேரத்தை செலவழித்தால் பயனுள்ளதாக இருக்கும்.
இதுதான் நல்ல சந்தர்ப்பம், இதைப் பயன்படுத்தி, இதற்கு முன்பு கொடுக்கப்பட்ட அத்தனை கள்ளத்தனமான குடிநீர் இணைப்புகளையும் அகற்றுவதற்கு – இந்த சந்தர்ப்பத்தை தவரவிட்டால் பிரிதொரு சந்தர்ப்பம் கிடைப்பது அரிது.
ஆகவே, எல்லாத்தரப்பினறும் ஒன்றாக செயல்பட்டு முறையின்றி கொடுக்கப்பட்ட குடிநீர் இணைப்புகளை அகற்றுங்கள் – முறையாக குடிநீர் இணைப்புகள் பெற்றவர்களுக்கு தடையின்றி குடிநீர் கிடைக்க வழி வகுங்கள்.
---------------------------------------
நகராட்சி அதிகாரிகளே!
முறையாக குடிநீர் இணைப்பு பெற்றவர்களுக்கே! புதிய இணைப்புகளை கொடுங்கள்.
மேலும் குடிநீர் கட்டணம் நிலுவை உள்ளவர்களுக்கு புதிய இணைப்புகள் கொடுக்க வேண்டாம்.
நிலுவையில் உள்ள கட்டணத்தை செலுத்தி, அந்த ரஷீது வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே, புதிய இணைப்பு கொடுக்கப்படும் என்பதை மக்களுக்கு முன் அறிவிப்பு செய்து, இணைப்புகளை கொடுக்க தொடங்குங்கள்.
அதை பொருட்படுத்தாமல் இருப்பவர்களுக்கு கொடுக்க வேண்டாம் – அது எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் சரி, ஊருக்கு உபதேசம் செய்கிற
என் போன்றவராக இருந்தாலும் சரி.
-------------------------------------
இந்த சந்தர்ப்பத்தை பயபடுத்தி, நீங்கள் ஒழுங்குப்படுத்தினால் நகராட்சிக்கு பல நன்மைகள் ஏற்படும் – முறையின்றி கொடுக்கப்பட்ட இணைப்புகள் இரத்தாகும் – நிலுவையில் உள்ள குடிநீர் கட்டணங்கள் முழுவதும் வசூலாகும்.
நிலுவையில் உள்ள குடிநீர் கட்டணம் ஒரிரு இலட்சங்கள் அல்ல - குறைந்தது 40 (நாற்பது) இலட்சம் ரூபாய்கள்.
எந்த ஒரு மாநகராட்சியிலும் இல்லாத அளவில் நமது நகராட்சியிலே குடிநீர் கட்டணம் பெரிய தொகையாக நிலுவையில் உள்ளது என்பதை நினைவு கூற விரும்புகிறேன்.
----------------------------------------
மக்களே!
குடிநீர் கட்டணம் மட்டும் இவ்வளவு பெரிய தொகை பாக்கியா? இதற்கெல்லாம் காரணம் இவர்தான், அவர்தான் என்றும் அவர்கள் செய்த நிர்வாகத்தின் இலட்சணம் இதுதான் என்றும் முன்னால் தலைவர்களை எல்லாம் குறை கூறிக்கொண்டிருக்க வேண்டாம்.
தலைவர்களும், உறுப்பினர்களும் கட்டணங்களை வசூலிக்கவில்லை – அரசு அலுவலர்கள்தான் கட்டணத்தை வசூலிப்பவர்கள் – அகா, ஓகோ என்று அரசு அலுவலர்களை புகழ்கிறீகளே! வசூல் செய்யப்படாமல் இருந்ததற்கு காரணம் யார்? எந்தை சிந்தியுங்கள்.
அடுத்து தலைவர்களுக்கும், உறுப்பினர்களுக்கும் கட்டணங்கள் வசூல் செய்வதின் நெறிமுறைகளை ஒழுங்குப்படுத்துவதில் பங்குண்டு அவர்கள் எல்லாம் இவ்வளவு காலமாக என்ன செய்து கொடிருந்தார்கள்? என்பதையும் உற்று நோக்கவேண்டும்.
ஒருசில உறுப்பினர்களையும் ஆகா, ஓகோ என்றும் புகழ்கிறீர்கள் – இதுவும் தவிர்க்கப்பட வேண்டும்.
