காயல்பட்டினம் தனியார் நிறுவனமொன்றின் மூலம் உம்றா பயணம் மேற்கொள்ளவிருக்கும் பயணியருக்கான பயிற்சி வகுப்பு, காயல்பட்டினம் முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரி விடுதி வளாகத்தில், 30.04.2013 செவ்வாய்க்கிழமை இரவு 07.00 மணியளவில் நடைபெற்றது.
காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரியின் திருக்குர்ஆன் மக்தப் பிரிவு ஆசிரியர் ஹாஃபிழ் சொளுக்கு முஹ்யித்தீன் அப்துல் காதிர் தவ்ஹீத் கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் ஆசிரியர் ஹாஃபிழ் எம்.ஐ.கே.செய்யித் அபூதாஹிர் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, உம்றா - ஜியாரத் கிரியைகள் தொடர்பான விளக்கங்களை உள்ளடக்கி, காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளியின் கத்தீபும், முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரிகளின் நிறுவனருமான மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ உரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில், காயல்பட்டினம் தனியார் ஹஜ் உம்றா நிறுவனம் மூலமாக சில நாட்களில் உம்றா பயணம் மேற்கொள்ளவுள்ள ஆண்-பெண் பயணியர் திரளாகக் கலந்துகொண்டனர். அவர்களுக்கு, அந்நிறுவனத்தின் சார்பில் பயணப் பை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, எஸ்.எஸ்.செய்யித் இப்றாஹீம், கூபா என்.டி.ஷெய்கு மொகுதூம் மற்றும் பலர் செய்திருந்தனர்.
படங்கள்:
ஹாஜி S.A.முஹம்மத் இஸ்மாஈல் பிலாலீ |