திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில், காயல்பட்டினத்தைச் சேர்ந்த 8 மாணவர்கள் இளங்கலை பட்டம் பெற்றுள்ளனர். விபரம் வருமாறு:-
திருச்சி ஜமால் முஹம்மது கலை மற்றும் அறிவியல் கல்லூரி பட்டமளிப்பு விழா, இம்மாதம் 14ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்றது.
இவ்விழாவில், காயல்பட்டினம்
குறுக்கத் தெருவைச் சேர்ந்த மக்தூம் முஹம்மத் என்பவரின் மகன் எம்.எம்.முஹம்மத் அப்துல் காதிர். (Bachelor of Business Administration - BBA)
கோமான் நடுத்தெருவைச் சேர்ந்த தர்வேஷ் என்பவரின் மகன் ஜாஹித் ஹசன் (Bachelor of Business Administration - BBA)
சித்தன் தெருவைச் சேர்ந்த ஜுனைத் என்பவரின் மகன் எம்.ஜெ.முஹம்மத் தம்பி சதாம் ஹுசைன் (Bachelor of Business Administration - BBA)
பரிமார் தெருவைச் சேர்ந்த முத்து வாப்பா என்பவரின் மகன் எம்.டபிள்யு.அப்துல் காதிர் (Bachelor of Commerce - B.Com)
தீவுத்தெருவைச் சேர்ந்த ‘முத்துச்சுடர்’ ஹாஜி என்.டி.ஜமால் முஹம்மத் என்பவரின் மகன் ஜெ.எம்.முஹம்மத் நூஹ் தம்பி (Bachelor of Computer Applications - BCA)
தீவுத்தெருவைச் சேர்ந்தவரும், கற்புடையார் பள்ளி வட்டம் - கடற்கரை முஹ்யித்தீன் பள்ளியின் செயலாளருமான ‘முத்துச்சுடர்’ ஹாஜி என்.டி.இஸ்ஹாக் லெப்பை மகன் ஐ.எல்.முஹம்மத் நூஹ் தம்பி (Bachelor of Business Administration - BBA)
அம்பல மரைக்காயர் தெருவைச் சேர்ந்த வி.எம்.என்.அபூபக்கர் ஸித்தீக் என்பவரின் மகன் வி.ஏ.எஸ்.ஸாஹிப் தம்பி (Bachelor of Business Administration - BBA)
குத்துக்கல் தெருவைச் சேர்ந்த வி.எம்.ஷேக் அப்துல் காதிர் என்பவரின் மகன் எஸ்.ஏ.கே.வாவு முஹம்மத் (Bachelor of Business Administration - BBA)
ஆகிய மாணவர்கள் உட்பட ஏராளமான மாணவ-மாணவியர் இளங்கலை மற்றும் முதுகலை பட்டச் சான்றிதழ்களைப் பெற்றனர்.
கல்லூரி முதல்வர் காதிர் முஹ்யித்தீன் முன்னிலையில் நடைபெற்ற இப்பட்டமளிப்பு விழாவில், திருச்சி மண்டல பாஸ்போர்ட் அதிகாரி பாலமுருகன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, மாணவர்களுக்கு பட்டச் சான்றிதழ்களை வழங்கினார்.
தகவல் & படங்கள்:
முஹம்மத் நூஹ் தம்பி
மற்றும்
அப்துல் காதிர் |