கட்டணங்கள் நிலுவையிருப்பது ஒற்றை இலக்க வருடங்கள் அல்ல இரட்டை இலக்க வருடங்கள். ஆகவே கட்டண பாக்கி இருப்பதற்கு இந்த நிர்வாகம்தான் காரணம் என்றோ! இல்லை அந்த நிர்வாகம்தான் காரணம் என்றோ! யாரையும் குறிப்பிட்டு சொல்வதற்கில்லை - அனைவரும் தான் காரணம் என்பதை மக்கள் உணர வேண்டும்.
“இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்“ posted byN.S.E.மஹ்மூது (சென்னை)[05 March 2017] IP: 42.*.*.* India | Comment Reference Number: 45290
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
“ இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் “
வல்ல அல்லாஹ்! மர்ஹூமா அவர்களின் பிழைகளை மன்னித்து, மேலான சுவனப் பதியில் சேர்த்தருள்வானாக ஆமீன்.
மர்ஹூமா அவர்களை இழந்து தவிக்கும் அவர்கள் குடும்பத்தார்களுக்கு சப்ரன் ஜமீலா என்னும் பொறுமையை கடைபிடிக்க எல்லாம் வல்ல அல்லாஹ்! உதவிடுவானாக ஆமீன். வஸ்ஸலாம்.
செய்தி: உள்ளாட்சித் தேர்தல் 2016: காயல்பட்டினம் நகர்மன்றத்திற்கு, திமுக கூட்டணியில் இ.யூ.முஸ்லிம் லீக் கட்சிக்கு 6 வார்டுகள் ஒதுக்கீடு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byN.S.E.மஹ்மூது (காயல்பட்டணம்)[01 October 2016] IP: 117.*.*.* India | Comment Reference Number: 44736
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
இதுவரை நமதூரில், நகராட்சி தேர்தலில் அரசியல் கட்சிகள் தமது சின்னத்தில் போட்டியிட்டதில்லை , இந்த முறை விரும்பியோ விரும்பாமலோ அரசியல் நுழைந்திருக்கிறது – இது ஒரு கசப்பான முன்னுதாரணம்.
இந்த முறை தந்திரமும் , மந்திரமும் நுழைந்து சூழ்ச்சிகள் பல விதமாக வளம் வருகிறது – எது எப்படி வந்தாலும் அல்லாஹ்வின் நாட்டமின்றி ஓர் அணுவும் அசையாது – சூழ்ச்சியாளர்களுக்கெல்லாம் சூழ்ச்சியாளன் அல்லாஹ்! என்பதை எவரும் மறந்துவிடக்கூடாது.
--------------------------
அல்லாஹ்! நமதூரை அவனுடைய கொடுமையான சோதனையிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்பதே! எமது பிரார்த்தனை – அல்லாஹ் எம் போன்றோர்களின் ஹலாலான பிரார்த்தனைகளை ஏற்றுக்கொள்வானாக!.
நல்லோர்கள் வெற்றிப் பெற்று, நல்லவைகளை செய்ய வல்ல ரஹ்மான் கிருபை செய்வானாக ஆமீன்.
வஸ்ஸலாம்.
செய்தி: வரும் உள்ளாட்சித் தேர்தலில் நகர்மன்றத் தலைவர், உறுப்பினர் பொறுப்புகளுக்குப் போட்டியிடுவதென இ.யூ.முஸ்லிம் லீக் ஊழியர் கூட்டத்தில் தீர்மானம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
கட்சி என்றில்லாமல் சுயேட்சையாக நின்று ... posted byN.S.E.மஹ்மூது (காயல்பட்டணம்)[16 July 2016] IP: 59.*.*.* India | Comment Reference Number: 44258
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
வரும் உள்ளாட்சித் தேர்தலில் நகர்மன்றத் தலைவர் மற்றும் உறுப்பினர் பொறுப்புகளுக்குப் போட்டியிடுவதென தாய் சபையின் காயல்பட்டணம் ஊழியர்கள் கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வந்திருக்கிறீர்கள் – இது வரவேற்கக் கூடிய விசயமாக தெரிய வில்லை.
------------------------------
இன்றைய நாளில் தாய் சபையின் செயல்பாடுகள் அற்புதமாகவும், வேகமும்,விவேகமும் கூடியதாகவும் இருக்கிறது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. நிறைய விசயங்கள் பாராட்டுக்குரியதாகவும், தொலைநோக்கு பார்வையிலும் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது என்பதை காணமுடிகிறது – அல்ஹம்துலில்லாஹ்!.
