பக்தியால் மட்டுமே.... புற்றுக்கு முற்று வைக்க முடியும். posted bys.s.md meerasahib (riyadh)[16 November 2011] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13425
அஸ்ஸலாமு அலைக்கும். புற்றுக்கு முற்று வைக்க பக்த்தியால் மட்டுமே...... முடியும் என்றடிப்படையில் பிரார்த்தனை நடத்தும் இந்த சபையை மனமார பாராட்டுவதுடன்...... கலந்து கொள்ள முடியாமைக்கு வருந்துகிறேன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் புற்றுநோயில் அவதிப்படும் மக்களுக்கு நல்ல சுகத்தை கொடுத்து, மேலும் நம் அனைவரையும் இந்த கொடிய நோயில் இருந்து பாது காப்பானாக அமீன்.
செய்தி: ‘மலேஷியா வாப்பா‘ என்றழைக்கப்பட்ட ஸூஃபீ ஹஸ்ரத் காலமானார்! குருவித்துறைப்பள்ளியில் நல்லடக்கம்!! திரளானோர் பங்கேற்பு!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
ஹய்ரிஹி வ ஷர்ரிஹி மினல்லாஹி தாலா..... posted bys.s.md meerasahib (riyadh)[05 October 2011] IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9663
அஸ்ஸலாமு அலைக்கும். எங்களின் அப்பாவும், ‘மலேஷியா வாப்பா‘ என்றழைக்கப்பட்ட ஸூஃபீ ஹஸ்ரத் அவர்களின் வபாத் செய்தி அறிந்து கவலையுற்றோம். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். எல்லாம் வல்ல அல்லாஹ்.... للهم اعفر له وارحمه واجعل قبره روضة من رياض الجنة அன்னவர்களின் பிழைகளை மன்னித்து, அவர்களின் கபுரை சுவன பூங்காவாக மாற்றி அருள்வானாக ஆமீன். அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கு ‘ஸப்ரன் ஜமீலா‘ எனும் அழகிய பொறுமையைத் தந்தருள்வானாக, ஆமீன். வஸ்ஸலாம்.
ஏழைகளின் உற்ற நண்பர்... எளிமையின் எடுத்துக்காட்டு. posted bys.s.md meerasahib (riyadh)[17 September 2011] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 8328
அஸ்ஸலாமு அலைக்கும். எங்களது ரியாத் காயல் நற்பணி மன்றத்தின் (அன்றைய ரியாத் காஹிர் பைத்துல்மால்) முன்னாள் துணைத்தலைவர் ஹாஜி என்.டி.ஷேக் அப்துல் காதிர் அவர்களின் மறைவு செய்தி அறிந்து எங்களுக்கு ஆழ்ந்த வருத்தத்தை தந்தது.
அன்பு மாமா அவர்கள் எல்லாவருடையும் நல்லபழகி, முகம் சுளிக்காத தன்மையுடன் அனுசரணைகளும், ஏழைகளின் உற்ற நண்பராகவும், எளிமை வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாகவும் இருந்து.... நமது மனதில் நீங்கா இடம்பிடித்தவர்கள்.
எல்லாம் வல்ல அல்லாஹ்.... للهم اعفر له وارحمه واجعل قبره روضة من رياض الجنة அன்னவர்களின் பிழைகளை மன்னித்து, அவர்களின் கபுரை சுவன பூங்காவாக மாற்றி அருள்வானாக ஆமீன்.
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கு ‘ஸப்ரன் ஜமீலா‘ எனும் அழகிய பொறுமையைத் தந்தருள்வானாக, ஆமீன். வஸ்ஸலாம்.
சாக்கடைகளின் சாக்கடை திட்டம். சாநேக்கியர்களின் சதித்திட்டம். posted bys.s.md meerasahib (riyadh)[03 August 2011] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6630
இங்கு கருத்து கூறும் பல நண்பர்கள் நல்ல அலசி ஆராய்ந்து எழுதி இருக்கிறார்கள். இத்திட்டம் நம் ஊருக்கு தேவை இல்லாத ஒன்று. வெளி நாடுகளில் இத்திட்டம் நல்ல பயனை தருகிறது. ரோட்டின் நடுவே... பெரிய குழாய்கள் பொருத்தப்பட்டு.... ஒவொரு விட்டின் மெயின் கட்டரில் இருந்தும் 8 " குழாய் மூலம் மெயின் கட்டரில் இணைக்கப்படுகிறது. எந்த ஒரு பிரச்சனைகளும் இல்லை.
ஆனால் வெளிநாடுகளின் அமைப்பும் நம் நாட்டின் அமைப்பும் வேறு.... அங்கு முதலில் வீடு கட்டும் முன்பே... குடிதண்ணீர் வசதி, மின் வசதி,கழிவு நீர் வசதிகளை திட்ட மிட்ட பின் தான் வீட்டுக்கே.... பெர்மிசன் வழங்குவார்கள். இதில்தான் முறையான திட்டமிடல் இருக்கிறது. மேலும் எல்லாம் குழாய்கள் முலம்.வெளியில் தெறிவது இல்லை கட்டரின் மூடிகள் கூட ரோட்டோடு ரோடாக தெறிவது இல்லை. மேலும் கழிவு நீர்கள் ஊரின் ஒதுக்கு புரத்தை அடைந்ததும் அந்த கழிவு நீரை மாற்று ரசாயனம் கலந்து உரமாக மாற்றுகிறார்கள் இதில் முழு கவனமும் செலுத்துவதை நாம் காண்கிறோம். இப்படி பார்த்து பறித்து செய்யவேண்டிய காரியம் நம் நாட்டுக்கு சத்தியமே இல்லை. மேலும் குழாய்களே... தொடமாட்டார்கள் ரோட்டு வீட்டின் படிகளை ஒட்டியே.... கால்வாய் வெட்டி விடுவார்கள். சிந்திக்கவே..... கொமட்டுகிறது.
இதை வர விட்டால் ஊரின் மொத்த கண்ட்ரோளையும் நாம் இழப்போம். சாக்கடை நாருதோ.......... இல்லையோ...... அதன் பணியாட்கள் போக்குவரத்தால் தெருவும், ஊரும் நாறிவிடும்.
கட்டைக்கால்கள் கூட்டம் கூட்டமாக மேயதுடங்கும்...
அதை பிடிக்க இரண்டு கால் கூட்டமும் ஊரில் அடியெடுத்து வைக்கும்.
இவைகள் எல்லாம் என் கற்பனை அல்ல..... அமுல் படுத்தின நகரம்களை போய் பாருங்கள். நாகர்கோவிலுக்கு போயி பாருங்கள். கலாட்சார சீரழிவு கொடிகட்டி பறக்கும், தினமும், தினமும் நம் ஊர் ஒவ்வொரு பிரச்சனைகளை சந்திக்கும் வாய்ப்பு அதிகமாகவே.... உள்ளது. இத்திட்டம் காயல் பட்டினத்தின் பெருமையை அழிக்க போட பட்ட திட்டம். நம் ஊர் மற்ற ஊர்களை ஒப்பிட்டு பார்க்கும் போது சுத்தத்தில் எந்த குறைவும் இல்லை. மேலோட்ட குப்பைகளை நம் நகராட்சி நன்கு முயற்ச்சி எடுத்தால் ஓரிரு மாதம்களில் சுத்தமாகிவிடும். இத்திட்டம் வராமல் இருக்க சர்வேயே... அனுமதிக்க கூடாது.
வாழ்த்துக்கள். posted bys.s.md meerasahib (riyadh)[01 August 2011] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6585
அஸ்ஸலாமு அலைக்கும். எனது அன்பு சகோதர,சகோதரிகளுக்கு ரமழான் நல் வாழ்த்துக்கள். அமல்கள் நல்ல புரிந்து, நோன்பு நோற்று இறைவனின் கருணையும்,பொருத்தத்தையும் பெறுவோமாக ஆமீன்.
மனம் ஒரு குரங்கு............... posted bys.s.md meerasahib (riyadh)[30 July 2011] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6510
அஸ்ஸலாமு அலைக்கும். இதில் தந்திருந்த விளக்கம்லாம் சூப்பர்தான்......... நம் ஊர் எல்லா தரப்பு உலமாக்களும் ஒன்று கூடி ஒரு முடிவை எடுங்கள் ஒற்றுமைக்கு உதவுங்கள் ஏகோபித்த முடிவை நம் மக்கள் பின்பற்ற தாயாராக உள்ளனர். வேற்றுமையை தவிக்கவும்.வஸ்ஸலாம்.
கம்பெடுதவன்லாம்.... வேட்டை காரன் போல.... posted bys.s.md meerasahib (riyadh)[28 July 2011] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6467
அஸ்ஸலாமு அலைக்கும். மாஷாஅல்லாஹ் நமது மக்கள் புஹாரி இமாம் அவர்களுக்கே பாடம் எடுக்க ஆரம்பித்து விட்டார்கள்...! என்ன நம் முன்னோர்கள் எல்லாம் மௌலூது ஓதியதாலும் மீலாது கொண்டாடியதாலும் பித்அத் செய்து..... மரண படுக்கையில் நாவில் கலீமா உடனும், நல்ல வசீயதுடனும் மரணித்து விட்டார்கள். இன்றோ... நாம் நபிவழி, குரான் வழி பேணுகிறோம் என்று சொல்லி... தவறான கருத்துக்களை, இமாம்களுக்கு எதிரான கருத்துக்களை நாமும் நடைமுறை படுத்தி, ஏனைய மக்களையும் வழி கெடுக்கிறோம். அன்றோ..... மரணம் கலிமாவில் இருந்தது இன்றோ.... பல மரணம்கள் கோமாவில் இருக்கிறது. என்ன செய்வது 1200௦௦ வருடங்களுக்கு முன் வந்த இமாம்களுக்கு தெரியாதது நமக்கு தெரிந்து விட்டது.
அட்மின் அவர்களே...... ஹக்கைதான் எழுதி உள்ளேன்.... இதையும் நாம் சிந்திக்க வேண்டியது உள்ளது. யாரையும் தனி நபரை குறை கூறவில்லை. என்னையும் சேர்த்துதான் எழுதி இருக்கிறேன்.
செய்தி: ஹிஃப்ழு போட்டியில் வென்ற மாணவர்களுக்கு ஊக்கப்பரிசு! ஹிஃப்ழு முடிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் வரும் ஆண்டு முதல் பரிசுகள்!! சிங்கை கா.ந.மன்றம் அறிவிப்பு!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
சிங்கபூரின் செழிப்புக்கு இதுதான் காரணமோ........! posted bys.s.md meerasahib (riyadh)[26 July 2011] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6419
அஸ்ஸலாமு அலைக்கும். ஹிஃப்ழு போட்டியில் வென்ற மாணவர்களுக்கு ஊக்கப்பரிசு! ஹிஃப்ழு முடிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் வரும் ஆண்டு முதல் பரிசுகள்!! சிங்கை கா.ந.மன்றம் அறிவிப்பு!!!
அல்ஹம்து லில்லாஹ்..... நம்மில் பலரும் எதிர் பார்த்த ஒரு அறிவிப்பை இதோ.......... சிங்கை கா.ந.மன்றம் அறிவித்து விட்டார்கள். ஜஜாகல்லாஹு ஹைர்.
வாரி வழங்கும் இந்த நல மன்றத்தார்... நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் நீண்ட ஆயுளையும்,நோயற்ற நிம்மதியான வாழ்க்கையையும், நிறைந்த செல்வத்தையும்,பரக்கத்தையும் கொடுத்தருள்வானாக ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross