மே 01 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் காயல்பட்டினம் நகர கிளை சார்பில் கொடியேற்ற நிகழ்ச்சி, நேற்று மாலை 05.30 மணியளவில், காயல்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.
கட்சியின் நகர கிளை செயலாளர் ஹாஜி ஹஸன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கட்சியின் ஆறுமுகநேரி நகர குழு உறுப்பினரும், ஏ.ஐ.டி.யு.சி. டி.சி.டபிள்யு. தொழிற்சங்க தலைவருமான அசோகன் சிறப்பழைப்பாளராகக் கலந்துகொண்டு, கட்சிக் கொடியேற்றினார்.
கட்சியின் நகர மகளிரணி தலைவர் சரோஜா மால், நகர பொருளாளர் ஷேக் அப்துல் காதிர், ஆறுமுகநேரி நகர செயலாளர் ஆனந்தவேல், திருச்செந்தூர் நகர துணைச் செயலாளர் ஆண்டி, கிராமிய பாடகர் சிவபெருமாள், சண்முகவேல் உட்பட திரளானோர் பங்கேற்றனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. |