மே 01 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தொழிலாளர் அமைப்பான சுதந்திர தொழிலாளர் யூனியன் (எஸ்.டி.யு.) சார்பில், கொடியேற்றும் நிகழ்ச்சி, மே 01 அன்று (நேற்று) மாலை 05.00 மணியளவில், காயல்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.
முஸ்லிம் லீக் நகர தலைவர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் தலைமை தாங்கினார். கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன், சுதந்திர தொழிலாளர் யூனியன் மாவட்ட அமைப்பாளர் ஹாஜி ஆர்.பி.ஷம்சுத்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, சுதந்திர தொழிலாளர் யூனியன் கொடியை ஏற்றினார்.
பின்னர் சிறப்புரையாற்றிய அவர், தொழிலாளர் நலன் காத்திட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள், அதன் மூலம் தொழிலாளர் சமூகத்திற்குக் கிடைத்த பயன்கள் குறித்து அவர் தனதுரையில் விளக்கிப் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ், மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப், மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ், நகர நிர்வாகிகளான ஹாஜி பி.எம்.எஸ்.அமானுல்லாஹ், எம்.எல்.முஹம்மத் முஹ்யித்தீன், எம்.இசட்.சித்தீக், நிஜாம், ‘கண்மணி’ ஸாலிஹ் உட்பட பலர் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. |