செய்தி: வெள்ளிவிழாவை முன்னிட்டு அல்-அமீன் இளைஞர் நற்பணி மன்றம் வழங்கும் சேவைச்செம்மல் விருது! பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byMohamed Salih (Chennai)[04 March 2013] IP: 115.*.*.* India | Comment Reference Number: 25966
சிறார் கல்வி + பொது சேவைக்காக காயல்பட்டணம் நகராட்சியின் தலைவி P.M.I. ஆபிதா அவர்களை பரிந்துரை செய்கிறேன்.
Re:... posted byS.A.C. Salih (Chennai)[04 November 2012] IP: 101.*.*.* India | Comment Reference Number: 23465
அஜீஸ் காக்கா அவர்களின் வபாத் செய்தி கேள்விப்பட்டு மிகுந்த துயரடைந்தேன். அன்னாரின் குடும்பத்தாருக்கு வல்ல நாயன் அழகிய பொறுமையையும் நீடித்த நல வாழ்வையும் தந்தருள்வானாக ஆமீன்.
அன்னாரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு எனது சலாமினை தெரிவித்து கொள்கிறேன்.
Re:...முள்ளை முள்ளால்... posted byS.A.C. Salih (Kayalpatnam)[04 September 2012] IP: 115.*.*.* India | Comment Reference Number: 21824
நகராட்சி தலைவி அவர்களே ஆளும் கட்சியில் உடனடியாக இணைவதே ராஜதந்திரம். எக்காரணம் கொண்டும் நீங்கள் ராஜினாமா செய்யாதீர்கள்.
முள்ளை முள்ளால் மட்டுமே எடுக்க முடியும். பண முதலைகளை கூண்டில் அடைக்க இது ஒன்றே தீர்வு. விரைந்து செயல்படுங்கள். உங்களின் உண்மையான சேவை தடையின்றி தொடரட்டும்.
Re:... posted byS.A.C. Salih (Kayalpatnam)[25 August 2012] IP: 101.*.*.* India | Comment Reference Number: 21487
பானையில் தண்ணீர் இருந்தால்தான் குவளையில் தண்ணீர் வரும் என்பது சாதாரண அறிவுள்ளவர்களுக்கே தெரியும்.
(காயல்பட்டினத்திற்கு குடிநீர் வழங்கும் மேல ஆத்தூர் நீர்தேக்கத்திற்கு - பாபநாசம் அணையில் இருந்து நீர் அனுப்பப்படுகிறது. பாபநாசம் அணையில் 143 அடி அளவு வரை - நீரினை தேக்கி வைக்கலாம்.
அணையின் இன்றைய (ஆகஸ்ட் 25) நிலவரம் கீழே வழங்கப்பட்டுள்ளது. முந்தைய நாள் நிலவரம் அடைப்புக்குறிக்குள் வழங்கப்பட்டுள்ளது:
அணையில் நீர்மட்டம்: 40.55 அடி (40.90 அடி)
நீர்வரத்து (Inflow): 261 Cusecs (317 Cusecs)
நீர் வெளியேற்றம் (Outflow): 405 Cusecs (407 Cusecs)
ஒரு Cusec என்பது வினாடிக்கு 28.31 லிட்டர். )(நன்றி -kayalpatnam.com)
அரசியல் சுய லாபத்திற்காக கூப்பாடு போடுகிறவர்களை மக்கள் நன்கறிவார்கள்.
செய்தி: டில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்த தமிழ்நாடு எக்ஸ்ப்ரஸ் ரெயிலில் தீ விபத்து! 47 பேர் பலி!! பயணித்த காயலர் குறித்து தகவல் எதிர்பார்ப்பு!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:டில்லியிலிருந்து சென்னை ந... posted byS.A.C. Mohamed Salih (Kayalpatnam)[30 July 2012] IP: 115.*.*.* India | Comment Reference Number: 20305
எனது பால்ய நண்பன் விளக்கு முஹம்மது முஹியதீன் விபத்து நடந்த ரயிலில் விஜயவாடாவில் ஏறி உள்ளான். கேட்கவே நெஞ்சம் பதை பதைக்கிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன் திருநெல்வேலில் இருந்து ஒன்றாக ஊருக்கு வந்தோம். பழகுவதற்கு இனிமையானவன். யா அல்லா ரமளானுடைய பரக்கத்தால் அவனை எந்த விதமான பாதிப்பும் இல்லாமல் மீட்டு தா என்று கண்ணீர் மல்க கேட்கிறேன்.
வல்ல நாயனே அவனுக்கு உயிர் பிச்சை தந்து நல்ல முறையில் ஊர் வந்து சேர உதவி செய் நாயனே.
நெல்லூர் மருத்துவ மனையிலும் என்னுடைய media நண்பர்களிடமும் தொடர்ந்து விசாரித்து வருகிறேன். இதுவரை சரியான தகவல் கிடைக்கவில்லை. நல்ல பதில் கிடைக்க அனைவரும் பிரார்த்தனை செய்யுமாறு வேண்டுகிறேன்.
செய்தி: “நீங்கள் காணும் கனவு உங்களை உறங்க விடக்கூடாது!” -சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை 2012 கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாநிலத்தின் முதன்மாணவி சுஷ்மிதா பேச்சு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:“நீங்கள் காணும் கனவு உங்க... posted byMohamed Salih (Chennai)[08 July 2012] IP: 111.*.*.* India | Comment Reference Number: 19893
மாநிலத்தில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி கலந்து கொண்ட நிகழ்ச்சி அற்புதம் . ஆனால் ஒரு சிறிய வேண்டுகோள் அவருடைய பேச்சு இடம் பெற்றிருந்த காணொளி காட்சியை வெளியிட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். வீடியோ பதிவை பதிக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்
செய்தி: அரசு மகளிர் மேனிலைப்பள்ளியில் 128 மாணவியருக்கு தமிழக அரசின் மிதிவண்டி இலவச வினியோகம்! நகர்மன்றத் தலைவர் வழங்கினார்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:அரசு மகளிர் மேனிலைப்பள்ளி... posted byShaik Mohamed Salih (Chennai)[17 December 2011] IP: 59.*.*.* India | Comment Reference Number: 14709
பள்ளி சிறார்களுக்கு இலவசமாக சீருடை கொடுப்பீர்களா ?
நண்பர் அவர்களே தாங்கள் நடத்துகின்ற ரெடிமேட் கடையிலிருந்துபள்ளி சிறார்களுக்கு இலவசமாக சீருடை கொடுப்பீர்களா? அப்படி என்றால் பேபி சைக்கிள் தலைவி கொடுப்பார்கள்.
அட்மின் அவர்களே இது தனி நபர் தாக்குதல் அல்ல. நட்புடன்தான். கத்திரி போட்டு விடாதீர்கள்.
செய்தி: “முஸ்லிம் நிர்வாகத்தில் பணியாற்றியதை பெருமையாகக் கருதுகிறேன்...!” வழியனுப்பு விழாவில் எல்.கே.மேனிலைப்பள்ளியின் ஓய்வுபெற்ற உடற்கல்வி ஆசிரியர் ஜெபராஜ் உருக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:“முஸ்லிம் நிர்வாகத்தில் ப... posted byShaik Mohamed Salih (Chennai)[13 December 2011] IP: 59.*.*.* India | Comment Reference Number: 14473
மலரும் நினைவுகள்
நாங்கள் 6 ஆம் வகுப்பு படிக்கும்போது தான் நீங்கள் எங்கள் பள்ளியில் சேர்ந்தீர்கள்.முதன் முதலாக எங்கள் வகுப்பைத்தான் வரிசையாக அழைத்து சென்று அப்போதைய பாவலர் பூங்காவில் (தற்போது பேருந்து நிலையம்) அமர வைத்து ஓவ்வருவருடைய பெயரையும் தந்தையின் பெயரையும் கேட்டீர்கள்.
தற்போது மருத்துவராக பணியாற்றி வரும் பிரபாகரன் தனது தந்தையின் பெயரை கூறும்போது ஜனாப் அன்னபழம் என்று கூறியவுடன் பலத்த சிரிப்பொலி எழுந்தது நேற்று நடந்தது போல் இருக்கிறது.
சிலர் ஐக்கிய விளையாட்டு சங்கத்திலிருந்து விசில் அடித்து உங்களை சீண்டியதும், அவர்களையெல்லாம் உங்களுடைய இன்முகத்தால் விரைவிலேயே நண்பர்களாக்கி கொண்டதும் நினைவுக்கு வருகிறது.
நான் தற்போது மக்கள் தொலைகாட்சியின் சகோதர நிறுவனமான தமிழ் ஓசை நாளிதழில் பணியாற்றி வருகிறேன்.எல்லாம் வல்ல இறைவன் தங்களுக்கு மென்மேலும் எல்லா வளங்களும் நலன்களும் தருவானாக என்று பிரார்த்திக்கிறேன்
Re:ஆபிதா இறுதிகட்ட பிரச்சாரம... posted byShaik (Kayalpatnam)[15 October 2011] IP: 115.*.*.* India | Comment Reference Number: 10847
என்னங்க அப்போ முதலில் வந்த அறிக்கைகள் எல்லாம் புதுப்பள்ளி ஜமாத்தினரின் அறிக்கை இல்லையோ? செயலாளர் துணை செயலாளர் பொருளாளர் போன்றவர்களே ஆபிதவிற்காக களத்தில் நின்று வேலை செய்யும்போது, பெரியவர்கள் தங்கள் தனிப்பட்ட கருத்துக்களை ஜமாஅத் பெயரால் வெளி இடுகிறார்கள்.
ஐக்கிய பேரவை பொறுப்பில் இருப்பவர்கள் அதன் சார்பிலேயே வெளி இட்டிருக்கலாமே ஆபிதாவிற்கு தன் சொந்த ஜமாத்தில் கூட ஆதரவில்லை என்ற மாயை உருவாக்க போட்ட தந்திரம் இதோ சுக்கு நூறாக உடைந்து விட்டதே.
தந்திரங்களின் கூடாரம் தான் ஐக்கிய பேரவையோ? மூன்றாவது பொய் அறிக்கை தயார் செய்து கொண்டு இருக்கேன்களோ ? வாய்மையே வெல்லும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross