திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) பொருளாளர் மு.க.ஸ்டாலினின் 61ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அக்கட்சியின் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், கொடியேற்று விழா, 28.04.2013 ஞாயிற்றுக்கிழமை மாலை 05.30 மணியளவில், காயல்பட்டினம் - திருச்செந்தூர் சாலையில், கே.எம்.டி. மருத்துவமனை எதிரில் நடைபெற்றது.
கட்சியின் நகர செயலாளர் மு.த.ஜெய்னுத்தீன் விழாவிற்குத் தலைமை தாங்கி, தலைமையுரையாற்றினார்.
திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, கட்சிக் கொடியை ஏற்றி வைத்து அனைவருக்கும் இனிப்பு வழங்கியதோடு, சிறப்புரையாற்றினார்.
நகர திமுக முன்னாள் செயலாளர் எம்.என்.சொளுக்கு, நகர இளைஞரணி செயலாளர் அப்துல் காதர், நகர அவைத் தலைவர் கிதுரு முஹம்மத், பன்னீர் செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்த இந்நிகழ்ச்சியில், கட்சி நிர்வாகிகளான ஏ.பி.ரமேஷ், கணபதி, உதயசூரியன், சேகரன், தங்கம், கஸ்ஸாலி, மந்திரமூர்த்தி, வழக்குரைஞர் பால சுப்பிரமணியம், இளங்கோ, சாதிக், உமர், ‘அல்யவ்ம்’ முஹ்யித்தீன், மகராஜன், ஜலீல், முஸம்மில், முஹம்மத் நெய்னா, வேல் ராமகிருஷ்ணன், காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர்களான ஏ.கே.முஹம்மத் முகைதீன், எம்.எம்.டி.பீவி ஃபாத்திமா என்ற பெத்தாதாய், ஏ.ஏ.அபூபக்கர் அஜ்வாத் உட்பட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
தகவல்:
ஹாஃபிழ் M.M.முஜாஹித் அலீ
படங்கள்:
வீனஸ் ஸ்டூடியோ |