------------------------------
எவ்வளவுதான் அரசியலில் தொலைநோக்கு பார்வையை செலுத்தி காலத்தின் கட்டாயம் இது என்று இந்த முடிவை எடுக்க நினைத்திருந்தாலும் – நமது ஊர், நமது கலாச்சாரம், நமது பாரம்பரியம் காக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருந்தால் நிச்சயமாக – இந்த முடிவு ஏற்பட்டிருக்காது.
----------------------------
இதுவரை நம் ஊரில் உள்ளாட்சி தேர்தலில் அரசியல் கட்சிகள் போட்டியிட்டதில்லை , இனிமேலும் நம் ஊருக்கு அது வரக்கூடாது என்பதுதான் நல்லது. அரசியல் கட்சிகள் நம் ஊர் உள்ளாட்சி தேர்தலில் களம் இறங்கினால் – நமது கொள்கை, கோட்பாடுகள், குறிக்கோள்கள் அனைத்தும் சீரழிந்து போகும் – தேர்தலில் அல்ல, தேர்தலுக்குப்பின் படிப்படியாக நாசமாகும் என்பதை எச்சரிக்க விரும்புகிறேன்.
----------------------------
இன்று தாய் சபை களத்தில் இறங்கனால் இன்ஷா அல்லாஹ்! வெற்றி பெறும் அதில் சந்தேகமில்லை – ஆனால் எப்போதுமே தாய் சபை நின்று வெற்றி பெற்றிட முடியுமா? கூட்டு, குருமா என்று மற்ற தேர்தலில் நிற்கின்றோமே – அந்த கூட்டுக்கட்சிக்கும் வேறொரு முறை விட்டுக்கொடுக்க வேண்டியது வருமே! – அப்போது என்னவாகும் நமது கலாச்சாரங்கள்!!
------------------------------
சொல்ல வேண்டியது பலதும் உண்டு ஆனால் அவையெல்லாம் எழுத்தில் எழுத முடியாது – ஆகவே! சிந்திக்க, சிந்திக்க சிந்தனையில் சீரான முடிவு கிடைக்கும் என்பதை தங்களது சிந்தனைக்கே விட்டுவிடுகிறேன் – சீரான முடிவை எடுத்து நமது ஊர் மக்களின் சுபிட்சமான வாழ்வுக்கு வழி காட்டுங்கள்.
-----------------------------
அரசியல்தான் வேண்டாம் என்கின்றேனே! தவிர, தாய்சபையினர் நகராட்சிக்கு வரவேண்டாம் என்று சொல்லவில்லை. ஆகவே, தலைவர் மற்றும் உறுப்பினர்கள் என்று 18 வார்டுக்கும் கட்சி என்றில்லாமல் சுயேட்சையாக நின்று போட்டியிட்டு வெற்றி பெற்று நல்லாட்சியை தாருங்கள் – அல்லாஹ்! நம் மக்கள் அனைவருக்கும் ரஹ்மத் செய்வானாக ஆமீன்.
பைக் மோதியதில் முதியவர் மரணம் (இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜியூன்) செய்தியை அறிந்து மனம் மிகவும் வேதனை அடைகிறது. வல்ல அல்லாஹ்! மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து மேலான சுவன பதியை கொடுத்தருள்வானாக ஆமீன்.
----------------------------
இரு சக்கர வாகனம் ஓட்டுகிறவர்கள் பெரும்பாலும் விமானம் ஓட்டுகிறதாகத்தான் நினைப்பு – விமானம் ஓட்டுகிறவர்கள் கூட அவரவர் வான் எல்லைக்குள்தான் ஓட்டுவார்கள் – ஆனால் இருசக்கர ஓட்டிகளோ! எல்லையே இல்லாத நினைப்பில்தான் ஓட்டுகிறார்கள்.
பலரும் பலமுறை எச்சரித்து இருக்கிறோம் அடங்குவதாக தெரியவில்லை – அவர்கள் உயிர் அடங்கும் வரை, அவர்களை அடக்கும் வரை, அவர்களுக்கு அடக்கம் என்பது வராது என்பதாகவே தெரிகிறது.
--------------------------
பைக் கீழே விழுந்தால் அதை தூக்கக்கூட சக்தியில்லாத 10, 11 வயதே உடைய பையன்கள் பைக் ஓட்டுகிறார்கள் அவர்களுக்கு பின்னால் அவர்களுடைய பொறுப்பற்ற தாயோ! சகோதரியோ! ஏதோ ஒரு பெண் உட்கார்ந்து கொண்டு போகிறாள்.
பைக் ஓட்ட அனுமதிக்கப்படாதவர்கள், தாறுமாறாக, திமிராக ஓட்டுபவர்கள் விபத்துக்குள்ளாகி செத்தாலோ! காயமேற்பட்டாலோ! யாரும் அதிகம் கவலை கொள்ளப்போவதில்லை. ஆனால் அப்பாவி பாதசாரிகளை கொல்லுவதும், காயமேற்படுத்துவதும் மேலும் துன்பத்திற்குள்ளாக்குவதும்தான் கவலையை தருகிறது.
----------------------------
இன்று ஒருவர் கொல்லப்பட்டிருக்கிறார் இதன் மூலம் ஏதேனும் இந்த மக்களுக்கு பாடம் ஏற்படுமா? என்றால் ஏற்படாது. அட! நிரந்தரப்பாடம் வேண்டாம் ஏதோ! 4 நாளைக்காவது கொஞ்சம் அமைதியாக, வேகமில்லாமல் ஓட்டுவார்களா? இல்லை, சிறு பையன்களாவது ஓட்டாமல் இருப்பார்களா? என்றால் இருக்காது.
ஏன், காரணம் என்ன, பெரும்பாலானவர்களிடம் நேர்மையான பணம் இல்லை. நேர்மையாக சம்பாதித்த பணமாக இருந்தால் – இது உயிருக்கு ஆபத்து என்பதை மனதில் நிறுத்தி சிறுவர்களுக்கு நிச்சயமாக பைக் வாங்கி கொடுக்க மாட்டார்கள் – சிறுவர்களை பைக் ஓட்டவும் அனுமதிக்க மாட்டார்கள்.
----------------------------
சிறுவர்கள் பைக் ஓட்டுவதற்கு முதல் காரணம் பெற்றோர்களே! எந்த பெற்றோர்களிடம் நேர்மையான பணம் இருக்கிறதோ! அவர்கள் தங்கள் பிள்ளைகளை நேர்மையின்பாலே வளர்ப்பார்கள்!!.
தன்னிடம் கோடிக்கணக்கில் பணம் இருக்கிறது, தான் யாரையும் ஏமாற்றாமல் தொழில் செய்து சம்பாதித்தது என்றாலும் அந்த பணம் ஹலாலாக ஆகிவிடாது – அந்த பணத்திற்கான ஜக்காத் (ஏழை வரியை) கொடுத்திருந்தால்தான் அது நேர்மையான (ஹலாலான) பணம் ஆகும்.
------------------------------
வேண்டுகோள்!
பெரியவர்கள் பைக்கை தாறுமாராக ஓட்டி நாசமாக போகிறது ஒருபக்கமிருக்கட்டும் – தயவு செய்து சிறுவர்களுக்கு பைக் ஓட்டகொடுக்காதீர்கள் – இந்த சோக நிகழ்வு நடந்த பிறகும் உங்கள் சிறுவர்களை பைக் ஓட்ட அனுமதித்தீர்களானால் , அந்த சிறுவர்களை கொலையாளியாகவே! மாற்றுகிறீர்கள் என்று அர்த்தமாகும் – இதன் மூலம் அவர்கள் மட்டுமல்ல, நீங்களும் நரகம் செல்ல நாடுகிறீர்கள் என்பது திண்ணமாகும்.
எனவே! கண்டிப்பாக சிறுவர்களை பைக் ஓட்ட அனுமதிக்காதீர்கள் அதன் மூலம் உங்கள் பிள்ளைகளையும் , பாதசாரிகளையும் கொல்லாதீர்கள்.
விழிப்புணர்வு கிழக்கிலிருந்து உதிப்பதாக உணர்கிறேன் posted byN.S.E.மஹ்மூது ( காயல்பட்டணம்)[02 July 2016] IP: 59.*.*.* India | Comment Reference Number: 44146
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
மாதாந்திர பராமரிப்பு என்று ஒவ்வொரு மாதமும் மின் தடை செய்கிறார்கள் – என்ன அடிப்படையில் மின் தடை செய்கிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது. பராமரிப்புக்காக மின் தடை என்று அறிவிப்பு செய்யும்போது ஒவ்வொரு முறையும் (எல்லா மாதமும்) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றுதான் அறிவிப்பு செய்கிறார்கள்.
காலை 9 மணி என்பது 9.15 / 9.20 என்று தாமதமாக மின் விநியோகத்தை தடை செய்து ஏதோ மக்களுக்கு சலுகை செய்வது போல் நடந்து கொள்வார்கள் ஆனால் பராமரிப்பு முடிந்து சரியாக 5 மணி அல்லது 15 , 20 நிமிடம் தாமதமாகவோ மின் விநியோகம் செய்வார்களா! என்றால் அதுதான் இல்லை. எப்போதுமே 5 மணிக்கு மேல்தான் 5.30 அல்லது 6.00 மணிக்குதான் மின் விநினியோகமிருக்கும்.
மின் தடை 9 மணியிலிருந்து 2 மணி வரை என்று அறிவித்தவர்கள் சரியாக 2 மணிக்கு மின் தடையை நீக்க வேண்டும் – ஏதோ ஒரிருமுறை தவிர்க்க முடியாத காரணத்தால் கால தாமதம் ஏற்படலாம் – அதை குறை சொல்வதற்கில்லை. ஆனால் ஒவ்வொரு முறையும் 5 அல்லது 6 மணிக்குதான் மின் தடையை நீக்குகிறார்கள் என்றால் நிச்சயமாக இது திட்டமிட்ட செயலே!
------------------------------
நேற்று மின் தடை முன் அறிவிப்பு இல்லாதது மற்றும் மிகவும் தாமதமாக இரவு சரியாக 7 மணிக்குதான் மின்சாரம் வந்தது – இதனால் காயல்பட்டணத்து மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் – நோன்பு பிடித்துக்கொண்டு, மின்சாரமில்லாமல் உறங்கவும் முடியவில்லை, ஓதவும் முடியவில்லை.
நோன்பு பிடிக்க, திறக்க தேவையான பொருட்களை ஐஸ் பெட்டியில் வைக்கவும் முடியவில்லை. பெருநாள் நேரம் நெருங்கிவிட்டதால் டெய்லர்கள் துணியை தைப்பதற்கு சிரமப்படுகிறார்கள் – ஒருநாள் மின் தடையினால் பல நூறு துணிகள் தேங்கிவிட்டதாக பிரபல்யமான டெய்லர்கடை அதிபர் சொல்கிறார்.
இன்று வெள்ளிக் கிழமை ஜும்மாவுக்கு போக்கூட துணிகளை அயர்ன் பண்ணமுடியவில்லை. மொத்தத்தில் காயல்பட்டணத்து மக்களின் கொதிப்பை சம்பந்தப்பட்டவர்கள் உணர்வதாக தெரியவில்லை – மின்வாரியம் வேண்டும் என்றே திட்டமிட்டு இந்த தடையை செய்திருந்தால் அதற்கான கூலியை அவர்களுக்கு இறைவன் விரைவில் கொடுப்பான்.
----------------------------
காயல்பட்டணத்து மின் வாரியத்தை பொறுத்தவரை (பிரத்தியேகமான) தனி சட்டங்களுடன் இயங்குகிறது. எப்படி ஜம்மு - காஷ்மீருக்கு இந்தியாவின் மற்ற மாநிலங்களில் உள்ள சட்டங்கள் பொருந்தாதோ! அதுபோல் தமிழ்நாடு மின்வாரியத்தின் 9 மண்டலங்களிலும் பின் பற்றுகிற சட்டம் காயல்பட்டணம் மின் வாரியத்திற்கு பொருந்தாது – ஏன் 9 மண்டலம், தூத்துக்குடி மின் பகிர்மான சட்டம் கூட, காயல்பட்டணம் மின் வாரியத்திற்கு பொருந்தாது. இது தனி அந்தஸ்து பெற்ற வாரியம் என்பது எத்தனை மக்களுக்கு தெரியும்?.
இந்த சட்டத்தை உடைக்க வேண்டுமானால் மக்களின் விழிப்புணர்வு அவசியம் தேவை – அந்த விழிப்புணர்வு கிழக்கிலிருந்து உதிப்பதாக உணர்கிறேன். அது வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்... posted byN.S.E.மஹ்மூது (CHENNAI)[14 May 2016] IP: 117.*.*.* India | Comment Reference Number: 43740
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
“இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்“
வல்ல அல்லாஹ்! மர்ஹூம் அவர்களின் பிழைகளை மன்னித்து, மேலான சுவனப் பதியில் சேர்த்தருள்வானாக ஆமீன்.
மர்ஹூம் அவர்களை இழந்து தவிக்கும் அவர்கள் குடும்பத்தார்களுக்கு சப்ரன் ஜமீலா என்னும் பொறுமையை கடைபிடிக்க எல்லாம் வல்ல அல்லாஹ்! உதவிடுவானாக ஆமீன். வஸ்ஸலாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross