இம்மாதம் சில நாட்கள் ஊர் வந்திருந்தபோது நானும் இந்த இடையூறை அனுபவித்தேன்.
நம் மாநகராட்சி இதற்கொரு ஒழுங்கு முறையை உருவாக்கி மக்களின் சிரமத்தை போக்க வழி செய்தால் மிக நன்று.
அத்துடன் அந்தந்த வார்டு உறுப்பினர்கள் இதையும் உங்கள் கவனத்தில் எடுத்து முறைப்படுத்தினால் மிக மிக நல்லது.
"பாதையில் இடராக கிடக்கும் ஒன்றை அகற்றுவது ஈமானின் கடைசி பகுதி" என்ற நாயகக் கண்மணியின் வார்த்தை இருக்க,
பாதையையே இடராக மாற்றுவது எவ்வகை என்பதை புரிந்தால் நீங்களே உங்களை மாற்றுவீர்கள்.
இரு உள்ளங்கள் இன்பகரமாக வாழ வழி அமைக்கும் இத்திருமனத்திற்காக நமது இல்லங்கள் செய்யும் இந்த செயலினால் பல உள்ளங்கள் பாதிக்கும் என்றால் இது அவசியமா?
செய்தி: காயல்பட்டினம் வந்த பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீனுக்கு இ.யூ.முஸ்லிம் லீக் சார்பில், தொடர்வண்டி நிலையத்தில் வரவேற்பு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
பிறைகொடி உயர வாழ்த்துக்கள்Re:... posted byUmar Rizwan Jamali (Singapore)[25 August 2013] IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 29691
உடை முதற்கொண்டு காயல் மரபுகளுடன் வரவேற்பு அமைந்திருப்பதை பார்க்கும்போது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஒரு அரசியல் கட்சியாக இருந்தாலும் மரபுகள் மீறாத அமைப்பு.
பிறைகொடி உயர வாழ்த்துக்கள்.
சாதனை விழா posted byUmar Rizwan Jamali (Singapore)[10 May 2013] IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 27348
காணும் கை கால்களில் குறையுள்ளவன் ஊனனல்ல - என்றும்
ஈனச்செயலுக்குரியவனே ஊனன்.
மாஷா அல்லாஹ்.
இது போன்ற ஸ்தாபனங்கள் இல்லை என்றால் முடங்குவது உடலால் ஊனமான இந்த பிள்ளைகளின் வாழ்க்கை மாத்திரமல்ல இவர்களை ஈன்ற பெற்றோர்களின் வாழ்வும் தான்.
எனவே நீங்கள் கொண்டாடுவது ஆண்டுவிழா மாத்திரமல்ல, அவர்களின் வாழ்வை படிப்படியாய் முன்னேற்றியதை அறிவிக்கு சாதனை விழா.
துளித்துளியாய் துளிர் விட்டு வளர்ந்த இந்த மரம் தளராமல் இருக்க துணைபுரியும் கடமை அதை துவக்கிய தகைமையாலர்களுக்கு மாத்திரமல்ல, அகம் தூமைபெற்ற அனைவருக்கும் உண்டு.
நாம் யார்?
மீண்டும் உரைக்கிறேன் இது வெறும் ஆண்டு விழா அல்ல; சாதனை விழா.
செய்தி: ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் 2013: காயல்பட்டினம் நகர முதல் மூன்று மதிப்பெண்கள் விபரம்! நகர வெற்றி சதவீதம் 98.90!! 3 பள்ளிகள் 100% வெற்றி!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இந்த அமைப்பிற்கு பரப்புறையோ வால்போஸ்டரோ தேவை இல்லை காரணம் அதிலுள்ள ஒவ்வொருவரும் பரப்புரையாளர்கள் தான் ஒவ்வொரு பள்ளியும் வால்போஸ்டர்கள்தான். அதையெல்லாம் பாராட்டுகிறோம். ஒவ்வொரு அமைப்பிடம் ஏதாவதொரு கவர்ச்சி இருக்கும்.
ஒரு பிரிவார் வால்போஸ்டர்கள் அடித்ததை சரியா தவறா என்பதை விவாதிக்க வரவில்லை. ஆனால்; அதிலுள்ள முக்கிய கருத்துக்கள் ஏற்கனவே விவாதிக்க முனைந்து தோல்வியில் முடிந்தது. அதன் ஏற்பாட்டாளர்களும் அதன் பின் மறு முயற்சியை எடுக்கவில்லை.
இந்த பதிவுகளில் மக்கி நூஹு தம்பி காக்கா சுட்டியதை பாராட்டுகிறேன். உண்மையிலேயே உங்களுக்கு பிரிவினையை களையும் எண்ணம் இருக்கும் என நினைக்கிறேன்.
தயவுசெய்து நீங்கள் அந்த முயற்ச்சியை எடுக்க தயார் என்றால் நானும் உங்களுடன் கை கோர்க்கிறேன்.
செய்தி: நகர்மன்ற நடவடிக்கைகள் குறித்து, ஜமாஅத் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரை நேரில் விசாரிக்க வேண்டும்! புதுப்பள்ளி ஜமாஅத் உறுப்பினர்கள் பள்ளி நிர்வாகத்திடம் மனு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
செய்தி: நகர்மன்ற நடவடிக்கைகளில் தனிநபர் தலையீட்டை ஒழிக்க வேண்டும்! நகராட்சி நிகழ்வுகள் விளக்கப் பொதுக்கூட்டத்தில் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் பேச்சு!! (அசைபடங்களுடன்!!!) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
உங்கள் தன்னலமற்ற சேவைக்குறித்தும் காயல் ஓதட்டும் posted byUmar Rizwan Jamali (Singapore)[30 March 2013] IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 26551
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... வபரக்...
நாளை மறுமையில் இறை சமூகத்தில் "உங்கள் பொருளை எவ்வாறு சம்பாதித்தீர்கள் அதை எவ்வழியில் செலவிட்டீர்கள்" என்ற புள்ளிவிவரங்களை சமர்ப்பிக்காதவரை உங்கள் கால்கள் நகறாது. (நபிமொழி)
கண்ணியத்திற்குரிய காயல் நகர்மன்ற செயல் வீரர்களே!
இந்த உரை உங்களை வேதனைப்படுத்தியிருக்கும் என்பதையும் உங்கள் கண்ணியத்தை கலங்கப்படுத்தியிருக்கும் என்பதையும் அனைவரும் உணர்வர்.
என்றாலும் நாளை மறுமையில் அனைத்து சமூகம் முன்னிலையில் மக்கள் நலனில் குறைவுபடுத்தியவர்கள், மக்கள் பணத்தில் மயக்கம் கண்டவர்கள் அடைகிற இழிவுக்கும் அதனால் கிடைக்கும் வேதனைக்கும் முன்னாள் இது ஒரு அணுவிலும் அணுவலவுதான் என்பதை அறிவுடைய எவரும் மறுக்கமாட்டார்கள்.
மனிதன் என்ற அடிப்படையில் தலைவியுடைய அணுகுமுறையில் வேண்டுமானால் சில தவறுகள் இருந்திருக்கலாம். ஆனால் அவர்களது கொள்கை பாராட்டப்படவேண்டியதே! என்பதில் சந்தேகமில்லை.
நீங்களும் சில சூழல்களால் சிதைக்கப்பட்டிருக்கிறீர்கள்.
நீங்களும் உத்தமர்கள்தான் என்பதை நிரூபிக்கும் நேரம் இது.
எனவே, வேண்டாத வேகத்தையும் வேண்டாதார் வியூகத்தையும் தவிர்த்து விவேகமுடன் களம் இறங்குங்கள்.
பெற்றோர்களுக்கிடையில் பிரச்சனை வருவது வாடிக்கை, அதனால்; பிள்ளைகளை நடுத்தெருவில் விடுவது மகா பாதகம்.
அதை செய்பவர் அந்த குழந்தையின் எதார்த்த தாய் தகப்பராக இருப்பது ஐயமே!
எது எப்படியோ!
நீங்களும் காயளர்கள்தான் என்ற கடமை உணர்வு உங்களிடம் ஓங்கட்டும். பின்பொருநாள் உங்கள் தன்னலமற்ற சேவைக்குறித்தும் காயல் ஓதட்டும்.
செய்தி: நகரில் சேரும் குப்பைகளை கொட்டுவதற்கான நிலம் தொடர்பாக ஐக்கியப் பேரவை கூட்டிய ஆலோசனை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான்ங்கள்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இறையிடம் பிரார்த்தனைகள் பல posted byUmar Rizwan Jamali (Singapore)[01 January 2013] IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 24855
கழிவுகளை நீக்கி நமதூரை பொழிவுரச்செய்ய பாடுபடும் நல்லுள்ளங்களுக்கு மகிழ்வுடன் வாழ்த்துக்கள் பல.
இது போல் நகராட்சியின் பிளவுகளை நீக்கி உள்ளங்களை ஒளிவுரச்செய்ய இறையிடம் பிரார்த்தனைகள் பல.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross